சமீப காலமாக, பலர் ஹெல்தியான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர். இதற்காக பலர் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது, அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது போன்ற விஷயங்களை பின்பற்றி வருகின்றனர். பலர் தங்களது உடல் அமைப்பை மாற்றும் முனைப்பில் மருத்துவர்கள் பரிந்துரைக்காத, சரியாக அங்கீகரிக்கப்படாத மருந்துகளை உட்கொள்கின்றனர். இதோடு சேர்த்து உடற்பயிற்சி செய்வதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதன் தாக்கம், முதலில் காண்பிக்கவில்லை என்றாலும் பின்னர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமாம்.
சமீப காலமாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்..
கடந்த இரண்டு ஆண்டுகளில், இளம் வயதில் இருப்பவர்கள் பலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் செய்திகள் அடிக்கடி வலம் வருகின்றன. அதிலும், சில இளைஞர்கள் உடற்பயிற்சி கூடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டும், மயக்கமடைந்தும் உயிரிழக்கும் செய்திகளையும் பார்க்க முடிகிறது. இந்த நிலையில், அதீத உடற்பயிற்சிகளால் ஏற்படும் விளைவுகளையும் அதை எப்படி சமாளிக்கலாம் என்பதையும் இங்கு பார்க்கலாம்.
உடற்பயிற்சியும் இதயமும்:
பல ஆண்டுகளாக பலரை வைத்து மருத்துவ ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் தினசரி உடற்பயிற்சி செய்பவர்களையும் உடற்பயிற்சி செய்யாதவர்களையும் வைத்து மருத்துவ ஆய்வினை மேற்கொண்டனர். அதில், உடற்பயிற்சி செய்வதால் நேரடியாகவும் மறைமுகமாகவும் இதய ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது.
அதீத உடற்பயிற்சியில் ஈடுபடலாமா?
ஆரோக்கியமான இதயம் உள்ள ஒருவருக்கு திடீர் மாரடைப்பு அரிதாகவே ஏற்படுவதாக கூறப்படுகிறது. கண்டறியப்படாத இதய நோய் உள்ள நபர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கு உடற்பயிற்சி தூண்டுதலாக இருக்கலாம் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அது ஒருபோதும் காரணமாக இருக்காது. மேலும் இவை அனைத்தும் தனிநபரின் பயிற்சி அளவைப் பொறுத்ததாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. அதிக அளவு பழக்கமில்லாத உழைப்பை ஒருவர் தவிர்க்க வேண்டும், எந்த ஒரு உடற்பயிற்சியும் முந்தைய பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது பத்து சதவீதத்திற்கு மேல் அதிகமாக இருக்கக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | ஜாக்கிரதை! வீட்டில் இருந்து வேலை பார்ப்பவரா நீங்கள்? ‘இந்த’ பிரச்சனைகள் வருமாம்..
மாரடைப்பிற்கான அறிகுறிகள்:
மாரடைப்பு ஏற்படும் முன்பு பயங்கரமாக மூச்சு வாங்கும். இதனால் நெஞ்சு வலி, அசௌகரியம் போன்ற உணர்வுகள் ஏற்படும். தாடை பகுதி, கழுத்து பகுதி, முதுகுப்பகுதி, கை மற்றும் தோள்பட்டைகளில் வலியெடுக்கும். வாந்தி வருவது போன்று உணர்வு ஏற்பட்டு தலை சுற்ற ஆரம்பிக்கும். திடீர் சோர்வும் ஏற்படும்.
மேற்குறிப்பிட்டுள்ள வேறு நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.
வீட்டில் மசாஜ் செய்யுங்கள்”
வழக்கமான உடற்பயிற்சி சிறந்த ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, மேலும் இந்த உடற்பயிற்சி மக்களால் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படலாம். உடற்பயிற்சிகளில் குறைந்த மட்டத்தில் தொடங்கி படிப்படியாக, மிதமான நிலைக்கு முன்னேறுவது முக்கியம். நீங்கள் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட விரும்பினால், அவ்வாறு செய்வதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் உங்கள் உடலை மதிப்பாய்வு செய்வது முக்கியமானதாக இருக்கும். உடற்பயிற்சியின் போது, ஏதேனும் அசௌகரியம் அல்லது அசாதாரண அறிகுறிகளை உணர்ந்தால், அப்படியே நிறுத்தி உங்களை சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | குழந்தைகளுக்கும் வரும் மாரடைப்பு! இந்த அறிகுறிகள் இருந்தால் புறக்கணிக்க வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ