கொரோனா பீதிக்கு மத்தியில் ‘நாய் இறைச்சி’ திருவிழாவை துவங்கியது சீனா...

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆரம்ப புள்ளி சீனாவின் வௌவால்கள் தான் என கூறப்படும் நிலையில், தற்போது சீனர்கள் வௌவால் இறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியின் பக்கம் திரும்பியுள்ளனர்.

Last Updated : Jun 24, 2020, 03:47 PM IST
  • விலங்கு இறைச்சி சாப்பிடுவது தொடர்பாக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகளை கருத்தில் கொண்டு, யூலினில் நடைபெறும் நாய் இறைச்சி திருவிழா ‘இறுதி திருவிழாவாக’ இருக்கும்.
  • எதிர்காலத்தில் கொரோனா போன்ற ஒரு தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக, சீனர்கள் விலங்கு இறைச்சி உண்ணும் பழக்கத்தை கைவிடவேண்டும் என ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா பீதிக்கு மத்தியில் ‘நாய் இறைச்சி’ திருவிழாவை துவங்கியது சீனா... title=

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆரம்ப புள்ளி சீனாவின் வௌவால்கள் தான் என கூறப்படும் நிலையில், தற்போது சீனர்கள் வௌவால் இறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியின் பக்கம் திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் மக்கள் அனைவரையும் நிலை தடுமாற வைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றை பரப்பிவிட்டதாக சீனா குற்றச்சாட்டுகளை சந்தித்து வருகிறது. என்றபோதிலும் சீனர்கள் விலங்குகளை உண்ணும் பொழுதுபோக்கை விட்டதாக தெரியவில்லை. 

READ | கொரோனா பரவுவதை தடுக்க நாய், பூனைகளை உண்பதற்கு தடை விதிப்பு...

கடந்த ஆண்டு வுஹானில் விற்கப்பட்ட வெளவால்களின் இறைச்சி மூலம் தான் கொரோனா பரவியது என கூறப்படுகின்றன. இந்த சம்பவத்தை அடுத்து குறிப்பிட்ட வுஹான் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. எனினும் சந்தையின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் விலகவில்லை. இந்நிலையில் தற்போது சீனர்கள் யூலின் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் நாய்களின் இறைச்சி விற்க துவங்கியுள்ளது. இந்த ஆண்டு 'நாய் இறைச்சி விழாவில்' அதாவது நாய் இறைச்சி கண்காட்சியில் ஆயிரக்கணக்கான நாய்கள் படுகொலை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நாய் கறி விற்பனை அமோகமாக துவங்கியுள்ளது.

வனவிலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகளை சாப்பிடுவதை ஊக்கப்படுத்தும் அரசாங்கத்தின் பிரச்சாரம் நாட்டில் நீடிக்கும் நிலையில் இந்த கண்காட்சி தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த திருவிழாவில் நாய்கள் சித்திரவதை செய்யப்படுவது மட்டுமல்லாமல், மக்கள் கூடிவருவதால் கொரோனா பரவும் அபாயமும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும், கொரோனாவை மனதில் வைத்து, நிகழ்ச்சியில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக வைக்கப்பட்டுள்ளது என்று கண்காட்சியின் அமைப்பாளர்கள் கூறுகின்றனர். 

READ | உலகம் முழுவதும் கொரோனா பரவ Wuhan-க்கு முக்கிய பங்கு: ஒப்புக் கொண்ட WHO...

விலங்கு இறைச்சி சாப்பிடுவது தொடர்பாக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள புதிய விதிகளை கருத்தில் கொண்டு, யூலினில் நடைபெறும் நாய் இறைச்சி திருவிழா ‘இறுதி திருவிழாவாக’ இருக்கும் என்று விலங்கு உரிமை ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் கொரோனா போன்ற ஒரு தொற்றுநோயைத் தவிர்ப்பதற்காக, சீனர்கள் விலங்கு இறைச்சி உண்ணும் பழக்கத்தை கைவிடவேண்டும் எனவும் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சீனாவின் வுஹானில் கொரோனா வெடித்த பின்னர், வனவிலங்கு வர்த்தகத்தை நிறுத்தவும், செல்லப்பிராணிகளைப் பாதுகாக்க ஒரு சட்டத்தை இயற்ற சீன அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. வனவிலங்குகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் எதிர்ப்பு அலை எழுந்துள்ள நிலையில் ஏப்ரல் மாதத்தில் ஷென்சென் நகரில் நாய் உணவு தடை செய்யப்பட்டது. எனினும் தற்போது சீன வேளாண் அமைச்சகம் நாய்களை செல்லப்பிராணிகளின் பிரிவில் சேர்க்க முடிவு செய்துள்ளது. அதாவது நாய்கள் தற்போது விலங்குகள் வகையில் வராது என கூறப்படுகிறது. இருப்பினும், யூலினில் நடக்கும் இந்த திருவிழா மீண்டும் ஒருமுறை உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Trending News