முடி கொட்டுதல், நரைத்தலை குறைக்க ‘இந்த’ ஜூஸ் குடித்தால் போதும்! ஈசியா செய்யலாம்..

Drink Amla Juice Daily : நம்மில் பலருக்கு  முடி பிரச்சனை இருக்கும். அதனை சரி செய்ய சில தீர்வுகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jan 5, 2025, 04:36 PM IST
  • முடி உதிர்தலை தடுக்கும் ஜூஸ்
  • ஈசியா வீட்டிலேயே செய்யலாம்
  • அது என்ன ஜூஸ்? எப்படி செய்வது?
முடி கொட்டுதல், நரைத்தலை குறைக்க ‘இந்த’ ஜூஸ் குடித்தால் போதும்! ஈசியா செய்யலாம்.. title=

Drink Amla Juice Daily : சமீப சில காலங்களாக பலர், சந்தித்து வரும் பிரச்சனை முடி கொட்டுதல். இதனுடன் சேர்த்து பொடுகு, மற்றும் முடி வெடிப்பு போன்ற பிரச்சனைகளும் சேர்ந்துகொள்ளும். இதற்கு நமது வாழ்க்கைமுறையும் ஒரு காரணம். நம்மில் பலர் மோசமான உணவு பழக்கங்களையும், தூக்கமின்மையுடனும் இருக்கின்றோம். அதே போல காற்று மாசு பிரச்சனையும் இருக்கிறது. முடி வெடிப்பு பிரச்சனைக்கு இதுவும் ஒரு பெரிய காரணமாகும். 

கொஞ்சம் வயதானவர்களுக்கு இந்த பிரச்சனை வந்தால் பரவாயில்லை. ஆனால், இளம் வயதில் இருப்பவர்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் இளநரை பிரச்சனை, பலவீனமான முடி பிரச்சனைகளாலும் சிலர் அவதிப்படுகின்றனர். இதற்கு காரணம், உடலில் அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்து இல்லாததுதான்.

முடி பிரச்சனைகளுக்கு காரணம்:

முடி கொட்டுவதற்கான காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதுதான் எனக்கூறப்படுகிறது. நாம் சரியாக உணவை எடுத்துக்கொண்டு, சீரான டயட்டில் இருந்தால் முடி பிரச்சனைகளை தவிர்க்கலாம். 

ஒரே ஜூஸ்!

நாம், உடலுக்கு முடிக்கும் ஏதுவான உணவுகளை சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டியதும் அவசியமாகும். இது, முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதோடு மட்டுமன்றி, முடிக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் இது வழங்குகிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி, புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவை முடிக்கு ஊட்டமளித்து அவை கொட்டாமல் இருக்க உதவி புரிவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

இது மட்டுமல்ல, நெல்லிக்காயில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்ஸ் பண்புகள் நமக்கு முடி கொட்டவும், முடி வலுவிழக்கவும் காரணமாக இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்ஸை எதிர்த்து போராட உதவுகிறது. இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடிஹ்து வர, இது முடி பிரச்சனைகளை தீர்க்க உதவுமாம்.

எப்படி செய்வது? 

தேவையான பொருட்கள் என்னென்ன? 

நெல்லிக்காய்-3
புதினா-4 இலைகள்
இஞ்சி-சிறிய துண்டு
சர்க்கரை-1 டீஸ்பூன்
தண்ணீர்-தேவையான அளவு

Amla Juice

செய்முறை: 

நெல்லிக்காய் ஜூஸ் செய்ய, முதலில் இதையும் இஞ்சியையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.  

புதினா இலைகளை நசுக்கி, ஒரு கப் தண்ணீரில் கலக்க வேண்டும். 

அதனுடன் நெல்லிக்காய் மற்றும் இஞ்சி சாறு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்

இந்த ஜூஸை அடிக்கடி குடித்து வந்தால், முடி கொட்டுவதை தவிர்க்கலாம் என அதை பயன்படுத்தியவர்கள் கூறுகின்றனர். 

எப்போது குடிக்க வேண்டும்? 

நெல்லிக்காய் ஜூஸை, தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் குடலுக்கும் நல்லது முடிக்கும் நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

எப்படி உதவும்?

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ ஆகியவை முடிக்கு நன்மை அளிக்க உதவுமாம். காரணம், இது உச்சந்தலையில் இருக்கும் மயிர்க்கால்களை வலுவாக்க தூண்டி, முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும், உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி உதிரும் பிரச்சனையை தடுக்கவும் இது உதவுகிறது. 

அது மட்டுமல்ல, இளநரை பிரச்சனையை சமாளிக்க நெல்லிக்காயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு சக்தி உதவுமாம். இதனால் உச்சந்தலையில் எந்தவிதமான தொற்று ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டு, பொடுகு பிரச்சனையையும் இது குறைப்பதாக கூறப்படுகிறது.

மேற்கூறிய பிரச்சனைகள் மட்டுமல்லாமல், முடி சேதமடைதலை சரிசெய்யவும், வறண்ட அல்லது காய்ந்த முடி பிரச்சனைகளை தவிர்க்கவும் இது உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News