தீபாவளிக்குள் ரூ.50,000-ஐ தொடுமா தங்கத்தின் விலை? இப்போது வாங்கினால் லாபம் காணலாமா?

தங்கத்தின் விலை தீபாவளிக்குள் மீண்டும் 50,000 ரூபாயை எட்டும் என தங்கத்தின் விலையை கண்காணிக்கும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2021, 02:56 PM IST
தீபாவளிக்குள் ரூ.50,000-ஐ தொடுமா தங்கத்தின் விலை? இப்போது வாங்கினால் லாபம் காணலாமா?  title=

தங்கத்தின் விலை சமீப காலமாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் கடந்த ஆண்டு தங்கத்தின் விலை எட்டிய உச்சவரம்பை விட தற்போதைய விலைகள் குறைவாகவே உள்ளன.

தங்கத்தின் விலை தீபாவளிக்குள் மீண்டும் 50,000 ரூபாயை எட்டும் என தங்கத்தின் விலையை கண்காணிக்கும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீப காலமாக அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உலகெங்கிலும் பங்குச் சந்தையில் அதிகரித்து வரும் ஏற்ற இறக்கம் காரணமாக தங்கத்தின் நிலை மீண்டு வருகிறது.

பண்டிகைக் காலம் காரணமாக தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளதால், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலைகளில் உள்ள ஸ்திரமற்ற தன்மை மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவற்றுக்கு ஏற்ப தேசிய தலைநகரில் திங்களன்று தங்கம் 10 கிராமுக்கு ரூ.182 உயர்ந்து ரூ.47,023 ஆக இருந்தது. முந்தைய வர்த்தகத்தில், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.46,841 ஆக இருந்தது. இருப்பினும் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.178 குறைந்து ரூ.64,721 ஆக இருந்தது. இது முந்தைய வர்த்தகத்தில் கிலோவுக்கு ரூ.64,899 ஆக இருந்தது.

ALSO READ: Amazon அட்டகாச தீபாவளி சரவெடி: 70% தள்ளுபடி, எக்கச்சக்க சலுகைகள் 

சர்வதேச சந்தையில், செவ்வாயன்று தங்கத்தின் (Gold) விலை குறைந்துள்ளது. இந்த வாரம் வரவிருக்கும் முக்கிய மத்திய வங்கிக் கூட்டங்களில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவதால், டாலரின் உயர்வால் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஸ்பாட் தங்கம் 0.1% குறைந்து அவுன்சுக்கு 1,805.96 ஆக இருந்தது. அமெரிக்க கோல்ட் ப்யூச்சர்ஸ் 1,806.60 டாலராக இருந்தது.

எப்படியும், தங்கம் என்பது இந்தியாவில் உணர்வு சார்ந்த விஷயமாக உள்ளது. அதுவும், தீபாவளி (Diwali) போன்ற பண்டிகைகளில் மக்கள் பொதுவாக தங்கம் வாங்குவதை சுபமாக கருதுகிறார்கள். ஆகையால், தீபாவளியை ஒட்டி பொதுவாக தங்கத்தின் விலை அதிகரிப்பது இயல்பான விஷயமாக உள்ளது.  

ALSO READ: 80% வரை தள்ளுபடி, Flipkart இல் தீபாவளி விற்பனை விரைவில் ஆரம்பம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News