இந்த 5 ரூபாய் இருக்கா? 2 லட்ச ரூபாய் பிடிங்க அதிர்ஷ்டசாலி லட்சாதிபதியே

Old Note Sale: கோடீஸ்வரராக கொடி கட்டிப் பறக்க ஒற்றை பணத்தாள் போதும். ஆனால், இது அரிதான நோட்டு! உங்களிடம் உள்ளதா இந்த ஒற்றை ரூபாய் பணத்தாள்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 11, 2022, 04:41 PM IST
  • 5 ரூபாய் நோட்டின் மதிப்பு சில லட்சங்கள்
  • முதலீடு செய்ய வேண்டியதில்லை
  • டிராக்டர் சின்னம் உள்ள ஐந்து ரூபாய் ஒற்றை நோட்டு
இந்த 5 ரூபாய் இருக்கா? 2 லட்ச ரூபாய் பிடிங்க அதிர்ஷ்டசாலி லட்சாதிபதியே title=

புதுடெல்லி: 5 ரூபாய் நோட்டு இருந்தால் போதும், அது 2 லட்சம் ரூபாய் சம்பாதித்துக் கொடுக்கும். கோடீஸ்வரராக கொடி கட்டிப் பறக்க ஒற்றை பணத்தாள் போதும். ஆனால், இது அரிதான நோட்டு என்பதால் வெகு சிலரிடமே இந்த சிறப்பான ஐந்து ரூபாய் பணத்தாள் இருக்கும். ஆனால் வீட்டில் இருக்கும் ஐந்து ரூபாய்த் தாளை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருப்பவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் ஜாக்பாட் பரிசை அள்ளிக் கொடுக்கும். உங்கள் நோட்டு சேகரிப்பில் 5 ரூபாய் டிராக்டர் நோட்டு (5 Rupee Tractor Note) இருந்தால், லட்சக்கணக்கான ரூபாய்க்கு நீங்கள் தான் அதிபதி ஆவீர்கள்...

வருடங்கள் கடந்து போகலாம், ஆனால் பொருட்களை சேமிப்பதில் விருப்பமுள்ளவர்கள் அரிய பொருட்களை மட்டுமல்ல, சாதாரண பொருட்களையும் சேர்த்து வைப்பார்கள். அதிலும் குறிப்பாக, பழங்கால நாணயங்கள் மற்றும் நோட்டுகள் போன்றவற்றை சேகரித்து பாதுகாப்பதை பலர் பொழுதுபோக்காக வைத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | இந்தியர்களின் உத்தேச ஆயுள் 1951இல் 32... 2022இல் 70! விடுதலை இந்தியாவின் சாதனை

அப்படி பார்த்து பார்த்து சேமிப்பவர்களிடம் கூட இல்லாத சில பழைய ரூபாய் நோட்டுகள்  (Old Rupees), நமது வீட்டின் உண்டியலிலோ அல்லது வேறு எங்காவதோ இருக்கலாம். உங்களிடம் இந்த பழைய ரூ.5 டிராக்டர் நோட்டு இருந்தால், அதை ஆன்லைனில் விற்பனை செய்து லட்சாதிபதி ஆகலாம்.  

5 ரூபாய் அதிர்ஷ்ட நோட்டு 
இந்த 5 ரூபாய் டிராக்டர் நோட்டு Antique Collection எனப்படும் புராதன பொருட்கள் என்ற வகைக்குள் வருகிறது. இது தொடர்பான சில விஷயங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்.

உங்களிடம் உள்ள 5 ரூபாய் நோட்டில் டிராக்டர் சின்னம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். 786 என்ற எண் அதில் எழுதியிருக்க வேண்டும். பழங்கால ரூபாய் நோட்டுகளில் இது அரிதாகக் கருதப்படுகிறது. இந்த நோட்டு இந்திய ரிசர்வ் வங்கியில் மிகவும் அரிதான நோட்டுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ப்ரொஃபைல் பிக்சராக தேசிய கொடியை வையுங்க

வீட்டில் இருந்தபடியே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்
இந்த 5 ரூபாய் நோட்டு இருந்தால், வீட்டில் அமர்ந்தபடியே உங்கள் வீடு தேடி அதிர்ஷ்ட லட்சுமி கதவைத் தட்டுவாள். coinbazzar.com இன் ஆன்லைன் தளத்திற்கு சென்று முதலில் உங்களை பதிவு செய்துக் கொள்ளவும்.

உங்களை ஆன்லைன் விற்பனையாளராகப் பதிவு செய்த பிறகு, ரூபாய் நோட்டின் படத்தை பதிவேற்றம் செய்யவும். இந்த செயல்முறைக்குப் பிறகு, ஆர்வமுள்ளவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள், நீங்கள் வீட்டில் உட்கார்ந்தபடியே 5 ரூபாய்க்கு பதிலாக பல ஆயிரம் ரூபாய்களைப் பெறலாம்.

மேலும் படிக்க | முக ஸ்டாலின் நேற்றைய அரசியல் வரலாறு 2092: முதல்வரை பாராட்டும் பார்த்திபன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News