Indian Railways: நீங்களும் நீண்ட நாளாக தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால், ரயில்வேயில் சேர்ந்தும் நீங்கள் சம்பாதிக்கலாம். அதுவும், ஒவ்வொரு மாதமும் சுமார் 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கும் வாய்ப்பை ரயில்வே துறை வழங்குகிறது.
இந்த தொழிலை தொடங்க, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இணையதளத்திற்குச் சென்று முகவராக மாற நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் மாதந்தோறும் வீட்டில் இருந்தபடியே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். இந்தத் தொழிலை எப்படித் தொடங்குவது என்று இங்கு காணலாம்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் அதாவது IRCTC என்பது ரயில்வேயின் சேவையாகும். இதன் மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் இருந்து பல வசதிகள் உள்ளன. இப்போது ஐஆர்சிடிசியின் உதவியுடன் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம். இதற்காக நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. வீட்டில் அமர்ந்து சம்பாதிப்பீர்கள். இதற்கு நீங்கள் ஒரு டிக்கெட் முகவராக மாற வேண்டும்.
ரெயில்வே கவுன்டர்களில் குமாஸ்தாக்கள் எப்படி டிக்கெட் தருவார்களோ, அதேபோல் பயணிகளுக்கான டிக்கெட்டையும் நீங்கள் கொடுக்க வேண்டும். ஆன்லைனில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய, நீங்கள் IRCTC இணையதளத்திற்குச் சென்று முகவராக ஆக விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு முகவராகி, வீட்டில் உட்கார்ந்து பெரிய அளவில் பணம் சம்பாதிக்க முடியும். ஐஆர்சிடிசியின் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு முகவராக நீங்கள் ஆகிவிட்டால், தட்கல், ஆர்ஏசி உள்ளிட்ட அனைத்து வகையான ரயில் டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் ஏஜெண்டுகள் ஐஆர்சிடிசியிடம் இருந்து கணிசமான கமிஷனைப் பெறுவார்கள்.
நீங்கள் ஏஜென்டாக இருந்து, பயணிகளுக்கு ஏசி அல்லாத பெட்டிகளின் டிக்கெட்டை முன்பதிவு செய்தால், ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 20 கமிஷனாக பெறுவீர்கள். அதே, ஏசி வகுப்பு டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு ஒரு டிக்கெட்டுக்கு ரூ.40 கமிஷனாகப் பெறுவீர்கள். இது தவிர, டிக்கெட் விலையில் ஒரு சதவீதமும் முகவருக்கு வழங்கப்படுகிறது.
எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
IRCTC யின் முகவராக ஆக, சில கட்டணங்களையும் நீங்கள் செலுத்த வேண்டும். ஒரு வருடத்திற்கு ஏஜெண்ட் ஆக, ஐஆர்சிடிசி கட்டணம் ரூ.3999 செலுத்த வேண்டும். நீங்கள் இரண்டு வருடங்கள் ஏஜெண்ட் ஆக விரும்பினால் ரூ.6999 செலுத்த வேண்டும். இது தவிர, முகவராக, ஒரு மாதத்தில் 100 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஒரு டிக்கெட்டுக்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு மாதத்தில் 101 முதல் 300 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஒரு டிக்கெட்டுக்கு ரூ.8 கட்டணம் வசூலிக்கப்படும். ஒரு மாதத்தில் 300 டிக்கெட்டுகள் மேல் முன்பதிவு செய்ய ஒரு டிக்கெட்டுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ