பலூன்களால் கவர்ந்திழுக்கும் மனிதனை சந்திக்கவும்: 50,000 பலூன்களுடன் 50 வருட காதல்
அழகான பெண்களைப் பார்த்தால் ஜொல்லு விடும் ஆண்களைப் பற்றித் தெரிந்திருக்கும். ஜொல்லு விடும் பெண்களும் விதிவிலக்கல்ல. அதேபோல, ஓரின ஈர்ப்புக் கொண்டவர்கள் பற்றிய தகவல்களும் தரவுகளும் இன்று இயல்பானதாகிவிட்டன.
ஆனால், பலூனை காதலிக்கும் மனிதரைப் பற்றியோ அல்லது அவருடைய பாலியல் கூட்டாளியாக இருப்பது பலூன் என்று சொல்லும் மனிதரைப் பற்றித் தெரியுமா?
ஒரு "அழகான பலூனை" பார்க்கும்போது, தனது இதயம் படபடப்பதாக அவர் சொல்கிறார்., மேலும் அவர் வண்ணமயமான லேடெக்ஸ் (colourful latex) உடனான தனது 50 ஆண்டுகால காதலைப் பற்றி பேசுகிறார்.
மேலும் படிக்க | இன்ஸ்டா மூலம் 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய காதல் சைகோ
தொலைக்காட்சி நேரலை ஒன்றில் பேசிய ஜூலியஸ், பலூன்கள் மீதான தனது காதல் (Love Maters) மற்றும் அவற்றிற்கு பாலியல் அடிமையானதை பற்றி பேசினார். "அழகான, மென்மையான, நுணுக்கமான, வளவளப்பான மற்றும் சென்சிடிவான பலூன்கள்" மீது தனக்கு பாலியல் ஈர்ப்பு" ஏற்பட்டுவிட்டதாக கூறுகிறார்.
பலூனைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவேன், அது சொர்க்கத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் என்று சொல்கிறார்.
ஜூலியஸ் தனது வீட்டில் உள்ள 50,000 பலூன்கள் ஒவ்வொன்றுடனும் தனக்கு ஒரு சிறப்பு "இணைப்பு" இருப்பதாகக் கூறுகிறார்.
பெரும்பாலான தனிநபர்களைப் போலவே, அழகை ஆராதிக்கும் அல்லது அழகிகளை விரும்பும் ஒரு மனிதனுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுகிறார் இந்த பலூன் காதலர்.
தினமும் இரவில் பொம்மைகள் நிறைந்த அறையில் தூங்குவதாகக் கூறும் அவர், அதுதான் தனக்கு நிம்மதியைக் கொடுப்பதாக கூறுகிறார்.
மேலும் படிக்க | மிதாலி ராஜ் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? அவருடைய முதல் காதல்
"பலூன்கள் உயிருடன் இல்லை என்று எனக்குத் தெரியும், ஆனால் சில சமயங்களில் அவை என் அன்பினால் உயிருடன் வருவதாக உணர்கிறேன், அது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது" என்று ஜூலியஸ் விளக்கினார்.
சரி, ஜூலியஸின் பலூன் மீதான மோகம் எப்போது தொடங்கியது தெரியுமா? நான்கு வயது சிறுவனாக இருந்தபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது தனது பலூனுக்கும் தனக்குமான காதல் விவகாரம் தொடங்கியதாகக் கூறுகிறார் இந்த வித்தியாசமான காதலர்.
நான்கு வயதாக இருக்கும்போது, ஜூலியசுக்கு அவரது அம்மா நீல நிற பலூனை பரிசாக கொடுத்தார். நீல நிற அழகிய பலூனில் தொடங்கிய காதல், 50 வயதிலும் தொடர்கிறது. இது பலூன் காதல், ஆனால், பட்டால் பட்டென்று உடைந்துவிடாத நீண்ட காதல்...
மேலும் படிக்க | மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால்; கட்டுப்படுத்துவது எப்படி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR