புதுடெல்லி: கால்நடை வளர்ப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ், ஆடு மாடு வளர்ப்போர் கொட்டகை அமைக்க 1 லட்சம் ரூபாய் அளவிற்குக் மானியம் வழங்கப்படுகிறது என்ற செய்தி தெரியுமா?
MGNREGA (The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) திட்டத்தின்படி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஆடு மாடு கொட்டகை கட்டுவதற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகளால் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் 100 நாள் வேலை கொடுக்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இந்த மானியத்தை பெறுவதற்கான தகுதிகள் என்ன தெரியுமா?
திட்டப் பயனாளிகள் கண்டிப்பாக 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்திருக்கவேண்டும். அவர்களிடம் குறைந்தபட்சம் 10ஆடுகள் (Goats) அல்லது 2 மாடுகள் இருக்க வேண்டும். கொட்டகைக் கட்டுவதற்கான இருக்க வேண்டும். அதுவும் யார் மானியம் (Subsidiy) கோருகிறார்களோ அவர்களின் பெயரில் நிலம் இருக்கவேண்டும் என்பது தான் MGNREGA
Also Read | Aadhaar Card-ல் எத்தனை முறை உங்கள் பெயரை மாற்ற முடியும் தெரியுமா?
திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை கொட்டகை கட்ட மானியம் பெறுவதற்கான தகுதிகள் என்ன தெரியுமா?
ஆதார் அட்டை (Adhar Card) , ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என தேவையான அடிப்படை ஆவணங்களுடன், கால்நடைகளுக்கு கொட்டகை கட்டுவதற்கான மானியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பயனாளி, தான் வசிக்கும் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரிடம் அல்லது ஊராட்சி செயலாளரிடம் பேச வேண்டும். இந்தத் திட்டம் தொடர்பான விதிமுறைகளையும், நடைமுறைகளையும் அவர்களிடம் தெரிந்துக் கொள்ளலாம்.
நீங்கள் கொட்டகை கட்டுவதற்கு ஆகும் செலவு ஒருபுறம் இருந்தாலும் நீங்கள் விண்ணப்பிக்கும் தொகை அப்படியே கொடுக்கப்படாது. விண்ணப்பதாரர்களின் சில தகுதிகளின் அடிப்படையிலேயே மானியத் தொகை வழங்கப்படும். உதாரணமாக 2 மாடுகள் வைத்திருந்தால் சுமார் 53 ஆயிரம் ரூபாய மானியம் கிடைக்கும். இதுவே உங்களிடம் இருக்கும் மாடுகளின் எண்ணிக்கை ஐந்தாக இருந்தால், மானியத்தொகை சுமார் 82 ஆயிரமாக இருக்கும்.
Also Read | ஆன்லைனில் Aadhaar Card தகவல்களை எவ்வாறு மாற்றுவது தெரியுமா?
அதாவது உங்களின் அசல் தேவைக்கு ஏற்ப மானியம் வழங்கப்படும். அதுபோல, 10ஆடுகள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும், இதுவே இருமடங்காக அதாவது 20ஆடுகள் வைத்திருந்தால் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மானியம் கிடைக்கும். மானியம் தேவைப்படும் கால்நடை வளர்ப்போர் உடனடியாக விண்ணத்து பயனடையலாம்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR