Cholesterol Control Tips: மனித உடலில் இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன. அதில் ஒன்று எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் எச்டிஎல் என்னும் நல்ல கொலஸ்ட்ரால் ஆகும். எல்டிஎல் கொலஸ்ட்ரால் புகைபிடித்தல் காரணமாக அல்லது உடல் எடை அதிகமாக இருந்தால் அல்லது உடலுக்கு தேவையான உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், முறையான உணவுகளை எடுத்து கொள்ளாமல் இருந்தால் ஏற்படுகிறது. மேலும் தொடர்ந்து ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடலில் எல்டிஎல் அளவு அதிகரிக்கிறது. இதனை முறையாக சரி செய்ய வேண்டும், இல்லை என்றால் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கொலஸ்ட்ரால் ஆரம்பத்தில் நரம்புகளில் படிந்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க | Weight Loss Tips: மூன்றே நாளில் 1 கிலோ எடை குறையணுமா... ‘இதை’ செய்யுங்க போதும்..!!
ஒரு மனித உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு 100 mg/dL க்கும் குறைவாக இருக்க வேண்டும். பிரஷர், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு 70 mg/dL க்கு கீழே இருக்க வேண்டியது அவசியம். கொலஸ்ட்ரால் அளவை சரியாக பராமரிக்க ஆல்கஹால், சிகரெட், கடை உணவு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் தினசரி முறையான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சமீபத்தில் கொலஸ்ட்ரால் தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு தொடர்பான வழிகாட்டுதல்களை இந்திய கார்டியாலஜிகல் சொசைட்டி ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் சொல்லும் சிகிச்சைகளை தவிர, சில இயற்கை வைத்தியம் மூலமாகவும் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும்.
கொலஸ்ட்ரால் அளவை எப்படி குறைப்பது?
கொலஸ்ட்ரால் அளவை இயற்கையான முறையில் குறைக்க தினசரி உடற்பயிற்சி அவசியம். உங்கள் உடலை எவ்வளவு அதிகம் ஆரோக்கியமாக வைத்து கொள்கிறீர்களோ, அவ்வளவு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் உயர் கொலஸ்ட்ரால் அளவு குறையும். தினசரி உடற்பயிற்சி செய்வது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவது மட்டும் இல்லாமல், மேலும் பல உடல்நல பிரச்சினைகளின் அபாயத்தையும் குறைக்கிறது. கொலஸ்ட்ரால் அளவை முறையாக பராமரிக்க சாப்பிடும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. இவை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
உடல் எடையை எப்போதும் முறையாக பராமரிக்க வேண்டும். உடல் பருமன் கொலஸ்ட்ரால் உட்பட பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்க செய்கிறது. அதனால்தான் எப்போதும் ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும். முடிந்தவரை ஹோட்டல் உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்த முடியும். மேலும் தினசரி சரியான தூக்கமும் அவசியம். இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவதன் மூலம் இரவு ஜீரண பிரச்சனையை தவிர்க்கலாம். மேலும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது எல்டிஎல் அளவைக் குறைக்கும். எனவே பழங்கள், கொண்டைக்கடலை, பீன்ஸ் போன்ற உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | Weight Loss Challenge: ஒரு மாதத்தில் 10 கிலோ எடையை குறைக்க தயாரா..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ