PCOD இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்..? பிக்பாஸ் லாஸ்லியா கூறும் ஈசி டிப்ஸ் இதோ !

Losliya Mariyanesan Health, Fitness and Skin Care TIps: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா, ஒரு நேர்காணலில் தனது ஸ்கின் கேர் சீக்ரெட்ஸ்களை பகிர்ந்துள்ளார்.  

Written by - Yuvashree | Last Updated : Sep 28, 2023, 08:53 PM IST
  • பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், லாஸ்லியா.
  • இவர் சில மாதங்களுக்கு முன்னர் உடல் எடையை குறைத்தார்.
  • PCOD இருப்பவர்களுக்கு இவர் சில அறிவுரைகள் கூறியுள்ளார். அவை என்ன?
PCOD இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்..? பிக்பாஸ் லாஸ்லியா கூறும் ஈசி டிப்ஸ் இதோ ! title=

லாஸ்லியா: கடந்த 3 ஆண்டுகளாக தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக வலம் வருபவர் லாஸ்லியா. இலங்கை தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் வந்து பலர் மனதை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியை அடுத்து அவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது. லாஸ்லியா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது தனது ஸ்கின் கேர் சீக்ரெட்ஸ், டயட் சீக்ரெடஸ் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டார். 

ஆளே மாறிப்போன லாஸ்லியா..! 

நடிகை லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது அவரது முகத்தில் பல முகப்பருக்கள் இருக்கும். உடல் எடையும் சற்று அதிகரித்து காணப்பட்டார். ஆனால், சில நாட்களுக்கு முன்பு அவருடைய முகம் பருக்கள் அற்று, ஷைனாக ஆரம்பித்தது. மேக்-அப்பும் நன்றாகவே போட ஆரம்பித்தார். இதையடுத்து அவர் உடல் எடையையும் குறைத்தார். தற்போது கொடுத்துள்ள நேர்காணலில் அவர் தன் முகம் பருக்கள் இல்லாமல் மாறியது எப்படி என்றும் தான் ஏன் உடல் எடை குறைத்தேன் என்பது குறித்தும் பேசியுள்ளார். 

முகப்பருக்களை அகற்றியது எப்படி..? 

தனக்கு சில வருடங்களுக்கு முன்னால், பிக்பாஸ் நிகழச்சியின் போது முகத்தில் பருக்கள் இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். தனக்கு பிசிஓடி பிரச்சனை இருந்ததால் இந்த முகப்பருக்கள் பிரச்சனை இருந்ததாகவும், பின்னர் ஒரு தோல் நோய் மருத்துவரை சந்தித்ததாகவும் குறிப்பிட்டார். நம் சருமம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் முதலில் ஒரு தோல் நோய் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | சோகத்தில் மூழ்கிய லாஸ்லியா- இப்படி ஒரு கொடுமையா?

முகப்பருக்களுக்கு தனியாக ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டதாகவும், தனக்கு இருந்த பிசிஓடி பிரச்சனைக்காகவும் தனியாக ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஓட்ஸை எடுத்து தூள் செய்து வைத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு எலுமிச்சை மற்றும் தயிர் அல்ல சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு ஊற வைத்து கழுவ வேண்டும். இதை செய்தால் முகம் நன்றாக இருக்கும் என்கிறார் லாஸ்லியா. அப்படி இல்லையென்றால் தயிரை தவிர்த்து விட்டு தக்காளி சேர்த்து ஸ்கரப்பாக உபயோகிக்கலாம். 

PCOD குணமாகுமா..? 

லாஸ்லியா அந்த நேர்காணலில் தனக்கு PCOD இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இது முழுமையாக குணமாகுமா என்ற கேள்விக்கு தனக்கு தெரியாது என கூறிய அவர், இந்த பிரச்சனையில் தன்னை போல இருப்பவர்கள் என்ன செய்யலாம் என்று குறிப்பிட்டார். இதனால் அவதிப்படுவோர் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும், தனக்கு இந்த பிரச்சனை இருந்ததால்தான் உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்ததாகவும் குறிப்பிட்டார். அதிக உடல் எடை இருந்தாலும் இந்த பிரச்சனை வரும் என்று குறிப்பிட்ட அவர், அதனால்தான் ஜிம் செல்வதாகவும் குறிப்பிட்டார். ஜிம் செல்ல முடியாதவர்கள் தினமும் 45 நிமிடங்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

என்ன மாதிரி உடற்பயிற்சி செல்லாம்..? 

வீட்டில் மொட்டை மாடி இருந்தால் அங்கே 45 நிமிடங்கள் நன்றாக நடக்கலாம் என்று லாஸ்லியா குறிப்பிட்டுள்ளார். இதுவே நல்ல கார்டியோ வகை உடற்பயிற்சிதான் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தான், வாரத்தில் 6 நாட்கள் உடற்பயிற்சி செய்வதாகவும் லாஸ்லியா குறிப்பிட்டுள்ளார். 

சாப்பிட வேண்டிவை..

உடல் எடையை குறைக்க விரும்புவோர் சாப்பாட்டு விஷயத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறும் லாஸ்லியா நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்கிறார். தான், கீரை மற்றும் முட்டை (Egg White) எடுத்துக்கொள்வதாக கூறினார் லாஸ்லியா. மதியம் மில்லட்ஸ் எடுத்துக்கொள்வதாகவும் இரவு இரண்டு கோதுமை பிரட் மட்டும் எடுத்துக்கொள்வதாகவும் அவர் கூறினார். மாலை பொழுதுகளில் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | லாஸ்லியாவின் புதிய ஹேர் ஸ்டைல்... குவியும் லைக்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News