இந்தியாவில் செல்ல பிராணிகளுடன் ரயிலில் பயணம் செய்யலாமா?

செல்ல பிராணிகளை நீண்ட தூரம் கொண்டு செல்வதற்கு ரயில் பயணங்கள் தற்போது சாவகாசமாக உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 25, 2022, 04:05 PM IST
  • சில போக்குவரத்தில் பிராணிகளை யாரும் பயணிக்க அனுமதிப்பதில்லை.
  • ரயிலில் செல்ல பிராணிகளுடன் பயணம் செய்யலாம்.
  • ஆனால் அதற்கு சில விதிமுறைகள் வைத்துள்ளது.
இந்தியாவில் செல்ல பிராணிகளுடன் ரயிலில் பயணம் செய்யலாமா? title=

வீடுகளில் செல்ல பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றை தங்களது குழந்தையைப்போல பார்த்து கொள்கின்றனர்.  அவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால், அவர்களால் செல்லப்பிராணிகளை உடன் அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, பலரும் தங்களது வீடுகளிலேயே அவற்றை விட்டு சென்று விடுகின்றனர்.  ஏனெனில் சில போக்குவரத்தில் பிராணிகளை யாரும் பயணிக்க அனுமதிப்பதில்லை, அதனாலேயே பலரும் அவர்களது செல்ல பிராணிகளை பயணத்தின் போது மிஸ் செய்கின்றனர்.  இவ்வாறு செல்ல பிராணிகளை தனியே விட்டு செல்வது மனிதர்களுக்கு மட்டுமல்ல அந்த பிராணிகளுக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.

pet

மேலும் படிக்க | தினமும் ரூ7 சேமித்தால் ரூ60000 ஓய்வூதியம் பெறலாம்! முதலீடு செய்வது எப்படி

ஆனால் தற்போது அந்த கவலை வேண்டியதில்லை, ஏனெனில் செல்லப்பிராணிகளை வைத்திருப்போருக்கு மிகவும் உற்சாகம் தரக்கூடிய பயணமாக ரயில் பயணம் மாறிவிட்டது.  ரயில்வே சேவை இப்போது உங்கள் செல்ல பிராணிகளை நீண்ட தூரம் கொண்டு செல்ல உதவுகிறது, இது மலிவான விலையிலும், மிகுந்த வசதியுடனும் அதே சமயம் பின்பற்றுவதற்கு எளிமையான சட்டதிட்டங்களையும் கொண்டுள்ளது.  ஏசி ஸ்லீப்பர் கோச், செகண்ட்-க்ளாஸ் கோச் மற்றும் ஏசி சேர் கார் கோச் போன்றவற்றில் செல்ல பிராணிகளை வைத்துக்கொண்டு பயணம் செய்யமுடியாது என்பதை வளர்ப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  பிராணிகளுடன் பயணம் செய்பவர்களுக்கென்று இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன.

pet

4 இருக்கைகள் கொண்ட கேபின் அல்லது 2 இருக்கைகள் கொண்ட கேபின் கொண்ட முதல் வகுப்பு ஏசி பிரிவில் நீங்கள் டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம்.  உங்கள் டிக்கெட் உறுதியானதும் அதன் காபியை பெற்று, உங்கள் செல்ல பிராணியுடன் பயணம் செய்வது குறித்து நீங்கள் தலைமை வணிக அதிகாரிக்கு ஒரு கடிதம் அளிக்கவேண்டும்.  மேலும் செல்ல பிராணிகளின் கழுத்துக்கான காலர், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை நீங்கள் தான் தயார் செய்து உடன் எடுத்து செல்ல வேண்டும்.  அடுத்ததாக உங்கள் பிராணிகள் உரிய காலத்தில் தடுப்பூசிகளை செலுத்தியதறகான ஆதாரங்களை எடுத்து செல்ல வேண்டும் அல்லது கால்நடை மருத்துவரிடம் செல்ல பிராணியின் உடல்நிலை குறித்த சான்றிதழையும் எடுத்து செல்ல வேண்டும்.

ரயில் புறப்படுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக உங்களுக்கான கேபினை நீங்கள் அடைய வேண்டும்.  பார்சல் அலுவலகத்திற்கு சென்று உங்களது டிக்கெட், செல்ல பிராணியின் உடல்நல சான்றிதழ், தடுப்பூசி அட்டை போன்றவற்றை காண்பிக்க வேண்டும், பின்னர் உங்கள் டிக்கெட், டாக்குமெண்ட்ஸ், அடையாள அட்டை போன்றவற்றை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.  பொதுவாக பயணத்தின் போது பிராணிகள் சரியாக உணவு உண்ணாமலும், நீர் அருந்தாமல் இருந்து மன அழுத்ததிற்கு ஆளாகின்றன,  இருப்பினும் அவை இருப்பிடத்தை அசுத்தமாக்கிவிட வாய்ப்புள்ளது, அதனால் உங்கள் செல்ல பிராணிகளை ஒவ்வொரு ரயில் நிறுத்தத்தில் நடைப்பயிற்சி அழைத்து செல்லலாம்.

மேலும் படிக்க | கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News