சந்திரயான்-1 மூலம் நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டி இருப்பது உறுதி: நாசா

நிலவின் துருவ மண்டலங்களின் இருண்ட மற்றும் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் உறைந்த நீர் இருப்பதாக சந்திராயன் -1 விண்கலம் மூலம் தகவல்கள் கிடைத்துள்ளது என நாசா தெரித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2018, 08:36 PM IST
சந்திரயான்-1 மூலம் நிலவின் மேற்பரப்பில் பனிக்கட்டி இருப்பது உறுதி: நாசா title=

இந்திய விண்வெளித் துறையில் ஒரு கனவுத்திட்டம் சந்திரயான்-1. நிலவை ஆராய்வதற்கு சந்திரயான்-1 விண்கலம், 2008-ம் ஆண்டு, அக்டோபர் 22-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளியில் ஏவப்பட்டது. ஆனால் ஓராண்டுக்குள், அதாவது 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி முதல் சந்திரயான்-1 விண்கலத்துடனான தொடர்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இழந்து விட்டது.

இந்நிலையில், சந்திரயான்-1 தொலைந்து போகவில்லை, அது இப்போதும் சந்திரனின் மேற்பரப்புக்கு 200 கி.மீ. தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கிறது என நாசாவின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து தெரிவித்தனர்.

தற்போது இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் நிலவைக் குறித்து பல தகவல்களை அனுப்பி வருகிறது. அதன் தகவலின்படி நிலவின் துருவ மண்டலங்களின் இருண்ட மற்றும் குளிரூட்டப்பட்ட பகுதிகளில் உறைந்த நீர் இருப்பதாகவும், அவை சூரிய வெளிசத்திற்கு அப்பாற்ப்பட்ட இடத்தில் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து ஆராய இருப்பதாக நாசா நிர்வாகம் கூறியுள்ளது.

இரண்டாவது நிலவுப் பயணத்திட்டமான சந்திராயன்-2 விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News