Aadhaar Card-ல் பிரச்சனையா? இந்த எண்ணுக்கு கால் செய்து தீர்வு காணுங்கள்

இந்த 1947 எண்ணானது 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாட்களும் IVRS பயன்முறையில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் கட்டணமில்லா எண்ணாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 30, 2021, 01:55 PM IST
  • UIDAI 1947 என்ற இந்த எண்ணை வெளியிட்டுள்ளது.
  • இந்த எண் 12 வெவ்வேறு மொழிகளில் உங்களுக்கு உதவும்.
  • காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை மையப் பிரதிநிதிகளின் உதவியும் கிடைக்கும்.
Aadhaar Card-ல் பிரச்சனையா? இந்த எண்ணுக்கு கால் செய்து தீர்வு காணுங்கள் title=

புதுடெல்லி: உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் சிக்கல் இருந்தால், இப்போது ஒரு தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு அதைத் தீர்த்துக்கொள்ளலாம். 

ஆதார் அட்டை (Aadhaar Card) வைத்திருப்பவர்கள் தங்கள் கார்டுகளில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதை நீங்கள் இப்போது 1947 என்ற எண்ணை டயல் செய்து தீர்த்துக்கொள்ளலாம். இந்த எண்ணைப் பற்றி யுஐடிஏஐ (UIDAI) ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. இந்த எண் 12 வெவ்வேறு மொழிகளில் உங்களுக்கு உதவும்.

ஆதார் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் இனி ஒரே தொலைபேசி அழைப்பின் மூலம் கையாளப்படும் என்று UIDAI ட்வீட் செய்துள்ளது. ஆதார் ஹெல்ப்லைன் 1947, இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் உருது ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. (#Dial1947ForAadhaar) உங்களுக்கு விருப்பமான மொழியில் தொடர்புகொள்வதற்கான வசதி இதில் உங்களுக்கு கிடைக்கும்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 1947 என்ற இந்த எண்ணை வெளியிட்டுள்ளது. இந்த எண் நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டைக் குறிக்கும் என்பதால் இந்த எண்ணை நினைவில் கொள்வதும் மிகவும் எளிதானது.

இந்த 1947 எண்ணானது 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாட்களும் IVRS பயன்முறையில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் கட்டணமில்லா எண்ணாகும். இந்த நிறுவனத்தில் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்பு மையப் பிரதிநிதிகளும் உள்ளனர். (திங்கள் முதல் சனி வரை). ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதிநிதிகளை அணுகலாம்.

ஆதார் (Aadhaar) பதிவு மையங்கள், பதிவு செய்த பின் ஆதார் எண் நிலை மற்றும் பிற ஆதார் தொடர்பான தகவல்கள் இந்த உதவி எண் மூலம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, யாரேனும் ஒருவரின் ஆதார் அட்டை தவறிவிட்டாலோ அல்லது இன்னும் மின்னஞ்சலில் வரவில்லை என்றாலோ, இந்தச் சேவையின் மூலம் தகவல்களைப் பெறலாம்.

ALSO READ: ஆதார் அட்டையில் உள்ள போட்டோ நன்றாக இல்லையா; நொடியில் மாற்றலாம்..!! 

இந்த வழியில் PVC ஆதாரை உருவாக்கவும்

1. புதிய PVC ஆதார் கார்டைப் பெற, முதலில் UIDAI இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

2. 'எனது ஆதார்' பிரிவில் 'ஆர்டர் ஆதார் பிவிசி கார்டு' என்பதைக் கிளிக் செய்யவும்.

3. அதன் பிறகு, உங்கள் ஆதார் எண் (12 இலக்கங்கள்), விர்ச்சுவல் ஐடி (16 இலக்கங்கள்) அல்லது ஆதார் பதிவு ஐடி (28 இலக்கங்கள்) (EID) ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

4. இப்போது நீங்கள் பாதுகாப்புக் குறியீடு அல்லது கேப்ட்சாவை உள்ளிட்டு OTP ஐப் பெற Send OTP என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

5. அதன் பிறகு, பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.

6. நீங்கள் இப்போது ஆதார் பிவிசி கார்டின் ஒரு காட்சியைக் காண்பீர்கள்.

7. அதன் பிறகு, கீழே பட்டியலிடப்பட்டுள்ள கட்டண விருப்பங்களில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

8. அதன் பிறகு, பணம் செலுத்தும் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் ரூ.50 கட்டணமாக டெபாசிட் செய்ய வேண்டும்.

9. நீங்கள் பணம் செலுத்தியவுடன் உங்கள் ஆதார் PVC கார்டுக்கான ஆர்டர் செயல்முறை நிறைவடையும்.

ALSO READ: Aadhaar விதிகளில் மாற்றம்: மாற்றத்தால் மக்களுக்கு லாபம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News