யூனியன் வங்கி குறித்த முக்கிய அப்டேட்: நாட்டின் முன்னணி அரசு வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. அந்த வகையில் உங்கள் வங்கி கணக்கும் யூனியன் வங்கியில் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வங்கியால் செய்யப்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு, சேமிப்புக் கணக்கில் அதிகபட்சமாக 4 சதவீதம் வருமானம் வழங்கப்படுகிறது. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, சேமிப்புக் கணக்குகளுக்கான மாற்றப்பட்ட வட்டி விகிதங்கள் நவம்பர் 20, 2023 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.
எந்த நிபந்தனைகளின் கீழ் 4% வட்டி?
வங்கி 50 லட்சம் வரையிலான சேமிப்புக் கணக்கில் 2.75% வட்டி விகிதத்தையும், ரூ 50 லட்சம் முதல் ரூ 100 கோடி வரையிலான இருப்புத் தொகைக்கு 2.90% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. அதேபோல யூனியன் வங்கி (Union Bank Of India) ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி வரை சேமிப்பில் 3.10% வருமானம் தருகிறது. ரூ 500 கோடி முதல் ரூ 1000 கோடி வரை இருப்புத் தொகையில், வங்கி 3.40% வட்டி விகிதத்தை வழங்குகிறது. வங்கி 1000 கோடி ரூபாய்க்கு மேல் சேமிப்புக்கு 4.00% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
நிகர லாபத்தில் (Net Profit) மிகப்பெரிய ஏற்றம்:
செப்டம்பர் 30, 2023 இல் நிறைவடைந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நிகர லாபம் ஆண்டு அடிப்படையில் 90% அதிகரித்து ரூ.3,511.4 கோடியாக இருந்தது என்று யூனியன் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் யூனியன் வங்கி ரூ.1,848 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 23ஆம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது இது ரூ.8,305 கோடியாக இருந்தது. 24ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நிகர வட்டி வருமானம் 10% அதிகரித்து ரூ.9,126.1 கோடியாக இருந்தது.
மேலும் படிக்க | ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் முன் இந்த விதிகளை நியாபகம் வச்சுக்கோங்க!
சமீபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) 2 கோடி ரூபாய்க்கும் குறைவான FDகளுக்கான (Fixed Deposit) வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. ஐஓபி எஃப்டிகளுக்கான வட்டி விகிதத்தை ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக 30 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தியுள்ளது. ஆனால் வங்கி 444 நாள் FD இன் வட்டி விகிதத்தையும் 15 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. 7-29 நாட்களில் முதிர்ச்சியடையும் FDகளுக்கு 4 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது.
வட்டி விகிதங்கள் ஏன் அதிகரிக்கின்றன?
பணவீக்கத்தைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மே 2022 முதல் ஒரு வருடத்தில் ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India) ரெப்போ விகிதத்தை 2.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ரெப்போ வட்டி விகித உயர்வுக்குப் பிறகு, வங்கிகள் வீட்டுக் கடன், கார் கடன் மற்றும் தனிநபர் கடன் என அனைத்து வகையான கடன்களையும் விலை உயர்ந்ததாக மாற்ற வேண்டியிருந்தது. வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிப்பது சந்தையில் பணப்புழக்கத்தை குறைத்து தேவையை குறைக்கிறது. இது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் விளைவாக, வங்கிகள் சேமிப்புக் கணக்குகள், FDகள் மற்றும் பிற சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியை அதிகரிக்கின்றன.
மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு அடிச்சது லாட்டரி.. 5% டிஏ ஹைக், டபுள் சம்பளம் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ