Good News: SBI-ஐத் தொடர்ந்து Bank of Baroda வங்கியும் வட்டி விகிதங்களை குறைத்தது

பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடனுக்கான விகிதங்களை குறைத்துள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, பேங்க் ஆஃப் பரோடா வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2021, 11:58 AM IST
Good News: SBI-ஐத் தொடர்ந்து Bank of Baroda வங்கியும் வட்டி விகிதங்களை குறைத்தது title=

பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடனுக்கான விகிதங்களை குறைத்துள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, பேங்க் ஆஃப் பரோடா வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. 

முன்னதாக, வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன்கள் மற்றும் வாகன கடன்களின் விகிதங்களைக் குறைப்பதாக எஸ்பிஐ அறிவித்திருந்தது.

பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன், வாகனக் கடனை மலிவாக்கியது 
பண்டிகை காலம் தொடங்கி விட்டதால், வங்கிகளில் சலுகைகள் நிரம்பி வழிகின்றன. பேங்க் ஆஃப் பரோடாவின் (Bank of Baroda) படி, வங்கி, வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன்களில் 0.25 சதவிகிதம் தள்ளுபடியை வழங்கியுள்ளது. கட்டணங்களை தள்ளுபடி செய்வதைத் தவிர, வீட்டுக் கடனின் செயலாக்கக் கட்டணத்திலும் வங்கி தள்ளுபடி அளிக்கிறது. இப்போது வீட்டுக் கடன் விகிதங்கள் 6.75 சதவிகிதத்திலும், கார் கடன் விகிதங்கள் 7 சதவிகிதத்திலும் தொடங்கும்.

செயலாக்கக் கட்டணத்திலும் தள்ளுபடி

பேங்க் ஆஃப் பரோடா வெளியிட்ட அறிக்கையில், விரைவான செயலாக்கம் மற்றும் டோர் ஸ்டெப் சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் bob World / மொபைல் வங்கி அல்லது வங்கியின் இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று கூறியுள்ளது. அங்கு அவர்களின் விண்ணப்பங்கள் உடனடியாக அங்கீகரிக்கப்படக்கூடும். 

ALSO READ: மிகக் குறைந்த வட்டியில் வீடு வாங்க செம்ம சான்ஸ்

வீடு மற்றும் கார் கடன்களின் விகிதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் பற்றி தெரிவித்த வங்கியின் மார்கெட்டிங்க் தலைவர் ஜி.எம். எச்.டி.சோலங்கி, "பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு இந்த தள்ளுபடி சலுகை கொண்டு வரப்பட்டதாக கூறினார். தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவும், வங்கியின் புதிய வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான வீடு மற்றும் கார் கடன்களை வழங்கவும் நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் கடன் விகிதங்கள் (Interest Rates) குறைப்பு மற்றும் செயலாக்க கட்டணத்தை தள்ளுபடி செய்வதால் நிச்சயம் பயனடைவார்கள்." என்று கூறினார்.

எஸ்பிஐ வங்கியும் வீட்டுக் கடன், வாகனக் கடன் விகிதங்களை குறைத்துள்ளது
முன்னதாக, நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) பண்டிகை காலத்தை முன்னிட்டு வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்திருந்தது. எஸ்பிஐ, 6.70 சதவிகிதத்தில் கிரெடிட் ஸ்கோர் இணைக்கப்பட்ட வீட்டுக் கடனை வழங்க முன்வந்துள்ளது.

கடன் தொகையைப் பொருட்படுத்தாமல். கடன் தொகை எவ்வளவாக இருந்தாலும், வீட்டுக் கடன் பெறும் அனைத்து வாடிக்கையாளர்களும் இப்போது 6.70 சதவிகிதத்தில் வீட்டுக் கடனைப் பெறலாம். முன்னதாக, SBI யில் வாங்கும் ரூ .75 லட்சத்திற்கு மேலான கடன்களுக்கு 7.15 சதவீத வட்டி செலுத்தப்பட்டது.

ALSO READ:SBI வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி! வீடு, வாகனக் கடன் வட்டி, EMI குறையும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News