விரைவில் இந்தியாவில் Digital Currency! டிஜிட்டல் கரன்ஸி என்றால் என்ன?

Digital Currency: இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி புதிய டிஜிட்டல் கரன்ஸியை அறிமுகப்படுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்திருக்கிறார்.

Written by - அதிரா ஆனந்த் | Edited by - Shiva Murugesan | Last Updated : Feb 1, 2022, 01:30 PM IST
விரைவில் இந்தியாவில் Digital Currency! டிஜிட்டல் கரன்ஸி என்றால் என்ன? title=

Digital Currency: ஒரு பொருளை கொடுத்து வேறு பொருளை பெற்றுக் கொள்ளக் கூடிய பண்டமாற்று முறைதான் முந்தைய காலங்களில் அமலில் இருந்தது. அது மிக சிரமமான காரியமாக இருந்ததால் அதனை எளிமைப்படுத்த கரன்ஸி முறை அமல்படுத்தப்பட்டது. மன்னர் காலத்தில் இருந்தே தங்கம், வெள்ளி நாணயங்கள் மூலம் இந்த முறை அமலில் இருந்தாலும், இன்றைய தேதியில் மத்திய வங்கிகளின் மூலம் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் பணத்தை மக்களுக்கு விநியோகம் செய்கின்றன. அந்த பணத்திற்கு மதிப்பை வழங்குவதாக மத்திய வங்கிகள் ஒப்புதல் அளிக்கின்றன. இந்தியாவில் ரிசர்வ் வங்கி இந்த பணியை செய்கிறது.

எந்த ஒரு கரன்ஸியும் ஏதோ ஒரு அரசிடமோ, அல்லது ஒரு வங்கியிடமோ கட்டுப்பாட்டில் இருப்பதால் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத ஒரு கரன்ஸியை மக்கள் தேடினர். பல ஆண்டுகாலமாக தங்கம் இந்த வேலையை செய்து வந்தாலும் டிஜிட்டல் யுகத்தில் பிட்காயின் மூலம் டிஜிட்டல் கரன்ஸி உருவானது. 

2009 ஆம் ஆண்டு இணையத்தில் பிரபலமாக தொடங்கிய இந்த பிட்காயின் யாருடைய கட்டுப்பாட்டிலும் இயங்காது. இவ்வளவு ஏன்! இந்த பிட்காயினை கண்டுபிடித்தவர் யார் என்பது கூட இப்போதுவரை யாருக்கும் தெரியாது. எந்த ஒரு நாட்டையும் சாராமல், எந்த ஒரு நிறுவனத்தையும் சாராமல் பிட்காயின் இயங்கியதால் மக்கள் அதன்மேல் அதிக ஆர்வம் செலுத்த தொடங்கினர். இதனால் 2009 ஆம் ஆண்டு 10 ரூபாய்க்கும் குறைவாக கிடைத்த பிட்காயினின் விலை கடந்த ஆண்டு அதிகபட்சமாக 48 லட்ச ரூபாயை தொட்டது. .

ALSO READ | Budget 2022: 2022-23 மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

பிட்காயின் போலவே பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் எத்திரியம், டோஜ் காயின், சொலானா உள்ளிட்ட எண்ணற்ற க்ரிப்டோ கரன்ஸிகள் தற்போது மார்கெட்டில் வர்த்தகம் ஆகின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் திறன் வாயந்ததாக இருந்தாலும் இதற்கெல்லாம் அடிப்படை பிளாக் செயின் தொழில்நுட்பம் தான். 

இந்த க்ரிப்டோ கரன்ஸி எந்த ஒரு நிறுவனத்தையும் சாராமல் இருப்பதால் அது பல தீவிரவாத செயல்களுக்கு வித்திடுவதாக பல நாடுகள் குற்றம் சொல்லி வருகின்றன. ஆனாலும் இதனை தடை செய்வது இயலாத காரணமாகவே இருந்து வருகிறது.

ALSO READ | Budget 2022 Reaction: பட்ஜெட் மீதான முதல் எதிர்வினைகள்

இந்த கரன்ஸிகளுக்கு மாற்றாக இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி புதிய டிஜிட்டல் கரன்ஸியை அறிமுகப்படுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்திருக்கிறார். ப்ளாக் செயின் தொழில்நுட்பம்தான் இந்த கரன்ஸியிலும் பயன்படுத்தப்படும் என நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்தியாவின் இந்த புதிய டிஜிட்டல் கரன்ஸி அறிமுகப்படுத்தப்பட்டால் அது இந்திய கரன்ஸியான ரூபாயுடன் இணைப்பில் இருக்கும். ரூபாயின் மதிப்பு எவ்வளவாக இருக்கிறதோ அதே மதிப்பில் ட்ஜிட்டல் கரன்ஸியும் நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் க்ரிப்டோ கரன்ஸியின் முக்கிய நோக்கமே அது எந்த ஒரு நிறுவனத்தையும் சாராமல் இருக்கும் என்பதுதான். ஆனால் ரிசர்வ் வங்கியின் சார்பில் செயல்படுத்தப்படும் டிஜிட்டல் கரன்ஸி எந்த அளவிற்கு உலக மக்களிடையே வரவேற்பை பெறும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

ALSO READ | Union Budget 2022: மத்திய வங்கியின் மூலம் டிஜிட்டல் கரன்ஸி அறிமுகப்படுத்தப்படும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News