சப்பாத்தி மாவை தப்பி தவறி கூட பிரிட்ஜில் இப்படி வைத்துவிடாதீர்கள் - அது விஷமாக மாறிவிடும்

Chapati Dough Storage Mistakes: சப்பாத்தி ஆரோக்கியமாக உணவாக இருந்தாலும் அதனை தயாரிக்க செய்யப்படும் மாவை பிரிட்ஜில் வைப்பதால் மிகப்பெரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 23, 2024, 07:03 AM IST
  • பிரிட்ஜில் உணவை சேமித்து வைக்கும் வழிமுறை
  • சப்பாத்தி மாவை நேரடியாக வைக்காதீர்கள்
  • காய்கறி, பழங்களையும் பாலித்தீன் கவரில் வைக்கவும்
சப்பாத்தி மாவை தப்பி தவறி கூட பிரிட்ஜில் இப்படி வைத்துவிடாதீர்கள் - அது விஷமாக மாறிவிடும் title=

Chapati Dough Storage Mistakes: சப்பாத்தி செய்ய அதிக நேரம் எடுக்கும் என்ற காரணத்தால் பலரும் ஒரே சமயத்தில் அதிக மாவை பிசைந்துவிடுகிறார்கள். இது சமையலில் அவர்களுக்கான நேரத்தை மிச்சப்படுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும் மிச்சம் இருக்கிற மாவை வைப்பதில் தான் தவறு செய்கிறார்கள். தாங்கள் தவறு செய்கிறோம் என்பதை அறியாமலேயே தவறு செய்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். ஏனென்றால் மிச்சம் வைக்கிற மாவில் பிரிட்ஜில் வைக்கும்போது பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆட்கொள்கின்றன. அதனால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குளிர்சாதன பெட்டியில் சப்பாத்தி மாவு

சப்பாத்தி ரொட்டி மாவை குளிர்சாதன பெட்டியில் தவறாக சேமித்து வைத்தால், அது சால்மோனெல்லா மற்றும் ஈ.கோலை போன்ற நச்சு பாக்டீரியாக்களை ஏற்படுத்தும். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

மேலும் படிக்க | பெற்றோர்கள் குழந்தைகள் முன் செய்யக்கூடாத விஷயங்கள்! மீறி செய்தால் ஆபத்து..

மாவை சேமித்து வைப்பதில் செய்யும் தவறு

நீங்கள் மாவை பிளாஸ்டிக் அல்லது கிண்ணத்தில் போட்டு ஒரு தட்டில் மூடி குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தால், இந்த முறையை இன்றே விட்டு விடுங்கள். குளிர்சாதனப்பெட்டியில் உள்ள வெப்பநிலை மாவை ஆரோக்கியமற்றதாக்கும் என்று பல சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

குளிர்சாதன பெட்டியில் மாவு வைக்க சரியான வழி

மாவை குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு முன், அதை எப்போதும் காற்று புகாத கொள்கலனில் வைக்க வேண்டும். இதனால் மாவு கெட்டுப் போகாமல், ரொட்டியும் மென்மையாக மாறும். இந்த மாவு 7-8 மணி நேரத்திற்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொதுவாக பிரிட்ஜில் சேமிக்கும் வழிமுறைகள்

நீங்கள் எந்த உணவை பிரிட்ஜில் சேமித்தாலும் அதில் காற்று புகாத வகையில் வைக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை நேரடியாக பிரிட்ஜ்ஜில் வைக்காதீர்கள். பாலித்தீன் கவரில் வைத்து இறுக்கமாக கட்டி அதனை வைக்க வேண்டும். மேலும், பிரிட்ஜில் சேமித்த எந்த பொருளை எடுத்தாலும் அதனை ஒருமுறைக்கு இருமுறை சுத்தமாக கழுவிவிட்டு பயன்படுத்துங்கள். பிரிட்ஜ்ஜை சீரான கால இடைவெளியில் சுத்தம் செய்யுங்கள். மெக்கானிக்கை அழைத்து உங்கள் பிரிட்ஜ் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். இவையெல்லாம் பிரிட்ஜ் சீக்கிரம் சேதமடையாமல் இருக்கும் வழிமுறைகள் ஆகும். 

மேலும் படிக்க | தலையில் இரட்டை சுழி இருந்தா இரண்டு பொண்டாட்டியா? உண்மையான அர்த்தம் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News