BSNL அதிரடி: வெறும் ரூ.18-ல் துவங்குகின்றன அட்டகாச திட்டங்கள்

பி.எஸ்.என்.எல் இன் மிகச்சிறந்த மலிவான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இவை குறைந்த கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புடன் இன்னும் பல நன்மைகளை வழங்குகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 12, 2021, 03:07 PM IST
  • பி.எஸ்.என்.எல் பல மிகச்சிறந்த மலிவான திட்டங்களை வழங்குகிறது.
  • பிஎஸ்என்எல்-லின் ரூ .99 திட்டத்தில் 22 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு கிடைக்கிறது.
  • பிஎஸ்என்எல்-லின் ரூ .118 திட்டம் 26 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
BSNL அதிரடி: வெறும் ரூ.18-ல் துவங்குகின்றன அட்டகாச திட்டங்கள்  title=

Best Recharge Plans:  ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல மலிவான மற்றும் வரம்பற்ற தரவுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால் பல பயனர்கள் தரவுத் திட்டங்களை விட வரம்பற்ற அழைப்புகளுக்கான திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். 

கொரோனா (Coronavirus) காலத்தில், வீட்டிலிருந்து வேலை செய்யும் செயல்முறை அதிகமாக இருப்பதால், கிட்டத்தட்ட அனைவருக்கும் வீட்டில் பிராட்பேண்ட் வசதி இருக்கின்றது, ஆகையால், மக்கள் வரம்பற்ற அழைப்புக்கான திட்டத்திலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

பி.எஸ்.என்.எல் இன் மிகச்சிறந்த மலிவான திட்டங்களைப் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம். இவை குறைந்த கட்டணத்தில் வரம்பற்ற அழைப்பை வழங்குகின்றன. பிஎஸ்என்எல்லின் (BSNL) இந்த மலிவான திட்டங்கள் ரூ .18 முதல் ரூ .31 வரை உள்ளன. இந்த திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பிஎஸ்என்எல்லின் ரூ .18-க்கான மலிவுத் திட்டம் 

பிஎஸ்என்எல்லின் மலிவான வரம்பற்ற அழைப்பு திட்டம் 18 ரூபாய்க்கானதாகும். இது இரண்டு நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் நீங்கள் இரண்டு நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பைப் பெறலாம். மேலும், தினமும் 1 ஜிபி தரவு, அதாவது மொத்தம் 2 ஜி பி தரவு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். 

இதற்கு அடுத்தபடியாக ரூ .29 திட்டம் வருகிறது. இந்த திட்டம் 5 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் 1 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகிய வசதிகளும் இதில் கிடைக்கின்றன. 

ALSO READ:BSNL புதிய சலுகை அறிவிப்பு, ரூ. 45 விலையில் இத்தனை நன்மைகள்

பி.எஸ்.என்.எல்-லின் ரூ .99 திட்டம்

பிஎஸ்என்எல்லின் ரூ .99 திட்டத்தில் 22 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு (Unlimited Calling) கிடைக்கிறது. இதனுடன் வாடிக்கையாளர்கள் 99 எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கான நன்மையையும் பெறலாம். 22 நாட்களுக்கு வாடிக்கையளர் விரும்பும் அளவு கால் செய்யலாம். 

அதன் பிறகு ரூ .118 திட்டம் உள்ளது. இந்த திட்டம் 26 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 0.50 ஜிபி தரவு கிடைக்கிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதியும் இதில் உண்டு.

ரூ .147 மற்றும் ரூ 319 திட்டங்கள்

30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை நீங்கள் பெற விரும்பினால், பி.எஸ்.என்.எல்-லின் 147 ரூபாய் பிஎஸ்என்எல் குரல் வவுச்சரை பெறலாம். இதில் 30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்போடு 10 ஜிபி தரவும் கிடைக்கிறது. 

அடுத்தபடியாக ரூ 319 திட்டம் உள்ளது. இந்த திட்டம் 75 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் இதில் 99 எஸ்எம்எஸ் மற்றும் 10 ஜிபி தரவிற்கான நன்மையும் கிடைக்கிறது.

ALSO READ: அரண்டுபோன Airtel, Jio, Vi; BSNL புதிய அசத்தல் திட்டம் அறிமுகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News