சீனாவின் Weibo, Baidu செயலிககள் இந்தியாவில் தடை; app stores-ல் இருந்தும் நீக்கம்!!

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பிரச்சினைகள் காரணமாக 59 சீன பயன்பாடுகளை (TikTok, UC Browser, Beauty Plus, ShareIt, CamScanner மற்றும் பலவற்றை உள்ளடக்கியது) இந்திய அரசு ஜூன் 29 அன்று தடை செய்தது... 

Last Updated : Aug 4, 2020, 01:09 PM IST
சீனாவின் Weibo, Baidu செயலிககள் இந்தியாவில் தடை; app stores-ல் இருந்தும் நீக்கம்!! title=

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பிரச்சினைகள் காரணமாக 59 சீன பயன்பாடுகளை (TikTok, UC Browser, Beauty Plus, ShareIt, CamScanner மற்றும் பலவற்றை உள்ளடக்கியது) இந்திய அரசு ஜூன் 29 அன்று தடை செய்தது... 

ட்விட்டர் மற்றும் கூகிள் தேடல் தலங்களுக்கு மாற்றீடுகள் என அழைக்கப்படும் சீனாவின் செயலிகளில் 2 தான் Weibo மற்றும் Baidu தேடல். இவற்றுக்கு இந்தியா தற்போது தடைவிதித்துள்ளது. மேலும் தகவல்களின்படி, கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் IOS-லிருந்து அகற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டைம்ஸ் ஆப் இந்தியா (TOI) அறிக்கையின்படி, இணைய சேவை வழங்குநர்களுக்கும் இந்த இரண்டு செயலிகளையும் தடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. ஜூலை 27 ஆம் தேதி இந்திய அரசாங்கம் தடைசெய்த 47 புதிய செயலிகளில் வெய்போ மற்றும் பைடு தேடல் செயலிகளும் அடங்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரம் TOI செய்தி தளத்திற்கு கூறியதுடன், மேலும் பல செயலிகளை தடை செய்வதற்கான முடிவை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு (PM Narendra Modi) வெய்போவில் ஒரு கணக்கு இருந்தது, ஆனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவர் அதை மூடிவிட்டார். மிகவும் பிரபலமான  TikTok Lite, Likee Lite, Bigo Live Lite, Shareit Lite, CamScanner HD, Hlo மற்றும் Mi கம்யூனிட்டி போன்ற 59 செயலிகளை தடை செய்வதற்கான அரசாங்கத்தின் முதல் முடிவைப் பின்பற்றி இந்த 47 செயலிகளின் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | உங்க Health-த கண்காணிக்கலாம் ரொம்ப easy-யா: IIT-M, Helyxon-ன் புதிய கண்டுபிடிப்பு!!

இந்த 59 செயலிகளும் ஜூன் 29 அன்று தடை செய்யப்பட்டன, பின்னர் அரசாங்கம் மேலும் 47 செயலிகளை தடை பட்டியலில் சேர்த்தது, இருப்பினும், இந்த நேரத்தில் இந்த பட்டியலில் உள்ள செயலிகள் என்னென்ன என்பது பகிரங்கப்படுத்தப்படவில்லை. 47 எண்ணிக்கைக் கொண்ட இந்த இரண்டாவது பட்டியலில் உள்ள பெரும்பாலான செயலிகளில் டிக்டாக் லைட், ஷேரிட் லைட், கேம்ஸ்கேனர் HD, பயோலைவ் லைட், லைக் லைட் போன்ற தடைசெய்யப்பட்ட 59 இன் ஒரு பகுதியாக இருந்த சில செயலிகளின் குளோன்கள் அல்லது லைட் பதிப்புகளும் அடங்கும்.

இந்த செயலிகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகம் விளைவிக்கும் என்பதாலும், இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றில் சீரின்மை காரணமாக தடை செய்யப்பட்டுள்ளன. PUBG மொபைல் மற்றும் பைட் டான்ஸின் Resso போன்றவற்றை உள்ளடக்கிய மேலும் 275 சீன செயலிகளையும் அரசாங்கம் கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News