வரி செலுத்துவோருக்கு நல்ல செய்தி: அடிப்படை வருமான வரிச் சலுகை ரூ.5 லட்சமாக அதிகரிக்குமா?

Budget 2023: தொழில்துறை அமைப்பான அசோசெம் தனது பட்ஜெட்டுக்கு முந்தைய பரிந்துரைகளில் அரசாங்கத்திடம் ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 17, 2022, 09:02 AM IST
  • வருமான வரி விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று அசோசெம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
  • இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால், வரி செலுத்துவோர் அதிக பயனடைவார்கள்.
  • அசோசெம், வருமான வரி விலக்கு வரம்பை குறைந்தபட்சம் ரூ. 5 லட்சமாக அதிகரிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
வரி செலுத்துவோருக்கு நல்ல செய்தி: அடிப்படை வருமான வரிச் சலுகை ரூ.5 லட்சமாக அதிகரிக்குமா?  title=

பட்ஜெட் 2023: புதிய ஆண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ளது. புத்தாண்டு பிறந்தவுடன் மத்திய அரசு நிதிநிலை அறிக்கை அதாவது பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்யும். பல்வேறு துறைகளும் வணிகங்களும் பட்ஜெட்டில் சிறந்த அறிவிப்புகளை கோருகின்றன. இதற்கிடையில், தொழில்துறை அமைப்பான அசோசெம் தனது பட்ஜெட்டுக்கு முந்தைய பரிந்துரைகளில் அரசாங்கத்திடம் ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கையின் தாக்கம் நாட்டில் வரி செலுத்தும் கோடிக்கணக்கானவர்கள் மீது இருக்கும். வருமான வரி விலக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று அசோசெம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டால், வரி செலுத்துவோர் அதிக பயனடைவார்கள்.

இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அசோசெம், வருமான வரி விலக்கு வரம்பை குறைந்தபட்சம் ரூ. 5 லட்சமாக அதிகரிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இதனால் நுகர்வோரின் கைகளில் அதிக செலவழிப்பு வருமானம் (டிஸ்போசபிள் மணி) இருக்கும். மற்றும் பொருளாதாரத்தில் நுகர்வு அதிகரிக்கும். தற்போது வருமான வரி விதிப்பின்படி ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை வரி விதிக்கப்படுவதில்லை. அதே நேரத்தில், ஆண்டு வருமானம் ரூ 2.5 லட்சம் முதல் ரூ 5 லட்சம் வரை இருந்தால் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. 

வருமான வரி விலக்கு வரம்பு

அசோசேம் தலைவர் சுமந்த் சின்ஹா, 'நேரடி மற்றும் மறைமுக வரிகளில் ஏற்பட்டுள்ள ஏற்றம், வருமான வரி விலக்கு வரம்பை அதிகரிக்க அரசுக்கு போதுமான இடத்தை அளிக்கும்' என்றார். இந்தியா ஒரு பெரிய எரிசக்தி உற்பத்தியாளராக மாற முயற்சிக்கும் போது, ​​கிரீன் ஹைட்ரஜன் உற்பத்திக்கு ஆதரவளிக்க மற்ற நாடுகள் எடுக்கும் முன்முயற்சி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | இத செய்யுங்கள்! பெட்ரோல், டீசல் செலவு தானாக குறையும் 

வருமான வரி

தற்போது ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வரையிலான மொத்த வருமானத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். இருப்பினும், ஒரு வருடத்தில் மொத்த வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால், ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், முழுத் தொகைக்கும் (விலக்கு வரம்பு ரூ.2.50 லட்சத்தைத் தவிர்த்து) வரி விதிக்கப்படும்.

தற்சார்பு நிலை

வேலை வளர்ச்சி மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையான மற்றும் பசுமையான தொழில்களில் கவனம் செலுத்த வேண்டும். உற்பத்தி பாதுகாப்பை விட பொருளாதார பாதுகாப்பு தான் பெரியது என்று அவர் கூறினார். பசுமைப் பொருளாதாரத்தைப் பின்தொடர்வது, ஆற்றல் சுதந்திரத்தை அடைவது, பசுமைத் தொழில்களில் முதலீடு செய்வது மற்றும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது ஆகியவை தற்சார்புத் தன்மையை அடைய உதவக்கூடிய படிகளாகும். 

பொருளாதார வளர்ச்சி

அசோசெம் பொதுச் செயலாளர் தீபக் சூட், 'நுகர்வோர் கையில் அதிக பணத்தை இருக்க வைத்து நுகர்வை ஊக்குவிப்பது பொருளாதார வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்கான சிறந்த முடிவாக இருக்கும்.' என்று கூறினார். 'நுகர்வுடன், நிலையான வளர்ச்சிக்கான மற்ற வழிகளைத் தேடுவது முதலீட்டை மேலும் ஊக்குவிப்பதாகும். இந்த திசையில், உற்பத்தித் துறையில் புதிய முதலீட்டுக்கு 15 சதவீத கார்ப்பரேட் வரி விகிதம் சேவைகள் உட்பட அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படலாம் என்று அசோசெம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | அவசர தேவைக்கு எமர்ஜென்சி லோன் வாங்க சூப்பரான ஐடியா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News