இன்றைய கூகுள் டூடுலில் பிரபல பாடகி கவுர் ஜான்!!

இந்தியாவின் பிரபல பாடகி கவுர் ஜானின் 145வது பிறந்தநாளை கூகுள் நிறுவனம் டூடுலில் வைத்து கொண்டாடியது!!

Last Updated : Jun 26, 2018, 03:16 PM IST
இன்றைய கூகுள் டூடுலில் பிரபல பாடகி கவுர் ஜான்!! title=

இந்தியாவின் பிரபல பாடகி கவுர் ஜானின் 145வது பிறந்தநாளை கூகுள் நிறுவனம் டூடுலில் வைத்து கொண்டாடியது!!

உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்த கவுர் ஜான் 1873 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி பிறந்தார். இவர் முதல் முறையாக 78 rpm இசையை ரேடியோவில் பதிவு செய்யப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றவா். இவா் பாடிய பாடலை கிராமபோன் நிறுவனம் பதிவு செய்து வெளியிட்டது. 

அவரது தந்தை ஆர்மீனிய மற்றும் அவரது தாயார் விக்டோரியா ஹெமிங்ஸ் பிறந்த ஒரு இந்தியராக இருந்தார். அவரது பெற்றோரின் விவாகரத்துக்குப் பிறகு விக்டோரியா பெனாரஸ் ஒரு முஸ்லீம் பிரபுவைக் கொண்டு சென்றார், பின்னர் எட்டு வயதான ஏஞ்சலினா அங்கு தன் தாயுடன் வந்தார். அதன் பின்பே ஏன்ஜலினாவின் பெயர் கவுர் ஜான் என்று மாற்றம் பெற்றது. 

பின்னா் கொல்கத்தா சென்ற கவுர் ஜான் இந்துஸ்தானி இசையை கற்றுக் கொண்டு அதில் புகழ் பெற்று விழங்கினார். தொடா்ந்து பல வெற்றிப் பாடல்களை வழங்கி வந்த கவுர் ஜான் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் நாள் உடல்நலகுறைவால் காலமானார். அவரது 145 வது பிறந்த நாள் விழாவை கூகுள் நிறுவனம் டூடுலில் வெளியிட்டு மரியாதை செலுத்தியுள்ளது.

 

Trending News