14 வயது சிறுமியை திருமணம் செய்த 52 வயது முதியவரின் திருமணம் செல்லும் என மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது!!
மும்பையை சேர்ந்த ஒருவர் 2014 ஆம் ஆண்டு, 14 வயது சிறுமியை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் மாப்பிள்ளை, சிறுமியின் தாத்தா, பாட்டி ஆகியோரை கைது செய்தனர். இதையடுத்து, அவர்கள் மூவரும் ஜாமினில் வெளிவந்துள்ளனர். தற்போது அந்த சிறுதி, மேஜர் ஆகிவிட்டதால், தன்னை திருமணம் செய்த நபருடனே சேர்ந்து வாழ விரும்புவதாகக் கூறி, மும்பை செஷன்ஸ் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எதிர் தரப்பின் வாதத்தையும் கேட்டனர்.
அப்போது சிறுமியாக இருந்த போது, அந்த பெண்ணை திருமணம் செய்த நபர், அந்த பெண்ணின் பெயரில், 6 ஏக்கர் நிலம் எழுதி வைத்துள்ளதாகவும், மேலும், 5 ஏக்கர் நிலம் எழுதி வைப்பதாகவும் கூறினார். மேலும், அந்த பெண்ணின் எதிர்கால நலன் கருதி, அவரது வங்கிக் கணக்கில், 7.5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்துவதாகவும் கூறினார்.
இதை கேட்ட நீதிபதிகள்; ‛‛சிறுமியாக இருந்த போது அவரை திருமணம் செய்த நபர், குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதற்கு உடந்தையாக இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது அந்த சிறுமி மேஜர் ஆகிவிட்டார். அவருக்கு ஏற்கனவே திருணம் ஆகிவிட்டது என்பதால், சமுதாயத்தில் இனி அந்த பெண்ணை வேறு யாரும் திருமணம் செய்ய முன் வரமாட்டார்கள். மேலும், சிறுமியாக இருந்த போது தன்னை திருமணம் செய்வரை, தற்போது கணவராக ஏற்பதாக அந்த பெண்ணே சம்மதம் தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணின் எதிர்கால நலன் கருதி, அவருக்கு நிலமும், பணமும் வழங்க அவரை திருமணம் செய்த நபர் சம்மதம் தெரிவித்துள்ளார். எனவே, அந்த பெண், தன்னை திருமணம் செய்த நபருடனே சேர்ந்து வாழலாம் என தீர்ப்பளிக்கிறோம்’’ இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.