ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி மூலம் பெங்களூருவை புறம்தள்ளிய டெல்லி!

பெங்களூரு நீண்ட காலமாக இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையமாக திகழ்ந்து வந்தது.    

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2022, 02:20 PM IST
  • ஏப்ரல் 2019 மற்றும் டிசம்பர் 2021-க்கு இடையில் டெல்லியில் 5,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன
  • பெங்களூரு நீண்ட காலமாக இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையமாக திகழ்ந்து வந்தது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி மூலம் பெங்களூருவை புறம்தள்ளிய டெல்லி! title=

பொருளாதார ஆய்வு அறிக்கை 2021-22 ன் படி, இந்தியாவின் தலைநகரமாக விளங்கும் டெல்லி, ஸ்டார்ட்அப் (startup) நிறுவனங்களின் தலைநகரமாக விளங்கும் பெங்களூருவை ஓவர்டேக் செய்து முதலிடம் வகிக்கிறது.  ஏப்ரல் 2019 மற்றும் டிசம்பர் 2021-க்கு இடையில் டெல்லியில் 5,000 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் (Start up) நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, அதே சமயம் பெங்களூரில் 4514 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை அங்கு அதிகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்படுகிறது.  அந்த மாநிலத்தில் மட்டும் கிட்டத்தட்ட  11,308 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.  

starujp

ALSO READ | Google Search: கூகுளில் பெண்களின் 'TOP' தேடல்கள்..!!

பெங்களூரு நீண்ட காலமாக இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையமாக திகழ்ந்து வந்தது.  Infosys மற்றும் wipro உள்ளிட்ட நிறுவனங்கள் IT மற்றும் அறிவு சார்ந்த துறையில் நூற்றுக்கணக்கான ஸ்டார்ட்அப்களை உருவாக்கியது.  2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் டிஜிட்டல் மயமாக்குவதற்கான தேவை அதிகரித்தது, இதனால் அதிகமான தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறுவப்பட்டது.  இதன் தேவை கருதி பல நிறுவனங்கள் அதிகளவில் நிதிகளை திரட்ட தொடங்கியது.   VCCircleன் அறிக்கைபடி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 25% நிதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது.

startup

கடந்த 2021ல் தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமல்லாது, விண்வெளித் துறையிலும் கூட இடையூறு ஏற்பட்டுள்ளது.  மேலும் 2021ல் இந்தத் துறையில் 47 புதிய ஸ்டார்ட்அப்கள் தொடங்கப்பட்டு, மொத்த ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்தது.   2021-22ல் இந்தியா 14,000 புதிய ஸ்டார்ட்அப்களைச் ஆரம்பித்தது, இந்த புது வரவால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 61,400க்கு மேல் சென்றது.  இத்தகைய வளர்ச்சியின் காரணமாக அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் அமைப்பாக இந்தியா உருவெடுத்துள்ளது.  அதேபோல யூனிகார்ன்(unicorn) எண்ணிக்கையில் இந்தியாவும் இங்கிலாந்தை முந்தி சென்றுள்ளது, 2021 ஆம் ஆண்டில் 44 நிறுவனங்கள் யூனிகார்ன்களாக மாறி சாதனை படைத்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | விரைவில் இந்தியாவில் Digital Currency! டிஜிட்டல் கரன்ஸி என்றால் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News