வேலையை விட்டு வெளியேறிய பிறகும் உங்கள் EPF கணக்கில் வரியில்லா வட்டி கிடைக்குமா?

EPF Account: ஓய்வு பெற்ற பிறகு அல்லது வேலையை விட்டு வெளியேறிய பிறகு எவ்வளவு காலம் இபிஎஃப் கணக்கில் பணத்தை வைத்திருக்க முடியும்?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 8, 2023, 05:16 PM IST
  • வேலையை விட்டு வெளியேறிய பிறகு எவ்வளவு காலம் இபிஎஃப் கணக்கில் பணத்தை வைத்திருக்க முடியும்?
  • மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் பணம் எடுக்கப்படாவிட்டால் என்ன செய்வது?
  • PF கணக்கில் உள்ள பணத்திற்கு வட்டி கிடைக்குமா?
வேலையை விட்டு வெளியேறிய பிறகும் உங்கள் EPF கணக்கில் வரியில்லா வட்டி கிடைக்குமா? title=

அலுவலகங்களில் பணிபுரியும் பல சம்பள வர்க்கத்தினர் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கணக்கு வைத்திருகிறார்கள். அதில் அவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 12% கட்டாயமாகப் பங்களிக்க வேண்டும். இது தவிர, அதில் கிடைக்கும் வட்டிக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சில நிபந்தனைகளுடன் முதிர்வுத் தொகையிலும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

பலருக்கு இபிஎஃப் திட்டத்தின் நுணுக்கமான சில விஷயங்கள் புரியாமல் உள்ளன. உதாரணமாக, ஓய்வு பெற்ற பிறகு அல்லது வேலையை விட்டு வெளியேறிய பிறகு எவ்வளவு காலம் இபிஎஃப் கணக்கில் பணத்தை வைத்திருக்க முடியும்? இதன் பொருள் கணக்கில் மாதாந்திர பங்களிப்பு இருக்காது? மாதாந்திர பங்களிப்பு இல்லை என்றால், இபிஎஃப் கணக்கு இருப்புக்கு வட்டி தொடர்ந்து சேருமா?

ஆம் எனில், அது எப்போது கிடைக்கும்? மேலும் அத்தகைய இபிஎஃப் இருப்புக்கான வட்டி விகிதம் என்னவாக இருக்கும்? நீங்கள் ஓய்வு பெற்ற பிறகும் அதே அல்லது வேறு

நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்தால், EPF மற்றும் EPS கணக்கில் தொடர்ந்து பங்களிக்க முடியுமா? 

பங்களிக்கும் உறுப்பினர் தெரிந்து கொள்ள வேண்டிய இபிஎஃப் கணக்கின் சில முக்கிய விஷயங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

வேலையை விட்டு வெளியேறிய பிறகு எவ்வளவு காலம் இபிஎஃப்  கணக்கில் பணத்தை வைத்திருக்க முடியும்?

ஒரு நபர் தனது சம்பளத்திலிருந்து மாதாந்திர பங்களிப்பைத் தொடர்ந்து அளிக்கும் போது EPF கணக்கு செயலில் இருக்கும். இருப்பினும், நீங்கள் வேலையை விட்டுவிட்டாலோ அல்லது ஓய்வு பெற்றிருந்தாலோ, எவ்வளவு காலத்திற்கு நீங்கள் இபிஎஃப் கணக்கில் பணத்தை வைத்திருக்க முடியும் என்பது முக்கியம். அத்தகைய சூழ்நிலையில், அந்த நபர் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மற்றொரு இடத்தில் வேலையில் சேரவில்லை என்றால், அந்த நபர் தனது இபிஎஃப் இருப்புத்தொகையில் 100% -ஐ எடுக்க, அதாவது வித்டிரா செய்ய இபிஎஃப் திட்டம் அனுமதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அல்லது ஓய்வுபெறும் போது EPF கணக்கை மூடலாம்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் பணம் எடுக்கப்படாவிட்டால் என்ன செய்வது?

வேலை நிறுத்தப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் EPF கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படாவிட்டால், அந்தக் கணக்கு செயல்படாத கணக்காக மாற்றப்படும். PF சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகளாக கோரப்படாத தொகை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றப்படுகிறது. இந்த நிதிக்கு மாற்றப்பட்ட பிறகு, பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து 25 ஆண்டுகளுக்குத் தொகை கோரப்படாமல் இருந்தால், இந்தத் தொகையை மத்திய அரசு தன்னிடமே வைத்துக்கொள்ளும்.

மேலும் படிக்க | பிஎஃப் கணக்கில் வட்டி எப்போது வரும்? EPFO கூறியுள்ள புதிய அப்டேட்

EPF கணக்கில் உள்ள பணத்திற்கு வட்டி கிடைக்குமா?

55 வயது வரை, பங்களிப்பு நிறுத்தப்பட்ட பிறகு அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு EPF கணக்கில் பணத்தை வைத்திருக்க முடியும். இதுபோன்ற சூழ்நிலையில், இபிஎப் கணக்கில் வைக்கப்பட்டுள்ள பணத்துக்கு வட்டி தொடர்ந்து கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வட்டி விகிதம் நிதியமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட அதே வட்டி விகிதமாக இருக்கும்.

EPF கணக்கில் பெறப்படும் வட்டிக்கு எப்படி வரி விதிக்கப்படும்?

EPF கணக்கிலிருந்து பெறப்படும் வட்டிக்கு சில சூழ்நிலைகளைத் தவிர வரிவிலக்கு உண்டு என்பது உண்மைதான். இருப்பினும், EPF கணக்கில் தொடர்ந்து பங்களிப்பு வந்துகொண்டிருந்தால்தான் அது வரிவிலக்க்குக்கு உட்பட்டிருக்கும். EPF கணக்கு செயல்படும் வரை வட்டி தொடர்ந்து கிடைக்கும்.

உறுப்பினர் ஏற்கனவே ஐந்தாண்டுகள் தொடர்ச்சியான சேவையை PFக்கான பங்களிப்புடன் வழங்கியிருந்தாலும் கூட, வேலை நிறுத்தத்திற்குப் பிறகு EPF கணக்கில் வட்டி மூலம் கிடைக்கும் எந்தவொரு வருமானத்திற்கும் வரி விதிக்கப்படும்.

நீங்கள் ஓய்வு பெற்ற பிறகும் பணியைத் தொடர்ந்தால் என்ன செய்வது?

நீங்கள் ஓய்வு பெற்ற பிறகும் அதே நிறுவனத்திலோ அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்திலோ சேர்ந்தால் EPF பங்களிப்பைத் தொடர முடியுமா? இந்நிலையில், 58 வயது நிரம்பிய ஊழியர்கள் இபிஎஸ் உறுப்பினர் ஆக முடியாது. இந்த வயதிற்குப் பிறகும் நபர் தொடர்ந்து பணிபுரிந்தால், EPS -க்கான பங்களிப்பு நிறுத்தப்படும், ஆனால் EPF -க்கான பங்களிப்பு தொடரும். முதலாளி மற்றும் பணியாளர் இருவரின் பங்களிப்பும் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

மேலும் படிக்க | PF பணம் முழுவதும் வேண்டுமா? இந்த காரணங்களுக்காக எடுத்துக்கொள்ளலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News