புதுடெல்லி: கொரோனா வைரஸிலிருந்து தப்பிக்க மக்கள் வீடுகளில் அடைந்துக் கிடக்கின்றனர். வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத சூழ்நிலையில் தங்களது நேரத்தை செலவிட மக்கள் பல்வேறு வகையான பொழுதுபோக்குகளையும் பின்பற்றுகிறார்கள். இதற்கிடையில், மக்களின் பொழுதுபோக்குக்காக, நாட்டின் நினைவுச்சின்னங்கள் ((Monuments) தொடர்பான வேடிக்கையான கேள்வியை ஐ.ஆர்.சி.டி.சி கேட்டுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்தப் பதிவை பகிர்ந்துள்ளது: 'ATOZOfIndiaTravel) வினாடி வினா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உங்கள் பதிலை கருத்து பெட்டியில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு நினைவுச்சின்னத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் ஐ.ஆர்.சி.டி.சி, இந்தியாவில் இந்த நினைவுச்சின்னம் எங்கிருக்கிறது தெரியுமா என்ற கேள்வியைக் கேட்டுள்ளது. அந்தக் கேள்விக்கு ஐ.ஆர்.சி.டி.சி நான்கு பதில் தெரிவுகளையும் வழங்கியுள்ளது.
Also Read | LoCயில் தீவிரவாதிகள் அதிகரிப்பால் இந்திய ராணுவம் குவிப்பு
ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த கேள்விக்கான பதில்களை சமூக ஊடக பயனர்கள் கருத்து பெட்டியில் எழுதுகிறார்கள். அதே நேரத்தில், பலர் இந்த இடத்திற்கு தாங்கள் சென்றிருப்பதாகவும் கூறி அந்த நினைவுகளை பகிர்ந்துக் கொண்டுள்லனர். சிலர், இது ஒரு நல்ல இடம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Be the first to answer this #AToZOfIndiaTravel quiz. Share in comments #TravelQuiz #IndiaTravelQuiz #IncredibleIndia #ExploreIndia #IndiaBucketList #BucketListIndia #DekhoApnaDesh #TourismDiaries
— IRCTC (@IRCTCofficial) June 27, 2020
இந்த வினாடி வினாவுக்கு சரியான பதிலை அறிந்து கொள்ளுங்கள்
ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த கேள்விக்கு சரியான பதில் பி அதாவது விக்டரி டவர் சித்தோர்கர். இதற்கு முன்பே ஐ.ஆர்.சி.டி.சி நாட்டின் கலாச்சாரம் மற்றும் நாகரிகங்கள் தொடர்பான பல கேள்விகளைக் கேட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | டெல்லியில் கோரதண்டவமாடும் பாலைவன வெட்டுக்கிளிகள்
கொரோனா வைரஸின் பரவலை கருத்தில் கொண்டு நாட்டில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் ரயில்வே சேவைகளும் நிறுத்தப்பட்டன. அத்தியவசிய சேவைகளுக்காகவே மக்கள் வெளியே வரவேண்டும் என்றும், முடிந்த வரை மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சியும் கொரோனா பரவலால் பரந்த அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த நிலையில் இவ்வாறு பொதுமக்களிடம் சமூக ஊடகங்களுடன் ஐ.ஆர்.சி.டி.சி தொடர்பு கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.