நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டம் போடுவதும், சில சமயங்களில் அவசர வேலை காரணமாக திடீரென அதை மாற்றுவதும் அடிக்கடி பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டியுள்ளது. இந்த காரணத்திற்காக, ரத்து கட்டணமும் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் ரயில் புறப்படுவதற்கு எவ்வளவு நேரத்திற்கு முன்பு நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அதன்படி எவ்வளவு கட்டணம் கழிக்கப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ரயில்வேயில் டிக்கெட் ரத்து செய்வதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. முதல் - சார்ட் தயாரிக்கப்படுவதற்கு முன் மற்றும் இரண்டாவது - சார்ட் தயாரிக்கப்பட்ட பின். நீங்கள் எவ்வளவு பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள் என்பதை இது தீர்மானிக்கிறது.
48 மணி நேரத்திற்கு முன் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய எவ்வளவு கட்டணம்?
ஏசி முதல் வகுப்பு/எக்ஸிகியூட்டிவ் வகுப்பு - ரூ 240
ஏசி 2 டயர்/முதல் வகுப்பு - ரூ 200
ஏசி 3 டயர்/ஏசி சேர் கார்/ஏசி3 எகானமி- ரூ 180
ஸ்லீப்பர் கிளாஸ் - ரூ 120
செகண்ட் கிளாஸ் - ரூ 60.
மேலும் படிக்க | வட்டியை அள்ளித்தரும் வங்கிகள்.. மூத்த குடிமக்களுக்கு அடிச்சது செம ஜாக்பாட்
12 மணி நேரம் முதல் 48 மணி நேர இடைவெளியில் கேன்சல் செய்தால்:
ரயில் புறப்படுவதற்கு முன்பு 12 மணி நேரம் முதல் 48 மணி நேர இடைவெளியில் கேன்சல் செய்தால் டிக்கெட் தொகையில் 25 சதவீதப் பணம் பிடித்தம் செய்யப்படும். அதோடு ஜிஎஸ்டி சேர்த்து கழிக்கப்படும்.
12 முதல் 4 மணி நேரத்துக்கு முன்பு கேன்சல் செய்தால்:
அதேசமயம் நீங்கள் 12 முதல் 4 மணி நேரத்துக்கு முன்பு கேன்சல் செய்தால் 50 சதவீதப் பணம் பிடிக்கப்படும்.
சார்ட் தயாரிக்கப்பட்ட முன் - பின் கேன்ஸல் செய்தால்:
பயணிகளுக்கான சார்ட் தயாரிக்கப்பட்ட பின்னர் கேன்சல் செய்தால் பணம் எதுவும் கிடைக்காது. ஒருவேளை TDR பூர்த்தி செய்திருந்தால் ரீஃபண்ட் கிடைக்கும். கேன்சல் செய்யப்படாத டிக்கெட் எதற்கும் ரீஃபண்ட் கிடைக்காது.
டிக்கெட்டை ரத்து செய்தால், முழு பணத்தை திரும்ப பெறுவது எப்படி?
பயணிகள் ரயிலைத் தவறவிட்டாலோ அல்லது பயணிகளின் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு டிக்கெட்டை ரத்து செய்தாலோ முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம். டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டிய நபர்கள் ஐஆர்சிடிசி போர்ட்டலில் ஆன்லைனில் டிக்கெட் டெபாசிட் ரசீதை (TDR ) தாக்கல் செய்ய வேண்டும். அந்தந்த வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் செலுத்திய வாடிக்கையாளரின் வங்கியில் பணத்தைத் திரும்பப் பெறுதல் செயலாக்கப்படும். டிக்கெட்டுகள் 5 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தப்படும். கவுண்டரில் டிக்கெட் பெற்றவர்களும் ஆன்லைனில் டிடிஆர் தாக்கல் செய்ய வேண்டும். செயல்முறை முடிந்ததும், வாடிக்கையாளர்கள் முன்பதிவு கவுண்டரில் இருந்து சேகரிக்கலாம். எனினும் தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் பணம் திரும் கிடைக்காது..
TDR ஐ ஆன்லைனில் தாக்கல் செய்வது எப்படி?
IRCTC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
Menu-வை கிளிக் செய்து, Service-ஐ தேர்வு செய்யவும்.
History option விருப்பத்தைப் பார்வையிடவும், Transitions என்பதை தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து, இணையதளம் TDR ஐப் பதிவு செய்ய கடவுச்சொல் சரிபார்ப்பைக் கேட்கும்.
இறுதியாக, பயனர் TDR தாக்கல் செய்யலாம்.
மேலும் படிக்க | வங்கிக்கணக்கு இருக்கா? அப்போ உடனே ஆதார் கார்டில் இதை முடிச்சிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ