பழைய ஓய்வூதியத் திட்டம்: நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த ஒரு அட்டகாசமான அப்டேட் வந்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்ய மத்திய அரசு தற்போது அவகாசம் அளித்துள்ளது. ஆனால் அதன் பலன் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
நவம்பர் 30 வரை அவகாசம்
பழைய ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு நவம்பர் 30, 2023 வரை அவகாசம் உள்ளது. ஊழியர்களுக்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் ஒரு சில பணியாளர்களுக்கு மட்டுமே அதன் பலன் கிடைக்கும். இந்த அறிவுறுத்தல்களின்படி விருப்பத்தைப் பயன்படுத்த தகுதியுடைய உறுப்பினர்கள் இதை பயன்படுத்தலாம் என்று அரசாங்கம் கூறியுள்ளது. அதே நேரத்தில், இந்த காலக்கெடுவிற்குள் பழைய ஓய்வூதிய விருப்பத்தை தேர்வு செய்யாதவர்கள், அவர்கள் தானாகவே தேசிய ஓய்வூதிய திட்டம், அதாவது என்பிஎஸ் -க்கு மாற்றப்படுவார்கள்.
DoPT தகவல் கொடுத்தது
இது குறித்து தகவல் அளித்து DOPT, "அறிவுறுத்தல்களின்படி, AIS (DCRB) விதிகள், 1958 இன் கீழ் கவரேஜ் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், இந்த உத்தரவு ஜனவரி 31, 2024 வரை தொடரும். அதே நேரத்தில், அத்தகைய நபர்களின் என்பிஎஸ் கணக்கு 31 மார்ச் 2024 க்குள் மூடப்படும். இதனுடன், சேவை உறுப்பினர்கள் AIS விதிகள், 1958ன் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இதனுடன், இவர்கள் ஜிபிஎப் உறுப்பினராக இருப்பது அவசியமாகும்." என்று கூறியுள்ளது.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பழைய ஓய்வூதியத்திற்கு மாற்றி கொள்ளலாம்!
பழைய ஓய்வூதியத்தை தேர்வு செய்ய யாருக்கு வாய்ப்பு உள்ளது
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் சில ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 2003, 2004 -இல் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 2003 -இல் இந்திய வனப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேர்க்கப்படுவார்கள் என டிஓபிடி தெரிவித்துள்ளது.
இது தவிர, AIS இல் சேருவதற்கு முன் மத்திய அரசின் சேவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள், CCA விதிகள், 1972 அல்லது ஏதேனும் ஒரு பொது விதியின் கீழ் உள்ளடக்கப்பட்ட அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வசதி உள்ளது.
அறிவிப்பு வெளியிடப்பட்டது
ஜூலை 13 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பின்படி, என்பிஎஸ் நடைமுறைப்படுத்தப்படும் தேதிக்கு முன்னர் ஆட்சேர்ப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டு, ஆனால் பின்னர் நியமனம் பெற்றதால், புதிய ஓய்வூதிய முறை அமல்படுத்தப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்கும். பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து அறிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் அது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் பதவி உயர்வு மற்றும் பயிற்சித் துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு ஜூலை 13 ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. ஜனவரி 1, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்து NPS-ன் கீழ் உள்ள AIS அதிகாரிகளுக்கு 1958 இன் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் வருவதற்கான விருப்பம் வழங்கப்படலாம் என்று அந்தக் கடிதம் கூறுகிறது. இதில் 2003 சிவில் சர்வீசஸ் தேர்வு, சிவில் சர்வீசஸ் தேர்வு 2004 மற்றும் இந்திய வனப் பணி 2003 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட AIS அதிகாரிகளும் அடங்குவர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர ஊழியர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே அளிக்கப்படும். 30 நவம்பர் 2023 வரை பழைய ஓய்வூதியப் பலன்களுக்கு விண்ணப்பிக்காத அதிகாரிகள் முன்பு போலவே என்பிஎஸ் -இன் பலனைப் பெறுவார்கள்.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு பம்பர் செய்தி! பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ