சந்திர கிரகணம் இருந்தால் என்ன: பணமழை உங்கள் மீது பொழியப்போகிறது 3 ராசிக்காரர்களே

கிரகண காலம் பலருக்கு தீமையை செய்தாலும், சிலருக்கு அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்...  மே 16ம் தேதியன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணம் 3 ராசிக்காரர்கள் மீது கருணை காட்டும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 8, 2022, 06:04 PM IST
  • 2022ம் ஆண்டின் பூரண சந்திர கிரகணம் மே 16
  • இந்தியாவில் தெரியாது இந்த சந்திர கிரகணம்
  • விருச்சிக ராசியில் ஏற்படும் சந்திர கிரகணம்
சந்திர கிரகணம் இருந்தால் என்ன: பணமழை உங்கள் மீது பொழியப்போகிறது 3 ராசிக்காரர்களே title=

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இது முழு சந்திர கிரகணமாக இருக்கும், இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும்.

இந்த பூரண சந்திர கிரகணம் மே 16ஆம் தேதி வைகாசி மாத பெளர்ணமி நாளன்று நிகழ உள்ளது. 2022 ஆம் ஆண்டில் இரண்டு சந்திர கிரகணங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதாவது அடுத்தவாரம் (2022, மே 16) முதல் சந்திர கிரகணமும், அடுத்தது இன்னும் 6 மாதம் கழித்து நவம்பர் மாதத்திலும் நிகழும். 

மே 16-ம் தேதியன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணம் இந்தியாவில் தென்படாது, எனவே அதன் பாதிப்பும் தாக்கமும் இந்தியாவில் இருக்காது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

மேலும் படிக்க | மே 2022 மாத ராசி பலன்: மேஷம் முதல் கடகம் வரை 

அடுத்த வாரம் மே 16 அன்று விருச்சிக ராசியில், இந்த ஆண்டின் சந்திர கிரகணம் நிகழப் போகிறது. இந்தியாவில் தெரியாவிட்டாலும் இந்த கிரகணத்தின் காலம், காலை 7.02 மணி முதல் மதியம் 12.20 மணி வரை இருக்கும்.  

விருச்சிக ராசியில் சந்திர கிரகணம் 

இதற்கு முன்னதாக ஏப்ரல் 30ஆம் தேதி ஏற்பட்ட சூரிய கிரகணம் வைகாசி மாத அமாவாசை அன்று நிகழ்ந்தது. தற்போது இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் விருச்சிக ராசியில் நடக்கிறது. விசாக நட்சத்திரமும் இந்த நாளில் கூடி வருவது சிறப்பு.

இந்த சந்திர கிரகணத்தன்று, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அமைக்கும் கூட்டணி 3 ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்களைத் தருவதாக இருக்கும்.

மேலும் படிக்க | சுக்கிர பகவானின் அருளால் தொழில் மற்றும் கல்வி அமைந்தால் புதன் கிரகம் சும்மா விடுமா

இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரகிரகணம் சாதகம்

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் இந்த சந்திர கிரகணம், பல பாக்கியங்களையும் கொடுக்கும். குறிப்பாக தொழில் மற்றும் பணியிடங்களில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகள் முன்னேற்றம் அடைவார்கள், பண வரத்தும் இருக்கும். முதலீடு செய்வதற்கும் இது நல்ல நேரமாக இருக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் மிகவும் சிறப்பாக அமையும். வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறலாம். வருமானம் கூடும். பண வரவு சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் காந்தம் போல ஈர்க்கும் ஆளுமை கொண்டவர்கள்

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் சாதகமான பலனைத் தரும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஆனால், அதை சரியாக பயன்படுத்தி பலனடைவதுதான் உங்கள் கையில் இருக்கிறது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களும் வேலை செய்பவர்களும் முன்னேற்றம் அடைவார்கள், செல்வமும் செல்வாக்கும், சொல் வாக்கும் அதிகரிக்கும் நேரம் இது. பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் நல்ல நேரம் இது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News