Breathing Problems: மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் அது அவரின் உயிருக்கே ஆபத்து ஆகும். அதனால் சில அடிப்படையான விஷயங்களை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இப்போதெல்லாம் அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்தால், காற்று மாசு, புகை காரணமாக சுவாசப்பிரச்சனைகள் பொதுவானதாகிவிட்டது. அப்படியான சூழலில் நீண்ட தூரம் நடக்கவும், ஓடவும் முடியாது. இது குறித்து மருத்துவரின் ஆலோசனை செய்வது அவசியம். அதேநேரத்தில் சில நேரங்களில் எடுத்துக் கொள்ளும் உணவு காரணமாக கூட சுவாசப் பிரச்சனைகள் வரலாம். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் நிகல் தெரிவித்துள்ள காரணங்களையும் உணவுப் பொருட்களையும் தெரிந்து கொள்வோம்.
1. பால்
பால் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஏனெனில் அதில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன, ஆனால் உங்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் இருந்தால், இதை குடிப்பதை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அது பிரச்சனையை அதிகரிக்கும். மருத்துவரின் ஆலோசனை அடிப்படையில் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம்.\
மேலும் படிக்க | வாழ்வில் உருப்பட விரும்பினால் ‘இந்த’ 6 பேரை ப்ளாக் பண்ணுங்க!! யார் யார் தெரியுமா?
2. உப்பு
தினசரி உணவில் குறந்த அளவேனும் உப்பை சாப்பிட வேண்டும். அதேநேரத்தில் இதில் அதிக சோடியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், தொண்டையில் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது, இதன் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
3. மது
ஆல்கஹால் ஒரு சமூக தீமை மட்டுமல்ல, இது நம் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது, இது பொதுவாக கல்லீரலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. அத்துடன் இதய பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படக்கூட வாய்ப்பு இருக்கிறது.
4. வெற்றிலை பாக்கு
வெற்றிலையை உட்கொள்வதைத் தவிர்க்க எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. இது வாய் புற்றுநோயை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வக்கிறது. இதனால் கூட மூச்சுத் திணறல் ஏற்படும்.
மூச்சுத் திணறல் இருப்பவர்கள் மருத்துவரை சந்தித்து ஆலசோனை பெற்றுக் கொள்வது சிறந்தது. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் ஏதாவது ஒரு நோயுடன் தொடர்புடையவர்களுக்கு சாப்பிடாத பொருட்களாக இவை இருக்கலாம். அதேநேரத்தில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை முழுவதுமாக அறிந்து கொண்டு அதனடிப்படையில் நீங்கள் இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.
மேலும் படிக்க | Anti-Ageing Tips: 60+ வயதிலும்... இளமையாக இருக்க... நீங்கள் சாப்பிட வேண்டியவை..!!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தரவுகளைஅடிப்படையாகக் கொண்டவை. இவற்றிற்கு ZEE செய்தி எந்த வகையிலும் பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ