இந்தியன் ரயில்வே: மூத்த குடிமக்கள் தொடர்பாக இந்திய ரயில்வே புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டுதலின்படி, மூத்த குடிமக்களுக்கு முன்பை விட சிறந்த வசதிகள் கிடைக்கும். இந்தியன் ரயில்வே அவ்வப்போது பயணிகளின் வசதிக்காக பல வித புதிய வசதிகளை அளிக்கின்றது. அந்த வழியில் முதியவர்களின் நன்மைக்காக தற்போது வந்துள்ள வழிகாட்டுதல்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்திய இரயில்வே இயக்கும் ரயில்களின் உதவியுடன் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கின்றனர். ரயில்வேயும் அவர்களுக்கான சேவைகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இதேபோல், ஐஆர்சிடிசி -யும் (IRCTC)புதிய விதிகளை உருவாக்கி, பழைய விதிகளை எளிதாக்குகிறது. இருப்பினும், பல பயணிகள் தொடர்ந்து பல்வேறு புகார்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று, லோயர் பெர்த்களும் எளிதில் கிடைப்பதில்லை என மூத்த குடிமக்கள் பல நாட்களாக புகார் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் ஒரு ட்விட்டர் பயனர் இது குறித்து ட்வீட் செய்து, 'நான் நேற்று மாலை என் மாமாவுக்கு (PNR 2448407929) ஒரு டிக்கெட்டை முன்பதிவு செய்தேன். அவரது கால் துண்டிக்கப்பட்டு பாதிப்பு இருப்பதால், அவரால் மிடில் அல்லது லோயர் பர்த்தில் பயணிக்க முடியாது. இதன் காரணமாக நான் அவருக்கு லோயர் பர்த்துக்கான ஆப்ஷனை தேர்வு செய்தேன். ஆனால் அவருக்கு மேல் பர்த் தான் கிடைத்தது" என எழுதி இருந்தார்.
இந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, அந்த நபருக்கு ஏன் கீழ் பெர்த் கிடைக்கவில்லை என்பதை IRCTC விளக்கியது. ஐஆர்சிடிசி தனது ட்வீட்டில், 'சார், பிஎன்ஆர் எண். 2448407929 பொது ஒதுக்கீட்டின் கீழ் புக் செய்யப்பட்டுள்ளது. பொது ஒதுக்கீட்டில் குறைந்த பெர்த்களுக்கு நீங்கள் முன்னுரிமை கொடுக்கலாம் ஆனால் பெர்த்களின் ஒதுக்கீடு கிடைக்கும் தன்மைக்கு உட்பட்டது. இதன் பிறகு புக் செய்யும்போது, 'Reservation Choice Book only if lower berth is allotted' என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.' என கூறியுள்ளது.
மேலும் படிக்க | மதுரை ரயில் தீ விபத்தில் 9 பேர் பலி: ரயில் பெட்டியில் தீ பிடித்தால் என்ன செய்யலாம்?
மற்றொரு ட்வீட்டில், ஐஆர்சிடிசி, 'பொது ஒதுக்கீட்டில் குறைந்த பெர்த்களை ஒதுக்குவது முற்றிலும் கிடைக்கும் தன்மைக்கு உட்பட்டது. இதில் மனிதர்களின் கைமுறையான தலையீடு இல்லை என்பதை நினைவில் கொள்க. மேலும், தேவைப்படுவோருக்கு காலியாக உள்ள லோயர் பர்த்துகளை வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற பணியில் இருக்கும் TTE-ஐ நீங்கள் அணுகலாம்.' என மேலும் கூறியுள்ளது.
விதிகள் என்ன சொல்கின்றன?
விதிகளின்படி, ஸ்லீப்பர் வகுப்பில் ஒரு பெட்டிக்கு ஆறு கீழ் பெர்த்களும், ஏசி-3 டயர் கோச்களில் மூன்று கீழ் பெர்த்துகளும், தூங்கும் வகுப்பு (Sleeping Class) கொண்ட அனைத்து ரயில்களிலும் ஏசி-2 அடுக்குகளில் மூத்த குடிமக்களுக்கான ஒதுக்கீடும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ரயில் புறப்பட்ட பிறகு ஏதேனும் கீழ் பெர்த் காலியாக இருந்தால், மேல் அல்லது மிடில் பெர்த் பெற்ற மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள் அல்லது கர்ப்பிணிப் பெண்ணின் வேண்டுகோளின் பேரில் அதை அவர்களுக்கு டிடி அளிபதற்கான வசதியும் உள்ளது. ஆன்-போர்டு டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்கள் ரிசர்வேஷன் சார்ட்டில் தேவையான மாற்றங்களைச் செய்து இந்த பயணிகளுக்கு லோயர் பர்த்களை ஒதுக்கலாம்.
இந்தியன் ரயில்வே
இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க | பழைய ஓய்வூதியம் கிடைக்குமா கிடைக்காதா? மாநில அரசு அளித்த மிகப்பெரிய செய்தி!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ