புதுடில்லி: நாட்டின் ஒரே அரசு தொலைத் தொடர்பு சேவை வழங்குநரான பி.எஸ்.என்.எல் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்காக சிறந்த திட்டங்களைத் தொடங்கி வருகிறது. தொலைதூர பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு, BSNL சமீபத்தில் பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டங்களில் குறைந்த கட்டணத்தில், வாடிக்கையாளர்கள் அதிக அளவிலான இணையத்தை (Internet) பயன்படுத்தலாம். பிஎஸ்என்எல்லின் இணையத் திட்டங்களை (Intern Plans) பார்ப்போம் ...
(Intern Plans) 79 ரூபாய் பிளான்
பிஎஸ்என்எல்லின் மலிவான திட்டம் 79 ரூபாய் மட்டுமே. இந்த திட்டம் எட்டு நாட்கள் செயல்படும். இதில், வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜிபி தரவு கிடைக்கும்.
இதனுடன், இந்த திட்டத்தில் பயனருக்கு வரம்பற்ற அழைப்பு வசதியும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 3 ஜி தரவு தீர்ந்துவிட்ட பிறகு பயனர்கள் 80kbps வேகத்தை தொடர்ந்து பெறுவார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் இந்தத் திட்டம் தற்போது ஒரு சில இடங்களில் கிடைக்கிறது.
BSNLஇன் 247 ரூபாய் பிளான்
தினசரி 3 ஜிபி டேட்டாவுடன் ஒரு திட்டத்தை ரூ .247 க்கு வழங்குகிறது பிஎஸ்என்எல். எத்தனை நேரம் வேண்டுமானாலும் பேசலாம். அதாவது அழைப்புக்கு வரம்பு ஏதும் இல்லை. இந்தத் திட்டம் நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து வட்டங்களிலும் கிடைக்கிறது. இந்த திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபாரிலும் கிடைக்கிறது.
Also Read | WhatsApp லேண்ட்லைன் எண்ணில் இருந்தும் செயல்படும்... எப்படி? இதோ தெரிந்துக் கொள்ளுங்கள்..