Hug Day 2022: மந்திரம் செய்யும் கட்டிப்பிடி தந்திரம்! ஒரு நாளைக்கு எத்தனை முறை கட்டிப்பிடிக்கலாம்?

தனது அன்புக்குரியவர்களைக் கட்டிப்பிடிப்பதன் மூலம் ஒருவருக்கு எவ்வளவு நிம்மதி ஏற்படும்? மந்திர வித்தைகள் செய்யும் அரவணைப்பு, தொழில்ரீதியாகவும் வளர்கிறது தெரியுமா?  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 12, 2022, 02:29 PM IST
  • மந்திரம் செய்யும் கட்டிப்பிடி தந்திரம்!
  • ஒரு நாளைக்கு எத்தனை முறை கட்டிப்பிடிக்கலாம்?
  • தொழில்முறை கட்டிப்பிடி நிபுணர்களும் உண்டு
Hug Day 2022: மந்திரம் செய்யும் கட்டிப்பிடி தந்திரம்! ஒரு நாளைக்கு எத்தனை முறை கட்டிப்பிடிக்கலாம்? title=

கட்டிப்பிடிப்பதன் நன்மைகளைத் தெரிந்தால், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்ஸாக மாறி, நீங்கள் எம்பி எம்பி கட்டிப்பிடி வைத்தியம் செய்தால் அதற்கு ஃபீஸ் என்னவாக இருக்கும்?

அந்த கற்பனைக்கு போவதற்கு முன், ஒரு நபர் தனது அன்புக்குரியவர்களைக் கட்டிப்பிடிப்பதன் மூலம் நிம்மதியாக உணர்கிறார் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

சோர்வு, வலி, தொல்லைகள் அனைத்தையும் போக்கும் சொக்குப்பொடி ஒரு அன்பான அரவணைப்பில் (இருக்கிறது. காதலர் வாரத்தில், பிப்ரவரி 12ம் நாளான இன்று கட்டிப்பிடி நாள் (Happy Hug Day2022) கொண்டாடப்படுகிறது.

கட்டிப்பிடிப்பது மிகவும் நன்மை பயக்கும்
மக்கள் மகிழ்ச்சி மற்றும் துக்கத்தின் போது நெருங்கியவர்களை கட்டிப்பிடித்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். ஆறுதல் சொல்ல வேண்டும், மனதுக்குள் பேச வேண்டும், அன்பைப் பொழிய வேண்டும், மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என உணர்வுகள் அனைத்திற்கும் வடிகால் ஆக இருப்பது அன்பான அரவணைப்புதான்.

மேலும் படிக்க | முத்தம் மூலம் அன்பை பரிமாறிக் கொள்ளும் குட்டி யானைகள்

நெருக்கத்தை வெளிப்படுத்தும் சிறப்பு வழி
ஒருவரைக் கட்டிப்பிடிப்பது அன்பை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வழி. இது அன்பின் மொழி. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் கதாநாயகன் கட்டிப்பிடி வைத்தியம் ஏற்படுத்தும் நெகிழ்ச்சியான தருணங்களை பதிவு செய்திருப்பார். 

உண்மையில் நெருக்கமானவர்களைத் தவிர, நன்றி சொல்வதற்க்கு ஒருவரை  கட்டிப்பிடிப்பதும் மிகவும் நன்மை பயக்கும். கட்டிப்பிடிப்பதன் மூலம் இதயமும் மனமும் நிறைய நன்மைகளைப் பெறுகின்றன.

ஒரு நாளைக்கு எத்தனை முறை கட்டிப்பிடிப்பது அவசியம்?
குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 4 முறையாவது கட்டிப்பிடிக்க வேண்டும். அதுமட்டுமின்றி,  வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இல்லாதவர்கள் தினமும் குறைந்தது 8 முறை கட்டிப்பிடிக்க (Happy Hug) வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்க வேண்டுமெனில், தினமும் குறைந்தது 12 முறையாவது கட்டிப்பிடிப்பது அவசியம்.  

மேலும் படிக்க | காதலில் பட்டையைக் கிளப்பும் ஆண்களின் ராசிகள்

கட்டிப்பிடிப்பதன் மூலம் கவலை குறைகிறது
கட்டிப்பிடிப்பது வெறும் உணர்வு அல்ல. இது உங்கள் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது. கட்டிப்பிடிப்பதால் உடலில் ஓடும் ரத்தத்தில் ஆக்சிடோசின் வெளியாகும்,

இதன் காரணமாக ரத்த அழுத்தம் குறைந்து மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லும். கட்டிப்பிடிப்பதன் மூலம் மூளை நரம்புகள் வலுவடைவதோடு நினைவாற்றலும் வலுவடையும்.

கட்டிப்பிடித்தால் டென்ஷன் குறையும்
ஒருவரை கட்டிப்பிடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. உண்மையில், ஒரு அன்பான அரவணைப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது, 

மேலும் படிக்க | 'டெடி டே' - என்ன ஸ்பெஷல் இன்று!

இது இதயம் சம்பந்தப்பட்ட விஷயம்
கட்டிப்பிடிப்பது உடலில் காதல் ஹார்மோனின அளவை அதிகரிக்கிறது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். கட்டிப்பிடிப்பவர்களின் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, உடலில் ஆக்ஸிஜனின் அளவு சரியாக இருக்கும். இது இதய நோய் அபாயத்தைக் குறைப்பதுடன் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

ஒருவரைக் கட்டிப்பிடிக்கும்போது நிகழும் தசைகளின் இயக்கம், உடலுக்குத் தளர்வைத் தந்து நிம்மதியைக் கொடுக்கிறது.

தொழில் வல்லுநர்களின் அணைப்புகள் (cuddle therapy)
கட்டிப்பிடிப்பதன் அவசியத்தை உணர்ந்துக் கொள்ள ஒரேயொரு உதாரணம் போதுமானது. இன்று தொழில்ரீதியாக அரவணைப்பு வைத்தியம் (cuddle therapy) கொடுப்பது தொடங்கிவிட்டது தெரியுமா? இதற்கு Cuddlist என்று  பெயர். பணம் செலுத்தி அரவணைப்பின் மூலம் அமைதி கொடுக்கும் வைத்தியம் இது.

இப்படி Cuddlist இடம் போகும் நிலை வருவதற்கு முன்னரே, ஒரு நாளைக்கு பல முறை கட்டிப்பிடித்து வாழ்வை வண்ணமயமாக்குங்கள். இது காதலர்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களின் அடிப்படை அரவணைப்புத் தேவை...

மேலும் படிக்க | முத்தம் இனிக்குமா? கசக்குமா? பாம்பை முத்தமிடும் பெண்ணிடம் கேட்கலாமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News