Tips for Women: நீண்ட நாட்கள் உடல்நல பிரச்சனைகள் இல்லாமல் வாழ்வதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். ஆனால் பெரும்பாலும் ஆண்களைவிட பெண்கள் தங்கள் உடல்நலம் குறித்து பெரிதாக கண்டுகொள்வதில்லை. கணவனையோ, குழந்தைகளையோ அல்லது வேலையையோ கவனித்துக் கொள்ளும்போது தங்கள் உடல்நலம் பற்றி கவனிக்க மறக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு தொடர்ந்து உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், சாப்பிடும் உணவு மற்றும் ஓய்வு போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் தங்கள் உடலுக்கு தேவையான சக்திகளை பெற சில உணவுகளை தொடர்ந்து எடுத்து கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க...காலையில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்!
பெண்கள் தங்கள் தினசரி உணவில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக, ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆண்களை விட பெண்களுக்கு உடலில் துத்தநாகம் அதிகம் தேவைப்படுகிறது. மருத்துவர்களின் அறிவுரைப்படி, துத்தநாகம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இவை பெண்கள் உடலில் உள்ள ஹார்மோன் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். அதே போல பெண்கள் தங்கள் உணவில் குறைந்தது 10 முதல் 12 கிராம் ஜிங்க் சேர்க்க வேண்டும். இதற்காக பச்சை காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பால் பொருட்களை தினசரி உணவில் சேர்த்து கொள்ளலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
பெண்கள் என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொண்டாலும் அதில் அதிக நார்ச்சத்து இருக்க வேண்டும். நார்ச்சத்து குடல் ஆரோக்கியமாக இருக்க உதவி செய்கிறது. மேலும் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனையும் கட்டுப்படுத்துகிறது மற்றும் செரிமானத்தையும் சீராக்க உதவுகிறது. நார்சத்து அதிகம் கிடைக்க தினசரி உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் உலர் கொட்டைகள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள். அதே போல ஃபோலேட் என்று அழைக்கப்படும் வைட்டமின் B9 மூளை மற்றும் முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு அவசியம். பச்சை காய்கறிகள், பீன்ஸ், பருப்பு, சிட்ரஸ் பழங்கள் மற்றும் பலப்படுத்தப்பட்ட தானியங்கள் ஆகியவற்றில் தேவையான வைட்டமின் B9 உள்ளது. இவற்றை அதிகமாக சாப்பிடும் போது இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலம்
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் என்பது பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு வகை ஆகும். இது இதய நோய்களின் அபாயத்தைக் பெரிதும் குறைக்க உதவுகிறது. உடலில் இவை குறைந்தால் அடிக்கடி பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சால்மன், டுனா மற்றும் மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களை உணவில் சேர்த்து கொண்டால் இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சுகர் அளவை தட்டி கழிக்க இந்த உலர் பழங்களை கட்டாயம் சாப்பிடுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ