Ludo Game-ல் தன்னை ஏமாற்றியதாகக் கூறி தந்தைக்கு எதிராக Family Court-க்கு போன மகள்!!

மத்திய பிரதேசத்தில் தனது தந்தை தன்னுடன் ஆடிய லூடோ விளையாட்டில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டிய 24 வயது பெண், தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போபால் குடும்ப நீதிமன்றத்தை சனிக்கிழமை அணுகினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 27, 2020, 02:02 PM IST
  • நாம் நம் வாழ்க்கையில் பல வித விசித்திரமான சம்பவங்களைப் பார்க்கிறோம்.
  • விளையாட்டில் ஏமாற்றியதாக தந்தையை நீதிமன்றத்திற்கு இழுத்தார் மகள்.
  • நீதிமன்ற ஆலோசகர் சரிதா அந்தப் பெண்ணுடன் நான்கு சுற்று ஆலோசனை அமர்வுகளை நடத்தினார்.
Ludo Game-ல் தன்னை ஏமாற்றியதாகக் கூறி தந்தைக்கு எதிராக Family Court-க்கு போன மகள்!!  title=

நாம் நம் வாழ்க்கையில் பல வித விசித்திரமான சம்பவங்களைப் பார்க்கிறோம். இப்படிக் கூட நடக்குமா என ஆச்சரியமடைகிறோம். மனிதர்கள் இப்படிக் கூட செய்வார்களா என அதிர்ச்சியடைகிறோம். இவற்றில் சில நிகழ்வுகள் நம்மை ஆச்சரியப்படுத்தி, ஊகுவித்து, நமக்குள் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. சில நிகழ்வுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி நமது சிந்தையை சோர்வடையச் செய்கின்றன.

மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) நடந்துள்ள ஒரு விசித்திரமான சம்பவம் பற்றி இங்கே காணலாம். இதில், தனது தந்தை தன்னுடன் ஆடிய லூடோ விளையாட்டில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டிய 24 வயது பெண், இதற்காக தனது தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போபால் குடும்ப நீதிமன்றத்தை (Family Court) சனிக்கிழமை அணுகினார்.

அவர் நீதிமன்றத்தை அணுகுவதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டபோது, ​​24 வயதான அவர், தான் தனது தந்தையை நம்பியதாகவும், அவர் ஏமாற்றுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.

ALSO READ: இப்படியும் சில மனிதர்கள்: பறவைக்காக இருளைத் தழுவிக் கொண்ட அற்புத கிராமம்!!

நீதிமன்ற ஆலோசகர் (Court Counsellor) சரிதா அந்தப் பெண்ணுடன் நான்கு சுற்று ஆலோசனை அமர்வுகளை நடத்தினார். தான் தனது தந்தையின் மீதான மரியாதையை இழந்துவிட்டதாகவும், தனது மகிழ்ச்சிக்காக அவர் விளையாட்டில் தோற்றிருக்க வேண்டும் என்றும் அந்த பெண் கூறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இருப்பினும், பல சுற்று ஆலோசனைகளுக்குப் பிறகு அந்தப் பெண் இப்போது சற்று தெளிவாகவும் நேர்மறை எண்ணங்களோடும் இருப்பதாகத் தெரிவதாக போபால் குடும்ப நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தலைமுறைக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன? விளையாட்டைக் கூட விளையாட்டாக எடுத்துக்கொள்ளாத நிலை ஏன்? அனைத்திலும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும், அது விளையாட்டாக இருந்தாலும் சரி, வேறு விஷயமாக இருந்தாலும் சரி. இதை மறுப்பதற்கில்லை. ஆனால், அப்படி ஒருவர் நடந்து கொள்ளவில்லை என்றால், அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம்? நம் நிலையையும் நமக்கு தவறாகத் தோன்றுவதையும் நம்மால் எடுத்துக் கூறி புரிய வைக்க முடியாதா? இப்படிப்பட்ட நிகழ்வுகள் மனித மனதின் சிறுபிள்ளைத்தனமா அல்லது பிறரது கவனத்தை ஈர்க்கும் முயற்சியா? கேள்விகளே தொடர்கின்றன……

ALSO READ: மனிதன் என்பவன் தெய்வமாகலாம்: கொரோனா காலத்து கொடை வள்ளல்கள்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News