7th Pay Commission: மீண்டும் ஒரு டிஏ ஹைக், 46% ஆக ஏற்றம், குஷியில் ஊழியர்கள்

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் உயரவுள்ளது. இந்த முறையும் இதில் 4% அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 26, 2023, 10:04 AM IST
  • மார்ச் மாதத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியுள்ளது.
  • இதன் மூலம் அவர்களின் தற்போதைய அகவிலைப்படி 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.
  • இப்போது மீண்டும் அவர்களது அகவிலைப்படியில் ஏற்றம் இருக்கும்.
7th Pay Commission: மீண்டும் ஒரு டிஏ ஹைக், 46% ஆக ஏற்றம், குஷியில் ஊழியர்கள் title=

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை மீண்டும் உயர்த்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அகவிலைப்படி 3% அல்லது 4% என்ற விகிதத்தில் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. ஆண்டின் இரண்டாவது பாதியில் செய்யப்படும் இந்த அகவிலைப்படி உயர்வு, தீபாவளி பண்டிகைக்கு முன் அறிவிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். இரண்டாம் தவணையை உயர்த்துவதற்கான ஏற்பாடுகள் அரசால் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முறை டிஏ 46 சதவிகிதமாக அதிகரிக்கலாம்.

இந்த ஆண்டு இறுதிக்குள், மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு பல பெரிய பரிசுகளை வழங்கலாம். அவற்றை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரக்கூடும். வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை கருத்தில்கொண்டு இந்த கணிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கியமான பரிசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிப்பாக இருக்கும். 

இது தவிர, ஊழியர்களின் ஃபிட்மெட் ஃபாக்டரும் அதிகரிக்கக்கூடும். இது மட்டுமின்றி, மற்ற கொடுப்பனவுகளை அதிகரிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம். இதற்கு முன், 2004க்கு முன், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின் பேரில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அகவிலைப்படியை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள்

மார்ச் மாதத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் அவர்களின் தற்போதைய அகவிலைப்படி 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்போது மீண்டும் அவர்களது அகவிலைப்படியில் ஏற்றம் இருக்கும். புதிய கணக்கீட்டின் மூலம், அவர்களது அகவிலைப்படியை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் நேரடி பலன்கள் ஊழியர்களுக்கு கிடைக்கும். 

ஊடக அறிக்கைகளின்படி, அரையாண்டு ஜூலை 2023 க்கு, இந்த பணவீக்க முடிவு மூன்று அல்லது நான்கு சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரிக்கப்படலாம். தற்போது, பிப்ரவரி மாதத்திற்கான AICPI தரவு வெளியிடப்பட்டுள்ளது, மார்ச் மாதத்திற்கான AICPI தரவு ஏப்ரல் இறுதியில் வெளியிடப்படும். அகவிலைப்படி அதிகரிப்பு AICPI தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: 3 நாட்களில் சூப்பர் செய்தி, மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு

அகவிலைப்படி கணக்கீடு சூத்திரத்தில் மாற்றங்கள்

ஜூலை முதல் டிசம்பர் வரையிலான இரண்டாம் பாதியில் அகவிலைப்படியில் 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிப்பு இருக்கலாம். அதன் ஒப்புதலை பொதுவாக செப்டம்பர் இறுதிக்குள் அரசு வழங்கும். இது நடந்தால் ஊழியர்களின் அகவிலைப்படி 42ல் இருந்து 46 சதவீதமாக உயரும். இதனுடன், பல புதிய முறைகளின் கீழ் வளர்ச்சியை தீர்மானிக்க முடியும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு தொழிலாளர் அமைச்சகத்தால் அகவிலைப்படி கணக்கீடு சூத்திரம் மாற்றப்பட்டது. இதற்காக அகவிலைப்படியின் அடிப்படை ஆண்டும் புதுப்பிக்கப்பட்டது.

தற்போது பிப்ரவரி வரை 44 சதவீத அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

தற்போதைய AICPI புள்ளிவிவரத்தைப் பற்றி பேசுகையில், இந்த எண்ணிக்கை இப்போது 43.79 ஐ எட்டியுள்ளது. தற்போது பிப்ரவரி வரை 44 சதவீத அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத புள்ளிவிவரங்கள் எப்படி வருகின்றன என்பதை இப்போது பார்க்க வேண்டும். ஏப்ரல் 30ஆம் தேதி மாலைக்குள் மார்ச் மாதத்தின் புள்ளிவிவரங்கள் தெரியவரும்.

சம்பள உயர்வு

ஜூலையில், பணவீக்க விகிதம் 4 சதவீதம் அதிகரிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு இருக்கும். ஒரு பணியாளரின் அடிப்படை சம்பளம் ரூ.18000 எனில், அவரது ஊதியத்தில் மாதத்திற்கு ரூ.720 உயர்வு இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், பணியாளர்கள் ஆண்டுக்கு ரூ.8280 ஊதிய உயர்வைக் காணலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... அடிப்படை சம்பளத்தில் அதிரடி ஏற்றம், ஊழியர்களுக்கு மாஸ் அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News