COVID-19: தனித்திரு... தனக்காகவும்... தன்னைச் சார்ந்தவருக்காகவும்...

கொரோன பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது!!

Last Updated : Mar 24, 2020, 09:39 PM IST
COVID-19: தனித்திரு... தனக்காகவும்... தன்னைச் சார்ந்தவருக்காகவும்... title=

கொரோன பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது!!

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாகி வரும் நிலையில், கொரோன பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி நாளையில் இருந்து நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்துவதாகவும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் எந்த்ரும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போதைய நெருக்கடியான சூழலில் மக்கள் கரோனோ தொற்று நோயில்  இருந்து தங்களை, தனிமைபடுத்திக்கொள்ள கொடுத்த இந்த அவசர விடுமுறையை கருதி தாங்கள் தங்கள் குடும்பத்துடன் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இருந்தாலும், இந்த மிக மோசமான சூழலில் பயணம் செய்வது, தேவை இல்லாமல் வெளியில் செல்வது, கூட்டமாக பேசுவது, போன்ற மக்கள் சந்திக்கும் நிகழ்வு தேவையற்றது, இந்த செயல் கரோனோ நேய் பரவும் தன்மையை அதிகப்படுத்தும், அதில் உங்கள் குடும்பத்தை சார்ந்தவர் மீதும் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்புள்ளது.

சற்று சிந்தியுங்கள்..... நாம் நமது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பயணம் செய்யும் போது எதிர்பாராது நோய் தொற்று ஏற்பட்டால் நாம்மிடம் இருந்து நமது குடும்பத்திர்க்கும் பரவும் அபாயம் ஏற்படும். எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் தனது குடும்பம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் தோன்றும். அப்டி இருக்கும் பட்சத்தில், நாமே நமது குடும்பத்தினருக்கு ஏமனாக்கிவிடக் கூடாது. இப்படி பட்ட சூல்நிலையில், நாம் தெளிவாக சிந்தித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். முடிந்தவரை நாம் இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.  

தேவை எனில் இந்திய அரசு தெரிவித்திருந்த அவசர கால இலவச எண்கஇளை தொடர்பு கொள்ளவும்... கொரோனா அவசர அழைப்பு எண்கள் மற்றும் விழிப்புணர்வு எண்கள்:

தமிழ்நாடு உதவி எண் - 044-29510500

புதுச்சேரி உதவி எண் - 104 

கொரோனா தொடர்பான தகவல்களுக்கான உதவி எண் (இந்தியா) - +91-11-23978046. 

மின்னஞ்சல் முகவரி:  ncov.2019@gmail.com

இந்திய அளவிலான  கொரோனா டெஸ்க் வாட்சப் எண்: 9013151515

உலக சுகாதார நிறுவனத்தின் வாட்ஸப் எண்: +41 22 501 76 55

மக்கள் தற்போது தங்கியிருந்த இடத்திலேயே முடிந்தளவு தங்கவும்... அவ்வாறு சிரமம் ஏற்படும் பட்சத்தில் அரசு அருகில் இருக்கும் தனியார் விடுதி, கல்லூரி, பள்ளிக்கூடம் போன்றவற்றில் தற்காலிக இடம் ஏற்படுத்திதர வழிவகை செய்யலாம்... 

முடிந்தவரை பயணத்தை தவிர்த்து, தற்போது இருக்கும இடத்தில் தங்களுக்கார பாதுகாப்பை ஏற்பத்த முயற்சி செய்து தங்களையும் தங்களைசார்ந்தவர்களையும் பாதுகாப்பதே தற்போதைய பெரும் பாதுகாப்பான சேவையாக இருக்கும். 

அரசு மக்களுக்கான முகக்கவசம், கைகழுவும் சேனிடைசர் போன்றவற்றை முடிந்தளவு இலவசமாக வழக்கிடவும், தனியார் நிறுவனம் போன்றவைகளும் இதற்கான முயற்சி செய்தால் மிகவும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வெளியூரில் இருக்கும் மக்களுக்கு போதிய பாதுகாப்பும், பண வசதி மற்றும் இருப்பிட வசதி, உணவு உடை வழங்க அரசு முடிந்தளவு கவணம் செலுத்தி மக்களை பயணம் செயவதையும், மக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தாமல் இருக்க இதுவும் ஒரு உதவியாகவும் நோய் பரவும் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியும். எனவே மக்களும் மிகுந்ந ஒத்துளைப்பு வழங்கிட வேண்டும் என்பதே இன்றைய... காலத்தின் கட்டாயம்...

                                                                                                                                                                                                                                                                                                  - கீர்த்தி மாரியப்பன். 

Trending News