EPFO: இந்த தேதிக்குள் வட்டி பணம் கணக்கில் வரும், இருப்பு நிலையை இப்படி தெரிந்துகொள்ளலாம்

EPFO: மிக விரைவில், பிஎஃப் சந்தாதாரர்களின் பிஎஃப் கணக்கில் வட்டிப் பணம் வரக்கூடும். இதற்கு முன், உங்கள் பிஎஃப் கணக்கின் இருப்பு நிலையை எப்படி செக் செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 7, 2022, 10:35 AM IST
  • PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய செய்தி.
  • ஜூன் மாதத்திற்குள் வட்டிப் பணம் கணக்கில் வரலாம்.
  • கணக்கின் இருப்பி நிலையை இந்த வழியில் தெரிந்துகொள்ளலாம்.
EPFO: இந்த தேதிக்குள் வட்டி பணம் கணக்கில் வரும், இருப்பு நிலையை இப்படி தெரிந்துகொள்ளலாம் title=

இபிஎஃப்ஓ: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் 2021-22 நிதியாண்டிற்கான பிஎஃப் மீதான வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் குறைத்து 8.10% ஆக நிர்ணயித்தது. ஊடக அறிக்கையின்படி, ஜூன் மாதத்திற்குள் பிஎஃப் சந்தாதாரர்களின் பிஎஃப் கணக்கில் வட்டிப் பணம் வரக்கூடும். இதற்கு முன், உங்கள் பிஎஃப் கணக்கின் இருப்பு நிலையை நீங்கள் சரிபார்க்க முடியும். 

பிஎஃப் சந்தாதாரர்கள் பிஎஃப் கணக்கின் இருப்பைச் சரிபார்க்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் இருப்பை எளிதாகச் சரிபார்க்கலாம்.

மிஸ்ட் கால் மூலம் உடனடியாகத் தகவலைப் பெறலாம்

பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட பதிவு எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்யுங்கள். இதற்குப் பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணில் ஒரு செய்தி வரும். அதில் பிஎஃப் இருப்பு பற்றிய தகவல் கிடைக்கும்.

மேலும் படிக்க | வீட்டில் இருந்தபடியே EPF கணக்கில் தகவல்களை மாற்றும் வழிமுறை

எஸ்எம்எஸ் மூலமாகவும் இருப்பைச் சரிபார்த்துக்கொள்ளலாம்

இபிஎஃப்ஓ-ல் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 க்கு EPFO ​​UAN LAN (மொழி) என்று எழுதி அனுப்பவும். LAN என்பது உங்கள் மொழியைக் குறிக்கிறது. உங்களுக்கு ஆங்கிலத்தில் தகவல் தேவை என்றால், LAN க்கு பதிலாக, ENG என்று எழுத வேண்டும். அதேபோல் ஹிந்திக்கு HIN என்றும் தமிழுக்கு TAM என்றும் எழுத வேண்டும். தமிழில் தகவல்களைப் பெற, EPFOHO UAN TAM என எழுதி மெசேஜ் அனுப்ப வேண்டும்.

உமங் செயலி மூலம் இந்த வழியில் தெரிந்துகொள்ளலாம்

உமங் செயலி மூலம் எப்போது வேண்டுமானாலும் உங்கள் பிஎஃப் இருப்பைச் சரிபார்க்கலாம். இதற்கு, செயலியில் இபிஎஃப்ஓ-வில் கிளிக் செய்யவும். இதில், ‘எம்ப்ளாயி செண்ட்ரிக் சர்வீசஸ்’ என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, ‘வியூ பாஸ்புக்’ என்பதைக் கிளிக் செய்து யுஏஎன் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். அதை உள்ளிட்ட பிறகு, நீங்கள் இபிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தும் செக் செய்யலாம் 

ஆன்லைனில் உங்கள் பிஎஃப் இருப்பைச் சரிபார்க்க, இபிஎஃப் பாஸ்புக் போர்ட்டலுக்குச் செல்லவும். உங்கள் யுஏஎன் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி இந்த போர்ட்டலில் உள்நுழையவும். இதில், டவுன்லோட் / வியூ பாஸ்புக் என்பதைக் கிளிக் செய்தால், பாஸ்புக் உங்கள் முன் திறக்கும். அதில் உங்கள் இருப்பை சரி பார்த்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க | EPFO: ஆன்லைனில் இபிஎஃப்-ஐ மாற்றுவது எப்படி? முழு செயல்முறை இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News