Aadhaar PAN Link : முடிந்தது ஆதார் - பான் இணைப்புத் தேதி : இனி இரண்டு மடங்கு அபராதம்

Aadhaar PAN Link : ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணினை அபராதத்துடன் இணைப்பதற்கான தேதி இன்றுடன் முடிவு பெறுகிறது. இனி இருமடங்கு அபராதம்

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Jun 30, 2022, 11:37 AM IST
  • ஆதார்-பான் இணைப்புக்கு இரட்டிப்பு அபராதம்
  • சாட்டையை கையில் எடுக்கிறது அரசு
  • இன்றுடன் முடிகிறது கடைசி தேதி
Aadhaar PAN Link : முடிந்தது ஆதார் - பான் இணைப்புத் தேதி : இனி இரண்டு மடங்கு அபராதம் title=

வரவு - செலவு கணக்குகளை முறைப்படுத்தவும் வரிவிதிப்பு முறைகளில் முறைகேடு நடைபெறாமல் இருக்கவும் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணினை இணைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு வலியுறுத்தி வருகிறது.

இதனை இணைப்பது மிக எளிமையான காரியம்தான் என்றாலும் ஆதார் கார்டில் இருக்கும் பெயருடன் பான் கார்டில் இருக்கும் பெயர் ஒத்துப் போகாமல் பலர் இருக்கின்றனர். குடும்ப பெயருடன் பெயரை எழுதுதல், அல்லது எழுத்துப் பிழை போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை நடக்கிறது.

மேலும் படிக்க | தபால் அலுவலக சேமிப்பு கணக்கு உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: இனி இந்த வசதிகளும் கிடைக்கும்

இதனை சரிசெய்து இரண்டு அட்டைகளையும் இணைக்கும் பணி சிரமமானதாகிறது. இதனால் பலர் இன்னும் இரண்டு அட்டைகளையும் இணைக்காமல் வைத்துள்ளனர். மேலும் பலர் அலட்சியத்தின் காரணமாக இணைக்காமல் உள்ளனர். இதனை கட்டாயமாக்க ஏப்ரல் மாதம் முதல் 500 ரூபாய் அபராதம் விதித்தது அரசு.

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை ஆதார் - பான் அட்டைகளை இணைக்கும் நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த தேதி இன்றுடன் முடிவடைவதால் நாளை (ஜூலை 1) முதல் இரட்டிப்பு அபராதமாக 1000 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. அபராத அதிகரிப்பால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம், டிஏ, இபிஎஃப், கிராஜுவிட்டி அனைத்திலும் பம்பர் ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News