SBI அளிக்கும் சூப்பர் வாய்ப்பு: இந்த ஆவணங்களை சமர்ப்பித்து மாதம் ரூ.60,000 ஈட்டலாம்

SBI ATM Franchise: இந்த வணிகத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது ஒரு பாதுகாப்பான முறையாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 18, 2022, 11:14 AM IST
  • பாதுகாப்பான வணிக முறை.
  • எஸ்பிஐ அளிக்கும் அரிய வாய்ப்பு.
  • ஏடிஎம் ஃப்ரான்சைஸ் எடுத்து நன்றாக சம்பாதிக்கலாம்.
SBI அளிக்கும் சூப்பர் வாய்ப்பு: இந்த ஆவணங்களை சமர்ப்பித்து மாதம் ரூ.60,000 ஈட்டலாம் title=

எளிய வழியில் பணம் ஈட்டும் எண்ணம் யாருக்குத்தான் இருக்காது? நீங்களும் அதிக உழைப்பு இல்லாமல் எளிய வழியில் பணம் ஈட்ட விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கானது. 

ஒரு சிறந்த வணிக யோசனையின் மூலம், நீங்கள் மிகப்பெரிய லாபத்தைப் பெற முடியும். இந்த வணிகத்தின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது ஒரு பாதுகாப்பான முறையாகும். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) இந்த அருமையான வாய்ப்பை வழங்குகிறது.

பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் ஃப்ரான்சைஸ்
எஸ்பிஐ ஏடிஎம் ஃப்ரான்சைஸைப் பெறுவதன் மூலம் நீங்கள் வழக்கமான பணியுடன் கூடுதலாக சம்பாதிக்கலாம். எந்தவொரு வங்கியின் ஏடிஎம்-மும் வங்கியால் நிறுவப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை நிறுவி பராமரிக்க தனி நிறுவனங்கள் இருக்கும். 

இந்த நிறுவனங்கள் ஃப்ரான்சைஸ்களின் மூலம் ஏடிஎம்-ஐ நிறுவுகின்றன. பல இடங்களில் ஏடிஎம்களை நிறுவ வங்கிகள் இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றன. அதன் முழுமையான செயல்முறை பற்றி இங்கே காணலாம். 

எஸ்பிஐ ஏடிஎம் ஃப்ரான்சைஸ் பெறுவது எப்படி?
1. எஸ்பிஐ ஏடிஎம் ஃப்ரான்சைஸ் பெறுவதற்கு 50-80 சதுர அடி இடம் இருக்க வேண்டும்.
2. மேலும், மற்ற ஏடிஎம்களில் இருந்து அதன் தூரம் குறைந்தது 100 மீட்டர் இருக்க வேண்டும்.
3. ஏடிஎம் இடம் தரை தளத்தில் இருக்க வேண்டும், அனைவருக்கும் கண்ணில் படும் விதத்தில் இருக்க வேண்டும்.
4. இந்த இடத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்க வேண்டும்.
5. 1 கிலோவாட் மின் இணைப்பு இருப்பதும் கட்டாயமாகும்.
6. இது ஒரு நாளைக்கு சுமார் 300 பரிவர்த்தனைகள் செய்யும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
6. ஏடிஎம் இடத்தில் கான்கிரீட் கூரை இருக்க வேண்டும்.
7. V-SAT ஐ நிறுவுவதற்கு ஏடிஎம் இருக்கும் சொசைடி அல்லது அதாரிடியின் நோ அப்ஜெக்‌ஷன் சர்டிஃபிகேட் பெறுவது கட்டாயமாகும்.

ஏடிஎம் ஃப்ரான்சைஸுக்கு தேவையான ஆவணங்கள்
1. அடையாளச் சான்று - ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை
2. முகவரிச் சான்று - ரேஷன் கார்டு, மின்சார பில்
3. வங்கி கணக்கு மற்றும் பாஸ்புக்
4. புகைப்படம், மின்னஞ்சல் ஐடி, தொலைபேசி எண்.
5. பிற ஆவணங்கள்
6. ஜிஎஸ்டி எண்
7. நிதி ஆவணங்கள்

மேலும் படிக்க | 10ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தபால் துறையில் வேலை 

எஸ்பிஐ ஏடிஎம் உரிமைக்கு எப்படி விண்ணப்பிப்பது
நீங்கள் எஸ்பிஐ ஏடிஎம் உரிமையைப் பெற விரும்பினால், உரிமையை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று இதற்கு விண்ணப்பிக்கலாம். டாடா இண்டிகேஷ், முத்தூட் ஏடிஎம் மற்றும் இண்டியா ஒன் ஏடிஎம் ஆகியவை இந்தியாவில் ஏடிஎம்களை நிறுவ ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளன.

உரிமையாளருக்கான அதிகாரப்பூர்வ இணையதளம்
டாடா இண்டிகேஷ் - www.indicash.co.in
முத்தூட் ஏடிஎம் - www.muthootatm.com/suggest-atm.html
இந்தியா ஒன் ஏடிஎம் - india1atm.in/rent-your-space

எவ்வளவு சம்பாதிக்க முடியும்

இதன் கீழ், ஒவ்வொரு ரொக்கப் பரிவர்த்தனைக்கும் ரூ.8 மற்றும் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு ரூ.2 கிடைக்கும். அதன்படி, இதில் முதலீடின் மீது வரும் வருமானம் ஆண்டுக்கு 33-50 சதவீதம் வரை உள்ளது. உதாரணமாக, உங்கள் ஏடிஎம்மில் ஒரு நாளைக்கு 250 பரிவர்த்தனைகள் இருந்து, அதில் 65 சதவிகிதம் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் 35 சதவிகிதம் பணமில்லா பரிவர்த்தனைகள் நடந்தால், உங்கள் மாத வருமானம் 45 ஆயிரம் ரூபாய்க்கு அருகில் இருக்கும். 500 பரிவர்த்தனைகள் இருந்தால் 88-90 ஆயிரம் கமிஷன் கிடைக்கும்.

மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய செய்தி: இவற்றை செய்ய மறக்காதீர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News