பிளிப்கார்ட்டின் மெகா ஆபர்! சாம்சங் மொபைல்களுக்கு அதிரடி தள்ளுபடி!

Flipkart Offer: இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தனது பண்டிகைக் கால விற்பனையின் முதல் ஏழு நாட்களில் 1.4 பில்லியன் வாடிக்கையாளர் வருகைகளைப் பதிவு செய்ததாக கூறி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 29, 2023, 02:35 PM IST
  • Flipkartன் தசரா ஸ்மார்ட்போன் ஆபர்.
  • ஐபோன் 14, சாம்சங் மொபைலுக்கு பெரிய தள்ளுபடி.
  • தள்ளுபடி விலையில் மொபைல் போன்களை பெறுங்கள்.
பிளிப்கார்ட்டின் மெகா ஆபர்! சாம்சங் மொபைல்களுக்கு அதிரடி தள்ளுபடி! title=

Flipkart Offers: இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் அதன் இணையதளத்தில் தீபாவளிக்கு முந்தைய விற்பனை நிகழ்வை முடித்த சில நாட்களில், தசரா விற்பனை இப்போது தொடங்கியுள்ளது. அமேசான் தனது தீபாவளி விற்பனையை ஒரு மாதத்திற்கு நடத்தும் அதே வேளையில், Flipkart தீபாவளிக்கு முன் பல்வேறு கால இடைவெளிகளில் மொபைல் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் சலுகைகளுடன் பல விற்பனை நிகழ்வுகளை நடத்துகிறது. இப்போது, ​​சமீபத்திய Flipkart விற்பனையானது iPhone 14, Samsung Galaxy F54, Motorola Edge 40, Poco C51 மற்றும் பிற ஸ்மார்ட்போன்களுக்கு பெரிய தள்ளுபடிகளை வழங்குகிறது. ஃபிளிப்கார்ட் பிக் தசரா விற்பனையின் போது கிடைக்கும் சிறந்த ஃபோன் டீல்களை பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க | முன்னாள் கூகுள் பணியாளர்... இப்போது உபேர் பைக் ஓட்டுநர் - பின்னணி என்ன?

ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள்

ஐபோன் 14 தள்ளுபடி விலையில் ரூ. 56,999ல் கிடைக்கிறது, இது அதன் அசல் விலையான ரூ.69,900 ஐ விட அதிக ஆபரில் உள்ளது. மேலும், 10 சதவீத வங்கி சலுகைகள் மூலம் இன்னும் குறைவான விலையில் மொபைலை வாங்க முடியும். இந்தியாவில் ரூ.29,999க்கு அறிமுகமான Samsung Galaxy F54, ரூ.24,999 விலையில் விற்பனைக்கு வருகிறது. பிளிப்கார்ட் தசரா விற்பனையில் Pixel 7a ஆனது பெரும் தள்ளுபடியுடன் ரூ.35,999க்கு பெறலாம். இதன் அசல் விலை 43,999 ரூபாய் ஆகும். இந்த Pixel போனை வாங்குபவர்கள் 8,000 ரூபாய் தள்ளுபடி பெறுகிறார்கள். மோட்டோரோலா எட்ஜ் 40ஐ தள்ளுபடி விலையில் ரூ.26,999க்கு வாங்கலாம், அதேசமயம் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ரூ.22,999க்கு கிடைக்கும். நத்திங் ஃபோனும் (2) விற்பனையில் உள்ளது, இதன் விலை தற்காலிகமாக ரூ.39,999 ஆக குறைந்துள்ளது.

Poco X5 Pro Flipkartல் 18,499 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. ரெட்மி நோட் 12 ப்ரோ குறைந்த விலையில் ரூ.21,999க்கு கிடைக்கிறது. 10,000 ரூபாய்க்குள் பட்ஜெட் வைத்திருப்பவர்கள் Poco C51 ஐ வாங்கலாம், ஏனெனில் இது Flipkart விற்பனையின் போது 5,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. முதலில் இந்த போன் ரூ.8,499க்கு விற்பனை ஆனது.  இந்த ஃபோன்கள் அனைத்தும் வெவ்வேறு பயனர் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன என்பதையும் மக்கள் சிறந்த அனுபவத்திற்காக அதற்கேற்ப தேர்வு செய்யலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, Pixel 7a ஆனது சிறந்த கேமரா செயல்திறனை விரும்புவோருக்கானது, மேலும் நல்ல செயல்திறன் கொண்டது. மோட்டோரோலா எட்ஜ் 40 ஆனது அதன் விலை வரம்பில் நல்ல வடிவமைப்பு மற்றும் அதிக ஆப்சன் கொண்ட ஆல்-ரவுண்டர் போன் ஆகும். சாம்சங் மற்றும் ஐபோன் ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான போனை தேர்வு செய்யலாம். சமீபத்திய Flipkart தசரா விற்பனை அக்டோபர் 29 வரை நீடிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Flipkart தெரிவித்துள்ளதுபடி, மக்கள் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிக அளவிலான தள்ளுபடிகளை அனுபவிக்க முடியும். இதில் ஸ்மார்ட்போன்களில் 45% வரை தள்ளுபடி, ஸ்மார்ட்வாட்ச்களுக்கு 80% வரை தள்ளுபடி, உடைகளுக்கு 80% வரை தள்ளுபடி மற்றும் மடிக்கணினிகளில் 50% வரை தள்ளுபடி ஆகியவை அடங்கும்.  இந்த விற்பனையானது ஸ்மார்ட்போன்கள், டிவி மற்றும் பிற மின்னணு தயாரிப்புகளுக்கு அதிக தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற சலுகைகளை வழங்குகிறது.

மேலும் படிக்க | தினமும் 7 ரூபாய் சேமித்தால் போதும்... முதுமையில் மகிழ்ச்சியாக வாழலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News