நாய் ஒரு மனிதனின் சிறந்த நண்பன். இதன் ஆழமான அர்த்தத்தை இங்கு இணைக்கப்பட்டு உள்ள காணொளி மூலம் நீங்கள் உணரக்கூடும்.
எம்.பி.ஏ மாணவி மிசிஸ் ஃபெயித் எல் ரெவிலா, தனது பேஸ்புக் பக்கத்தில் ஜூன் 30 அன்று ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை நீங்கள் பார்த்தால், உண்மையாக நெகிழ்ந்து விடுவீர்கள். ஆம், அந்த வீடியோவில் "ஒரு நாய் பிலிப்பைன்ஸ் தெருவில் தனது மாற்று திறனாளியான உரிமையாளரை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டு செல்கிறது. இந்த நாயின் மனிதாபிமானத்தை பார்க்கும் போது விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.
தகவலின்படி, சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் நபரின் பெயர் டானிலோ அலார்கோன் (வயது 46). ஓராண்டுக்கு முன்பு ஒரு பைக் விபத்தில் முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்தால், அவருக்கு நடக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. அவரது நாய் டிகோங், பிறந்ததிலிருந்து அவருடன் இருந்து வருகிறது.
இந்த டிகோங் நாய், அவரது எஜமானை சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பிறகு சாலையில் இழுத்து செல்கிறது. இவர்களை பார்த்த போது மிகவும் அழகாக இருந்தது. நாங்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். மேலும் அவரை சிகிச்சை எடுக்க வேண்டும் என கூறி உள்ளோம் என தனது பேஸ்புக் பக்கத்தில் மிசிஸ் ஃபெயித் எல் ரெவிலா தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாயின் மனிதாபிமானத்தை பலர் பாராட்டி வருகின்றனர்.