திருமண உறவில் வெளிப்படையான பேச்சுக்களும், ஒருவருக்கொருவர் தங்களது உணர்வுகளை பரிமாறிக்கொள்வதும் மிகவும் முக்கியம்தான். இருப்பினும், ஒரு சில சமயங்களில் நாம் சில விஷயங்களை கூறாமல் இருப்பதே அந்த உறவை நல்ல முறையில் எடுத்துச்செல்ல உதவும். அப்படி, ஒரு மனைவி கணவரிடமும் மனைவி கணவரிடமும் கூறக்கூடாத விஷயம் என்று சில இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
1.பிறருடன் ஒப்பிட்டு பேசுவது..
குழந்தையை வளர்க்கும் போது, அதை பிறருடன் ஒப்பிட்டு பேசக்கூடாது என நாம் கூறுவதுண்டு. அது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அனைத்து வயதினருக்கும் பொருந்தும். உங்கள் துணையை ஒரு போதும்-எக்காரணம் கொண்டும் பிறருடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. அது, நல்ல விஷயத்தில் ஒப்பிடுவதாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு நெருடலை ஏற்படுத்தும் விஷயமாக இருந்தாலும் சரி. ஒப்பிடுதல் அவர்களின் மனதில் நெகடிவான எண்ணங்களை விதைத்து விடும். அவர்களின் உணர்வுகளும் இதனால் பெரிதாக பாதிக்கப்படும். இப்படி ஒப்பிடுவதால் அவர்களை அவர்களாக நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தப்பட்டு விடும். பிறரிடம் உள்ள நிறைகளுடன் அவர்களை ஒப்பிட்டு குறை கூறுவதை விட்டுவிட்டு, உங்களின் துணையிடம் என்னென்ன நிறைகள் இருக்கிறதோ அதை மட்டும் பாருங்கள்.
2.அவர்கள் செய்யும் தவறுகளை காலம் தாழ்த்தி சுட்டிக்காட்டுதல்..
உங்கள் துணை, உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்தாலோ அல்லது ஏதேனும் உங்கள் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான விஷயங்களை செய்யும் போது அதை அப்போதே சுட்டிக்காட்டிவிட வேண்டும். பின்னர் அவர் அந்த விஷயத்தை செய்கையில், “நீ எப்போதும் இப்படித்தான் செய்கிறாய்..நீ இதை செய்வதே இல்லை..” என்று கூறும் போது அவர்களின் உணர்வுகள் புண்பட்டு விடும்.
3.காதல் ப்ளாக்-மெயில்..
ஆம், காதல் பெயரில் பலர் நமக்கு தேவையான விஷயங்களை கேட்டு வாங்கி கொள்வதுண்டு. இது ஒரு வகையான தவறான கையாளும் முயற்சியாகும். உங்களுக்கு தேவையான விஷயங்களை உங்களின் துணை மூலம் கேட்டு செய்து கொள்ளும் போது “எனக்காக இதை பண்ணு, என் மீது காதல் இருந்தால் இதை நீ செய்திருப்பாய்..” போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம். நீங்கள் செய்து தர சொல்லி கேட்கும் ஒரு விஷயத்தில் உங்களது துணைக்கு உடன்பாடு இல்லையென்றால் அதை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது. அதை விடுத்து, அவர்களை குறிப்பிட்ட விஷயத்தில் ஈடுபடுத்த முனைவது பிரிவிற்கான அடித்தளமாக அமைந்து விடும்.
மேலும் படிக்க | வேகமாக முடி வளர வேண்டுமா? ‘இந்த’ மூலிகைகளை ட்ரை பண்ணி பாருங்க!
4.அவர்களின் குணாதிசயத்தை பற்றி கூறுவது..
உங்களது துணை, பல காரணங்களுக்காக நெகடிவான அல்லது பிடிவாதமான குணாதிசயத்தை கொண்டிருக்கலாம். அதை நீங்கள் கோபமாக சுட்டிக்காட்டும் போது அவர்கள் மனதளவில் புண்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் நீங்கள் அவர்களை முழுதாக ஏற்றுக்கொள்ளாதது போன்று அவர்களுக்கு தோன்றும். இதனால், சண்டை வரும் நேரங்களில் “நீ எப்போதும் பிடிவாதமாக இருக்கிறாய், எப்போதும் இப்படித்தான் பேசுகிறய்..” என்று கூறுவதால் உறவில் விரிசல் பெரிதாகிவிடும். எனவே, அமைதியாக அமர்ந்து, அவர்களால் உங்களுக்கு எந்த மாதிரியான உணர்வு ஏற்பட்டது என்பதை விளக்கலாம்.
5.கண்டுகொள்ளாமல் இருப்பது..
சண்டைக்கு பின் பேசாமல் இருப்பது, அவர்கள் உங்களுக்காக ஏதேனும் செய்தால் அதை கண்டுகொள்ளமல் இருப்பது போன்ற விஷயங்கள் நீங்கள் அவர்களை உதாசீனப்படுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். சண்டையின் போது பலர் “ஏதாவது செய்து கொள், எப்படியாவது போ..” என்ற வார்த்தைகளை உபயோகிக்க கூடாது. அப்படி பேச வேண்டும் போல தோன்றும் போது அமைதியாக இருப்பதும் “பிறகு பேசிக்கொள்ளலாம்” என்று கூறுவதும் நல்லது. ஆகவே, சண்டை வந்த பிறகு அதை அர்த்தமுள்ள உரையாடல்கள் மூலம் சரி செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | புதிய நண்பர்களை உருவாக்குவது எப்படி? ஈசியான டிப்ஸ் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ