Car AC Side Effects: இந்த ஆண்டு இந்தியா முழுவதும் கடுமையான வெயில் நிலவி வருகிறது. தென்னிந்தியா முதல் வட இந்தியா வரை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் எப்போதும் கூலிங்காக இருக்கும் இடங்களில் கூட இந்த ஆண்டு வெயில் அதிகரித்துள்ளது. கொளுத்தும் வெயிலை தவிர்க்க மக்கள் பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பலரும் தங்கள் வீடுகளில் ஏசியை பயன்படுத்து வருகின்றனர். அதிக வெப்பத்தால் பலர் நோய்வாய்ப்பட்டும் வருகின்றனர். இந்த சமயத்தில் முக்கிய பணிகளுக்காக மட்டும் வெளியில் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில், பைக்கில் செல்பவர்களை தாண்டி காரில் செல்பவர்களுக்கும் அதிக ஆபத்து ஏற்படுகிறது.
மேலும் படிக்க | அந்தமான் டூர் செல்ல பிளானா... குறைந்த செலவில் செல்ல உதவும் IRCTC பேக்கேஜ்..!!
பலர் வெப்பத்தை தாங்க முடியாமல் காரில் அமர்ந்தவுடன் ஏசியை ஆன் செய்கின்றனர். பலரும் வெயில் காலமாக இருந்தாலும் சரி, மழைகாலமாக இருந்தாலும் சரி காரில் அமர்ந்தவுடன் ஏசியை ஆன் செய்கின்றனர். ஆனால் இப்படி உடனே ஏர் கண்டிஷனரை ஆன் செய்வது சரியா தவறா என்பதை பலரும் உணரவில்லை. ஆனால் இதன் காரணமாக ஒருவர் பல கடுமையான நோய்களை சந்திக்க நேரிடும். இது தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் உள்ளன. நீங்களும் காரில் அமர்ந்தவுடன் ஏசியை ஆன் செய்பவராக இருந்தால் என்ன என்ன பாதிப்புகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நுரையீரல் பாதிப்பு
காரில் அமர்ந்தவுடன் ஏசியை ஆன் செய்வது உடலுக்கு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் நிற்கும் கார்களில் வெப்பநிலை நமது உடலின் வழக்கமான வெப்பநிலையை விட சற்று அதிகமாக இருக்கும். இந்த வெப்பத்துடன் ஏசியை ஆன் செய்யும் போது உடலில் வறட்சி பிரச்சினை ஏற்படலாம். மேலும் தூசி ஒவ்வாமை இருந்தால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படலாம். எனவே காரின் உள்ளே உள்ள வெப்பம் வெளியே சென்ற பிறகு ஏசி ஆன் செய்வது நல்லது.
வெப்பநிலை
நிறுத்தப்பட்டு இருக்கும் கார்களில் ஏறியவுடன் ஏசியை ஆன் செய்ய கூடாது. ஏசியின் வென்ட்கள் தினமும் சுத்தம் செய்யப்படுவதில்லை . இதுபோன்ற சூழ்நிலையில் ஏசியை ஆன் செய்தவுடன் அதில் உள்ள தூசி காருக்குள் பரவுகிறது. இது நம் உடலுக்குள் நேரடியாக சென்று தும்மல், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதனை தொடர்ந்து செய்து வந்தால் ஆஸ்துமா, சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம்.
கடுமையான பாதிப்பு
காரில் ஏறியவுடன் உடனேயே ஏசியை ஆன் செய்வதால் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். காரில் அமர்ந்தவுடன் ஏசியை ஆன் செய்யும் போது விண்டோ மூடிய நிலையில் இருக்கும். அப்போது ஏசியில் இருந்து பென்சீன் என்ற வாயு வெளியேறுகிறது. இவை நம் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. காரில் உள்ள அதிகப்படியான பாகங்கள் பிளாஸ்டிக் அல்லது ஃபைபர் மூலம் தயாரிக்கப்படுவதால் அவை சூடாகும்போது இந்த வாயு வெளியேறுகிறது. எனவே, ஏசியை ஆன் செய்தவுடன் விண்டோவை திறந்து வைக்க வேண்டும். இதனால் காருக்குள் இருக்கும் வெப்பம் மற்றும் வாயுக்கள் வெளியேறும். சிறிது நேரத்திற்கு பிறகு விண்டோவை அடைக்கலாம்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
வெயிலில் அல்லது இரவு முழுவதும் நிறுத்தப்பட்டிருக்கும் காரில் ஏறியவுடன் அனைத்து விண்டோவையும் திறந்து வைக்கவும். காரை ஸ்டார்ட் செய்த பிறகு சில நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு ஏசியா ஆன் செய்தவுடன் அனைத்தையும் மூடவும். இதனால் காருக்குள் இருக்கும் தூசி மற்றும் வாயுக்கள் வெளியேறுகின்றன.
மேலும் படிக்க | பாஜக எம்பி நடிகை கங்கனாவிற்கு ஒரு மாதத்திற்கு இவ்வளவு சலுகைகள் கிடைக்குமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ