பழைய 5 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி ஏன் நிறுத்தியது தெரியுமா?

9.00 கிராம் எடை கொண்ட பழைய ஐந்து ரூபாய் நாணயங்கள் எல்லாம் குப்ரோ-நிக்கல் வட்ட நாணயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.   

Written by - RK Spark | Last Updated : Mar 2, 2023, 11:31 AM IST
  • பழைய 5 ரூபாய் நாணயங்கள் 9.00 கிராம் எடை கொண்டவை.
  • பழைய ஐந்து ரூபாய் நாணயங்களை உருக்கி கடத்தல்காரர்கள் ப்ளேடு தயாரிக்கின்றனர்.
  • பழைய நாணயங்கள் குப்ரோ-நிக்கல் வட்ட நாணயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
பழைய 5 ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி ஏன் நிறுத்தியது தெரியுமா?  title=

நாம் சிறுவயதில் பயன்படுத்திய நாணயங்கள் அனைத்துமே தற்போது புழக்கத்தில் இல்லை, நமது முன்னோர்கள் தொடங்கி இன்றுவரை நாணயங்களின் பயன்பாடு வெகுவாக மாற்றத்தை கண்டுள்ளது. பழங்காலத்தில் பயன்படுத்திய நாணயங்களும், ரூபாய் நோட்டுக்களும் இப்போது பயன்பாட்டில் இல்லை.  நாம் சில வருடங்களுக்கு முன்னர் பயன்படுத்திய பழைய 5 ரூபாய் நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்துள்ளதை நாம் கவனித்திருக்கக்கூடும்.  9.00 கிராம் எடை கொண்ட இந்த பழைய நாணயங்கள் குப்ரோ-நிக்கல் வட்ட நாணயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.  தற்போதுள்ள ஐந்து ரூபாய் நாணயங்கள் பழைய ஐந்து ரூபாய் நாணயங்களை விட எடை குறைவானதாகவும், மெலிதனதாகவும் இருக்கின்றது.  இந்த மாற்றம் எதனால் கொண்டு வரப்பட்டது? பழைய 5 ரூபாய் நாணயம் ஏன் புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டது? என்று எப்போதாவது யோசித்து பார்த்ததுண்டா? தற்போது இந்த பகுதியில் பழைய 5 ரூபாய் நாணயங்கள் ஏன் அதிகளவில் புழக்கத்தில் இல்லை என்பதை பற்றி பார்ப்போம்.

மேலும் படிக்க | லித்தியம் அதிகம் இருக்கும் டாப் 5 நாடுகள்

இந்திய ரிசர்வ் வங்கி பழைய 5 ரூபாய் நாணயத்தை நிறுத்தியதற்குக் காரணம், வங்கதேசத்திற்கு சட்டவிரோதமான கடத்தல்தான்.  இந்த பழைய 5 ரூபாய் நாணயங்கள் உலோகத்தால் செய்யப்பட்டவை, இந்த நாணயங்களை கடத்தல்காரர்கள் வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்து வந்தனர்.  ஏற்றுமதி செய்யப்பட்டதன் காரணமாக நம் நாட்டில் நாணயத்தின் புழக்கம் வெகுவாக குறைந்தது.  பங்களாதேஷில், இந்த பழைய ஐந்து ரூபாய் நாணயங்களை  உருக்கி, ரேஸர் பிளேடுகளின் வடிவத்தில் வைத்திருக்கின்றனர்.  இந்த ஒற்றை நாணயத்தை பயன்படுத்தி 6 பிளேடுகளை உருவாக்கலாம், அந்த பிளேடுகள் ஒவ்வொன்றும் ரூ.2க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இந்த விஷயம் அரசாங்கத்துக்கு தெரியவர உடனடியாக அரசு நாணயத்தின் தோற்றத்தையும், உலோக உள்ளடக்கத்தையும் மாற்றியது.  இதனையடுத்து இந்திய ரிசர்வ் வங்கி 5 ரூபாய் நாணயங்களை முன்னர் இருந்த நாணயங்களை விட மெலிதான தோற்றத்தில் தயாரித்தது.  இந்த எடை குறைவான, பொலிவான நாணயங்களை வைத்து கடத்தல்காரர்களால் பிளேடுகள் செய்யமுடியாமல் போய்விட்டது.

coins

ஒரு நாணயத்தின் மேற்பரப்பு மதிப்பும் உலோக மதிப்பும் வேறுபடுகின்றன.  உதாரணமாக 5 ரூபாய் நாணயத்தின் மேற்பரப்பு மதிப்பு 5 ஆகும், மறுபுறம் நாணயத்தை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் உலோகத்தின் விலை அதன் உலோக மதிப்பை தீர்மானிக்கிறது.  உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உலோகத்தின் அப்போதைய சந்தை மதிப்பை பொறுத்து உலோக மதிப்பு மாறுகிறது.  பழைய 5 ரூபாய் நாணயத்தின் உலோக மதிப்பு உருகிய போது அதன் மேற்பரப்பு மதிப்பை விட அதிகமாக இருந்தது, இதனை வைத்து கடத்தல்காரர்களும் பெரியளவில் லாபத்தை சம்பாதித்தனர், ஆனால் இப்போது அது முடியாமல் போய்விட்டது.

மேலும் படிக்க | வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி! BSNL இந்த 4 ரீசார்ஜ் பேக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News