PF Good news: கோவிட் முன்பணம் எடுக்க அரசு அனுமதி, இந்த முறையில் எளிதாக எடுக்கலாம்!!

கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டில் குழப்பமான சூழலை உருவாக்கியுள்ள நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), அதன் சந்தாதாரர்களுக்கு நிவாரணம் வழங்க ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 1, 2021, 07:13 AM IST
  • EPFO அதன் சந்தாதாரர்களுக்கு நிவாரணம் வழங்க ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • EPFO ​​அதன் உறுப்பினர்களுக்கு இரண்டாவது முறையாக நான்-ரீஃபண்டபில் கோவிட் -19 முன்பணத்தை பெற அனுமதித்துள்ளது.
  • UAN உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் தொகை டெபாசிட் செய்யப்படும் என அமைப்பு கூறியுள்ளது.
PF Good news: கோவிட் முன்பணம் எடுக்க அரசு அனுமதி, இந்த முறையில் எளிதாக எடுக்கலாம்!! title=

கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டில் குழப்பமான சூழலை உருவாக்கியுள்ள நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), அதன் சந்தாதாரர்களுக்கு நிவாரணம் வழங்க ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் படி, உங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து இரண்டாவது முறையாக நான்-ரீஃபண்டபில் ( திரும்பக்கட்டத் தேவை இல்லாத) கோவிட் -19 முன்பணத்தை பெறலாம் (COVID-19 Advance). தொற்றுநோய்களின் இந்த காலத்தில், பொது மக்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா (PMGKY) இன் கீழ் இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

பொது மக்களுக்கு இந்த மிகப்பெரிய நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பி.எஃப் முன்பணத்தை எவ்வாறு பெறுவது என்பது குறித்த ஒரு விரிவான விளக்கத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அளித்துள்ளது. 

ALSO READ: Tips of Investment: ரூ.500 முதலீடு செய்யத் தொடங்குங்கள், விரைவில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள்!

இது தொடர்பாக, EPFO தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'உங்கள் பிஎஃப் தொகையை எவ்வாறு திரும்பப் பெறுவது' (‘How to withdraw your PF amount,’) என்பதை விளக்கும் ஒரு நிமிட வீடியோவை ட்வீட் செய்துள்ளது. படிவம் 19/10C -ஐ எவ்வாறு நிரப்ப வேண்டும் என இந்த வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இதை எவ்வாறு செய்வது என்பதற்கான படிப்படியான விளக்கத்தை கீழே காணலாம்: 

Step 1: ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலுக்கு செல்லவும். UAN மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழையவும். 

Step 2: 'ஆன்லைன் சேவைகள்' என்பதைக் கிளிக் செய்யவும். டிராப்-டவுன் மெனுவிலிருந்து, 'கிளெய்ம்' -ஐ தேர்ந்தெடுக்கவும் (Form-31, 19, and 10C)

Step 3: 'இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண்ணை' (Linked Bank Account Number) இதில் உள்ளிடவும். 'வெரிஃபை' என்பதைக் கிளிக் செய்யவும்.

Step 4: சேவையை (பணியை) விட்டு வெளியேறுவதற்கான காரணத்தை நிரப்பவும். 

Step 5: டிராப் மெனுவில், ‘Only PF Withdrawal (Form 19)'-ஐ தேர்வு செய்யவும். 'நான் விண்ணப்பிக்க விரும்புகிறேன்' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Step 6: 'முழுமையான முகவரி'-ஐ நிரப்பவும். 'அசல் காசோலை / பாஸ்புக்' (‘Original Cheque/Passbook’)-ன் ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பதிவேற்றவும்.

Step 7: 'Disclaimer' என்பதைக் கிளிக் செய்து, 'Get Aadhaar OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.

Step 8: பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ நிரப்பி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

படிவம் 19- ஐ சமர்ப்பித்த பின்னர் படிவம் IOC ஐ சமர்ப்பிக்க இதே போன்ற வழிமுறைகளைப் பின்பற்றவும் வீடியோ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு ட்விட்டர் இடுகையின் வீடியோ செய்தி மூலம் UAN உடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் தொகை டெபாசிட் செய்யப்படும் என அமைப்பு கூறியுள்ளது. படிவம் 19/10 சி-ஐ, பணியை விட்டவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே நிரப்ப முடியும்.

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, “COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் தாக்கத்தில் அதன் சந்தாதாரர்களை ஆதரிப்பதற்காக, EPFO ​​இப்போது அதன் உறுப்பினர்களுக்கு இரண்டாவது முறையாக நான்-ரீஃபண்டபில் ( திரும்பக்கட்டத் தேவை இல்லாத) கோவிட் -19 முன்பணத்தை பெற அனுமதித்துள்ளது. தொற்றுநோய்களின் இந்த காலத்தில், பொது மக்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா (PMGKY) இன் கீழ் இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது."

இந்த விதியின் கீழ், மூன்று மாத சம்பளத் தொகை (Salary) (அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படிகள்) அல்லது ஈபிஎஃப் கணக்கில் உள்ள தொகையில் 75 சதவீதம், இந்த இரண்டில் எது குறைவோ, அந்த அளவிற்கு  நான்-ரீஃபண்டபில் ( திரும்பக்கட்டத் தேவை இல்லாத) கோவிட் -19 முன்பணம் வழங்கப்படும் என திங்களன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ALSO READ: உங்க பிஎஃப் பேலன்ஸை ஈசியாக எவ்வாறு செக் செய்வது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News