சனிப்பெயர்ச்சி: இன்னும் சில நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

Saturn Transit 2022: சனிப்பெயர்ச்சியின் பலன் 3 ராசிக்காரர்களுக்கு மிக நன்றாக இருக்கும். இந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 8, 2022, 12:12 PM IST
  • நீண்ட நாட்களாக காத்திருந்த வணிக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சனிப்பெயர்ச்சி: இன்னும் சில நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் title=

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகத்தின் ராசி மாற்றமும் அனைத்து ராசிக்கார்ரகளின் வாழ்க்கையிலும் சுப மற்றும் அசுப பலன்களை கொண்டு வருகின்றன. 

ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ராசி மாறுகிறது. அந்த மாற்றம் ஒரு மனிதனின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. நீதி தேவன் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஏப்ரல் 29-ம் தேதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். சனிபகவான் மிக மெதுவான வேகத்தில் செல்கிறார். அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற இரண்டரை வருடங்கள் ஆகும். ஆகையால், சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய சொந்த ராசியான கும்பத்திற்கு வரவுள்ளார். இந்தப் பெயர்ச்சியின் பலன் 3 ராசிக்காரர்களுக்குத் தெளிவாகத் தெரியும். இந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 29 முதல் நல்ல நாட்கள் தொடங்கப் போகின்றன. சனிபகவான் இந்த ராசிக்கு 11ம் பாகத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த ஸ்தானம் லாபம் மற்றும் வருமானத்துக்கான ஸ்தானமாகும். ஆகையால், இந்த காலகட்டத்தில் நீங்கள் வியாபாரத்தில் லாபம் பெறலாம். நீண்ட நாட்களாக காத்திருந்த வணிக ஒப்பந்தமும் இறுதி செய்யப்படும். 

சனி பகவான் மேஷ ராசிக்காரர்களின் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கிறார். ஆகையால், இந்த காலகட்டத்தில் தொழில் முன்னேற்றம் அடைய அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. புதிய வேலை வாய்ப்பு வரலாம். பயணத்தின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். முதலீடு செய்ய சரியான நேரமாக இது இருக்கும். மேலும், நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வந்த ஒரு பழைய நோயிலிருந்து நீங்கள் விடுபடலாம்.

மேலும் படிக்க | இன்றைய புதன் பெயர்ச்சி உங்களுக்கு சுபமா அசுபமா புதனின் பெயர்ச்சி பலன்கள் 

ரிஷபம்:

ஜோதிட சாஸ்திரப்படி சனிபகவான் ரிஷப ராசியில் பத்தாம் ஸ்தானத்தில் நுழைவார். இந்த ஸ்தானம் தொழில் மற்றும் வேலைக்கான ஸ்தானம் என்பதால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்பு உண்டு. நீங்கள் புதிய தொழில் தொடங்க நினைத்தால், இந்த நேரம் அதற்கு சாதகமாக இருக்கும். 

பணியிடத்தில் மரியாதை கூடும். இந்த ராசியின் அதிபதி சுக்ர தேவன் ஆவார். சனி பகவானும் சுக்ரனும் நட்பு கிரகங்கள். ஆகையால், சனி பகவானின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு சுபமாக அமையப் போகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவும் உங்களுக்கு முழுமையாக இருக்கும். 

தனுசு: 
சனிப்பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். சனிபகவான் ராசி மாறுவதால் உங்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்கும். இதனுடன் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

இந்த ராசியின் வலிமைமிக்க வீட்டில் சனிபகவான் பெயர்ச்சியாவார். எனவே, இந்த காலகட்டத்தில் உங்கள் வலிமை அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதையும் கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வந்த ஒரு பழைய நோயிலிருந்து நீங்கள் விடுபடலாம். சனி பகவான் சம்பந்தமான வியாபாரம் (இரும்பு, எண்ணெய், மதுபானம்) செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும். தடைபட்ட வேலைகள் முடிவடையும்.

மேலும் படிக்க | அர்த்தாஷ்ட சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட பரிகாரங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News