ஆண்களே..! காதலிக்கும் போது ‘இந்த’ 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!

Love Tips Tamil: காதல் உறவு ஆரம்பிக்கையில் சில ஆண்கள் பல தவறுகளை ஆரம்பத்திலேயே செய்வதுண்டு. இதனால் பல காதல், முறிவில் போய் முடிந்துவிடும்.   

Written by - Yuvashree | Last Updated : Oct 29, 2023, 01:15 PM IST
  • காதல் உறவில் ஆரம்பத்தில் எப்படி இருக்க வேண்டும்?
  • சில் ஆண்கள் ஒரு சில தவறுகளை செய்து சொதப்புகின்றனர்.
  • இதை தவிர்ப்பது எப்படி?
ஆண்களே..! காதலிக்கும் போது ‘இந்த’ 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்! title=

ஒரு காதல் உறவில் நுழைவது உற்சாகமானது. எந்த உறவிற்கும் ஆரம்பம் மிகவும் முக்கியம் என கூறப்படுவதுண்டு. குறிப்பாக, ஆண்கள் பலர் தங்களது உறவின் முதல் மாதத்தில் சில பொதுவான தவறுகளை அடிக்கடி செய்கிறார்கள். பின்னர் இதை நினைத்து வருந்துகிறார்கள். அவை என்னென்ன என தெரிந்து கொண்டால் நீங்கள் இந்த தவறுகளை செய்யாமல் அதிலிருந்து தப்பிக்கலாம். அவை என்னென்ன தெரியுமா? 

1.அதீத பாசம்:

சில ஆண்கள், காதல் உறவு ஆரம்பிக்கும் சமயத்திலேயே அந்த உறவின் ஆழம் வரை பேசுவார்கள். உதாரணத்திற்கு, காதலிக்க ஆரம்பித்த ஒரு வாரத்திலேயே திருமணம்-குடும்பம்-குழந்தைகள் வரை பேசுவது. ஆரம்பத்திலேயே தங்களது அன்புக்குரியவரின் மீது அதீத கவனம் செலுத்துவது, அவர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பது போல நடந்து கொள்வது எல்லாம்  அதீத பாச வகையில் அடங்கும். இந்த வகையான உற்சாகம் சிறந்தது என்றாலும், அதை அதிகமாகச் செய்வது உங்கள் துணையை அதிகமாக அவர்களைத் தள்ளிவிடக்கூடும். ஆர்வத்தைக் காட்டுவதற்கும், உறவை இயல்பாக வளர்த்துக்கொள்ள இடமளிப்பதற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம்.

2.தனிப்பட்ட வாழ்க்கையை புறக்கணித்தல்:

பல ஆண்கள் ஒரு புதிய காதல் உறவில் நுழையும்போது தங்கள் சொந்த ஆர்வங்கள், பொழுதுபோக்குகள் மற்றும் நட்பை நிறுத்தி வைக்க முனைவர். உங்கள் காதலியுடன் நேரத்தை செலவிடுவது அவசியம் என்றாலும், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் ஆர்வங்களையும் பராமரிப்பதும் முக்கியமானதுதான் என்பதை மனதி வைத்துக்கொள்ள வேண்டும். அதே போல, உங்களுடன் காதல் உறவில் இருப்பவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் பிறரை புறக்கணித்து விட்டு அவர்களுக்கு அதீத மதிப்பு கொடுப்பதால் அவரும் அதையே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. இவ்வாறு செய்வதால் உங்கள் மீது காதல் கொண்டவர் அதன் பிறகு உங்களை புறக்கணிக்க நேரிடும். 

மேலும் படிக்க | கல்லீரலை காக்கும் காவலன்.. தினமும் இதை மட்டும் செய்யுங்கள்

3.பேச தவிர்ப்பது:

ஆண்கள் பெரும்பாலும் தங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஆரம்பத்தில் திறம்பட தொடர்பு கொள்வதில் தவறு செய்கிறார்கள். இந்த தகவல்தொடர்பு குறைபாடு தவறான புரிதல்கள், மற்றும் தேவையற்ற மோதல்களுக்கு வழிவகுக்கும். நம்பிக்கையையும் புரிதலையும் வளர்க்க முதல் மாதத்தில் திறந்த மற்றும் நேர்மையான உரையாடலை வளர்த்துக்கொள்வது முக்கியமானது.

4.பொருந்தக்கூடிய தன்மை:

காதல் உறவு என்றால் மிகவும் மென்மையாகவே செல்லும் என சில ஆண்கள் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நிதர்சனத்தில் அப்படி நடக்காது. நாம் காதலிக்கும் நபர் பல சமயங்களில் தவறான குணாதிசயம் கொண்டவர்களாக இருக்கலாம். அவர்களது வாழ்க்கை முறை உங்களுக்கு ஒத்துப்பட்டு வராததாக இருக்கலாம். அதனால், காதலிக்க ஆரம்பித்த முதல் வாரத்திலேயே உங்களுக்கு ஒத்து வராத விஷயங்கள் அவர்களிடம் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களது எண்ணங்கள் மற்றும் செயல்கள் ஒத்துபோகிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | உடனடியாக முடி உதிர்வை நிறுத்தணுமா? எளிய வழிகள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News