இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி பிரகாசமாகும்

இன்று அதாவது மார்ச் 15ம் தேதி முதல் இந்த ராசிக்காரர்களுக்குப் பொன்னான நாட்கள் துவங்கிவிட்டதால், வேலை-வியாபாரத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படுவதோடு, பணமும் கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2022, 07:41 AM IST
  • சூரியனின் மாற்றத்தால் சாதகமான பலன்கள் ஏற்படும்
  • சூரியன் மீன ராசியில் நுழைகிறார்
  • 4 ராசிக்காரர்கள் ஒரு மாதத்திற்கு பலமான பலன்களைப் பெறுவார்கள்
இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி பிரகாசமாகும் title=

புதுடெல்லி: கிரகங்களின் ராஜாவான சூரியனின் ராசி மாற்றம் மாதந்தோறும் நடக்கும் முக்கியமான ஜோதிட நிகழ்வு. ஒவ்வொரு 30 நாட்களுக்கும் சூரியன் தனது ராசியை மாற்றி 12 ராசியின் வாழ்க்கையையும் பாதிக்கும். இன்று அதாவது மார்ச் 15, 2022 அன்று, சூரியன் சனியின் ராசியான கும்பத்தை விட்டு வெளியேறி வியாழனின் ராசியான மீனத்தில் நுழைந்தார். இந்த மாற்றத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இதில் 4 பேரின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியன் மீன ராசியில் சஞ்சரிப்பது அளப்பரிய பலன்களைத் தரும். பெரும் பண ஆதாயத்தைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வு-அதிகரிப்பு| போன்ற புதிய வேலையைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. முதலீடு செய்ய இது நல்ல நேரம்.

மேலும் படிக்க | குரு உதயத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்

மிதுனம் - சூரியனின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் தரும். உங்கள் தொழிலில் பெரிய பதவியை பெறலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகள் லாபம் பெறலாம். மொத்தத்தில் அதிர்ஷ்டத்தின் முழு பலனையும் பெறுவீர்கள்.

கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் சூரியனின் பிரவேசம் மிகவும் சாதகமாகும். அடுத்த ஒரு மாத காலம் வெற்றி மழை பொழியும். தடைபட்ட வேலைகள் எளிதாக முடியும். பதவி உயர்வு பெறலாம். பணம் சாதகமாக இருக்கும்.

தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்கு 

சூரியனின் ராசி மாற்றம் மேசமான நிலையை சீர்படுத்த உதவும். சூரியனின் தாக்கத்தால் தனுசு ராசிக்காரர்களின் பணமும் புகழும் அதிகரிக்கும். பதவி, கௌரவம் ஆகியவை கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால், தொழிலில் முன்னேற்றம் மேலோங்கி இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய வேலையைப் பற்றி நன்கு அறிந்த பிறகே முடிவு எடுங்கள். உங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நல்லதே நடக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News