PM Ujjwala Scheme கீழ் 4.5 கோடி பேருக்கு இலவச LPG.. அதிகரிக்கும் சிலிண்டர் எண்ணிக்கை

பிரதமர் உஜ்வாலா எரிவாயு திட்டத்தின் கீழ், ஊரடங்கு காலத்தில் இலவச எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தை அடுத்து, சிலிண்டர்களை வாங்குவது அதிகரித்து உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 5, 2020, 08:52 AM IST
PM Ujjwala Scheme கீழ் 4.5 கோடி பேருக்கு இலவச LPG.. அதிகரிக்கும் சிலிண்டர் எண்ணிக்கை title=

புது டெல்லி: பிரதமர் உஜ்வாலா எரிவாயு திட்டத்தின் கீழ், சிலிண்டர்களைப் பயன்படுத்தும் பயனாளிகளில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுநோயைத் தடுப்பதற்காக போடப்பட்ட ஊரடங்கு காலத்தில் இலவச எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுள்ளனர். மே 4 முதல் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர், இலவச எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் உஜ்வாலா பயனாளிகளின் எண்ணிக்கை மே மாதத்தில் அதிகரிக்கும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிலிண்டர் முன்பதிவு இப்போது அதிகரிக்கும்:

சில பயனாளிகள் ஏப்ரல் மாத இறுதியில் முன்பதிவு செய்துள்ளனர். எனவே ஓரிரு நாட்களில் எரிவாயு சிலிண்டர் அவர்களின் வீட்டை அடையும். இது மிகப் பெரிய எண்ணிக்கை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கூறுகிறது. மே மாதத்தில் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு மேலும் அதிகரிக்கும். பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அனைத்து பயனாளிகளுக்கும் முதல் இலவச எரிவாயு சிலிண்டரை வழங்குவதற்காக மத்திய அரசு ஏப்ரல் 2 ஆம் தேதி வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றியது. இவர்களில், ஏப்ரல் மாதத்தில் சிலிண்டரை முன்பதிவு செய்தவர்கள் ஆவார்கள். தற்போது இரண்டாவது சிலிண்டருக்கான தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

எட்டு கோடிக்கு மேற்பட்ட PMUY பயனாளிகள்: 

ஏப்ரல் மாதத்தில் எந்தவொரு பயனாளியும் எரிவாயு சிலிண்டரைப் பெற முடியாவிட்டால், அவர் இந்த முன்கூட்டியே தொகையை 31 மார்ச் 2021 வரை பயன்படுத்தலாம். முழு நாட்டிலும் உள்ள பிரதான் மந்திரி உஜ்வாலா எரிவாயு திட்டத்தின் (பி.எம்.யு.ஒய்) பயனாளிகள் எட்டு கோடி மூன்று லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஏப்ரல் மாதத்தில் மட்டும் நான்கரை கோடி இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர்  தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தில் வந்த சிலிண்டருக்கான பணம் அனைத்தும் இப்போது மே மாதம் புக் செய்யப்படும் சிலிண்டருக்கு பயன்படுத்தலாம். ஏப்ரல் மாதத்தில் சிலிண்டர்களை எடுக்காதவர்களின் கணக்குகளில் சிலிண்டர் பணம் ஏற்கனவே செலுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News