Actor Vikram: இத்தனை வயதிலும் இவ்வளவு இளமை..விக்ரமின் கட்டுமஸ்தான உடலிற்கு ‘இந்த’ டயட்தான் காரணமா?

கோலிவுட்டின் பிரபல நடிகர்களுள் ஒருவரான விக்ரம், இளமை குறையாத நடிகர் என பெயர் பெற்றவர். இவரது அழகின் சீக்ரெட் தெரியுமா உங்களுக்கு? 

Written by - Yuvashree | Last Updated : May 13, 2023, 06:05 PM IST
  • விக்ரம் இளமையாக இருப்பதன் காரணம்.
  • விக்ரமின் டயட் ப்ளான்.
  • விக்ரம் இளமையாக இருப்பதன் ரகசியம்.
Actor Vikram: இத்தனை வயதிலும் இவ்வளவு இளமை..விக்ரமின் கட்டுமஸ்தான உடலிற்கு ‘இந்த’ டயட்தான் காரணமா?  title=

சேது படம் முதல், இனி வெளியாகவுள்ள தங்கலான் படம் வரை திறமையான நடிப்பையும், அந்த நடிப்பிற்காக கடின உழைப்பையும் போடுபவர் விக்ரம். 

கடின உழைப்பிற்கு பெயர் போன சியான்:

1990ஆம் ஆண்டிலேயே அவர் திரையுலகிற்கு வந்துவிட்டாலும், சேது படம் வெளியான பின்புதான் இவரை எல்லோரும் திரும்பி பார்க்க ஆரம்பித்தனர். சில ஹீரோக்கள் ஒரு சில படங்களில் வித்தியாசமாக தோன்றினால், விக்ரம் சாதாரணமாக தோன்றிய படங்களே ஒரு சிலதான் இருக்கும். அந்த அளவிற்கு தனது ஒவ்வாெரு படத்திலும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்துபவர் நம்ம சியான். 

மேலும் படிக்க | பிரேக் அப் பண்ண பிளான் பண்றீங்களா... இதோ இந்த 7 டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள்!

குறிப்பாக, ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ படத்தில் ஒரு கடத்தில் கட்டு மஸ்தான உடல் பொருந்திய இளைஞராகவும் இன்னொரு கட்டத்தில் கூன் விழுந்த வயதான தோற்றமுடைய மனிதராகவும் தோன்றியிருப்பார் விக்ரம். இவருக்கு தற்போது 57 வயது ஆகிறது. இவர், இத்தனை வயதாகியும் இன்னும் இளமையான தோற்றம் கொண்டுள்ளது எப்படி என்று தெரியுமா? 

இளமையின் ரகசியம்!

படத்திற்காக மட்டுமல்ல, இளமையாக தோன்றுவதற்காகவும் விக்ரம் கடின உழைப்பை போடுபவர். தினமும் உடற்பயிற்சி செய்வதும், அதிக உடல் உழைப்பை மேற்கொள்வதும்தான் இவர் இப்போதும் இளமையாக இருக்க காரணம் என சில ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். 

ஃபைபர் டயட்:

ஐ படத்திற்காக எடையை குறைக்க, விக்ரம் ஃபைபர் அடங்கிய டயட்டை மேற்கொண்டார் என கூறப்படுகிறது. அதாவது, பழ வகைகள் மட்டுமே நிரம்பிய டயட்டை ஸ்ட்ரிக்டாக கடைபிடித்தாராம் விக்ரம். இந்த டயட்டை கடைபிடக்கையில் முழுக்க முழுக்க பழங்களை மட்டுமே உட்கொண்ட விக்ரமிற்காக பல்வேறு நாடுகளில் இருந்து பல வெளிநாட்டு பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டனவாம். ப்ளையோமெட்ரிக் எனப்படும் உடற்பயிற்சியில் அதிக தசைகளை கொண்டு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த உடற்பயிற்சியைதான் மேற்கொண்டாராம், நம்ம சியான். இந்த வகையான உடற்பயிற்சியில், ஸ்கிப்பிங், ஸ்குவாட் ஜம்ப், பர்பி உள்ளிட்ட பல வகையான பயிற்சிகள் அடங்கும். 

ஃபிட்னஸ் டரைனர்ஸ் கூறுவது என்ன?

விக்ரமின் இவ்வகையான டயட்டுகள் குறித்த சமூக வலைதளங்களில் சில ஃபிட்னஸ் ட்ரைனர்களும் அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துள்ளனர். குறிப்பாக, இரு முகன் படத்திற்காக அவருக்கு பிடித்த அனைத்து உணவுகளையும் தியாகம் செய்த விக்ரம் நிறைய பளு தூக்கும் பயிற்சிகளை மேற்கொண்டாராம். இந்த படத்தில் அவர் சில கிலோக்களை ஏற்ற வேண்டி இருந்தது. இதற்காகவும் அவர் பிரத்யேக டய்டை மேற்கொண்டாராம்.

இளம் தலைமுறையினருக்கு சியான் அட்வைஸ்:

சியான் விக்ரம், இளம் தலைமுறையினரையும் அவர்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர். விக்ரம் இதுவரை ஃபிட்டாக இல்லாமல் இருந்ததே இல்லையாம். இவர் வழக்கமாக தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்வாராம். 

மேலும் படிக்க | முதல் முறையாக ஏசி வாங்க போறிங்களா? இத கண்டிப்பா மறக்காதிங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News